சிறைச்சாலகளில் 2030 க்குள் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக சிறைச்சாலைத் தலைமை இயக்குனர் கூறியிருக்கிறார்.
நமக்கு ஏமாற்றமே. கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தால் அது ஆரோக்கியமாக இருந்திருக்கும். தலைமை இயக்குனரின் எதிர்பார்ப்பு என்ன? இன்னும் குற்றங்கள் பெருகும் அதனால் இன்னும் அதிகமாக சிறைகள் தேவைப்படும். அதற்காக சிறைகள் இன்னும் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும்!
ஆக, எண்ணிக்கைக் குறையும் என்பதைவிட குற்றங்கள் பெருகும் என்று அவர் நினைக்கிறார். நம்மைப் பொறுத்தவரை அதாவது நாட்டின் சராசரி குடிமகன் என்று பார்க்கும்போது குற்றஞ்செய்வோரின் எண்ணிக்கைக் குறைவதே நாட்டுக்கு நல்லது என நாம் நினைக்கிறோம்.
ஆனால் தலைமை இயக்குனரோ நேர்மாறாகக் கருத்துரைக்கிறார். குற்றங்கள் பெருகினால் - பெருகிக் கொண்டே போனால் - நாட்டின் வருங்காலத்தைப் பாதிக்கவே செய்யும். குற்றச்செயல்கள் குறைந்த நாடு என்பதுதான் நாட்டிற்குப் பெருமை. குற்றமே இல்லாத நாடு சாத்தியம் இல்லை.
இன்றைய நிலையில் காவல்துறை முடிந்த அளவு குற்றங்களைக் குறைப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளில் செயல்படுகிறார்கள். குற்றங்கள் குறையும் என்கிற நம்பிக்கை நமக்குண்டு. மலேசிய சமுதாயம் ஒரு குற்றமுள்ள சமுதாயமாகவே நீடிக்கும் என்று சொல்லுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை.
மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலே பல பிரச்சனைகள் தீரும். வேலை இல்லாத சமுதாயத்தில் குற்றச் செயல்களுக்கு அதிக வாய்ப்புண்டு.
வருங்காலங்களில் குற்றங்கள் கூடும் என்பதைவிட குற்றங்கள் குறையும் சாத்தியம் உண்டு என நம்புவோம்.
No comments:
Post a Comment