தீயணைப்புத் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக "வணக்கம் மலேசியா" செய்தி வெளியிட்டிருந்தது.
வேலை தேடும் இளைஞர்கள்களுக்காக இந்தச் செய்தியை வெளியிடுகிறோம். சீருடை அணிந்து வேலை செய்யும் துறைகளை நமது இளைஞர்களில் பலர் விரும்பவே செய்கின்றனர்.
சுமார் 1500 இடங்கள் காலி இருப்பதாகக் கூறப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் முயற்சிகளைச் செய்யலாம். வழக்கம் போல "நமக்கெல்லாம் எங்கே கொடுக்கப் போகிறார்கள்" என்கிற பல்லவியை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்க வேண்டாம். அள்ளி கொடுக்கவில்லை என்றாலும் கிள்ளியாவது கொடுக்கத்தான் செய்வார்கள். வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. தேவை எல்லாம் நமது முயற்சி மட்டும் தான்.
கணினியை நாடுங்கள். சம்பந்தப்பட்ட துறையைத் தேடுங்கள். எல்லா விபரங்களும் அங்கே கிடைக்கும். யாரோ ஓடிவந்து உதவுவார்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்களே தான் உதவிக்கொள்ள வேண்டும்.
உங்களின் முயற்சி செய்யாமல் எதுவும் அசையப்போவதில்லை. முயற்சி உங்களுடையது. நிச்சயம் பலன் கிட்டும். வாழ்த்துகள்!
No comments:
Post a Comment