சமீப காலத்தில் மிகப் பெரிய அளவில் மலேசியர்களால் பேசப்படுகின்ற ஒரு கடவுள் என்றால் அது சிவன் என்கிற நாமம் தான். அதற்குக் காரணமானவர் ஸம்ரி வினோத் காளிமுத்து!
அவர் கொடுத்த விளம்பரம் மலேசியரிடையே சிவா என்னும் பெயர் பிரபலமடைந்து விட்டது! அந்த நேரம் பார்த்து சிவா - சங்கரி என்னும் பெயர் கொண்ட நமது விளையாட்டு வீரர் ஸ்குவாஷ் விளையாட்டில் உலகில் முதன்மை விளையாட்டாளராகத் தேறினார்!
உண்மையைச் சொன்னால் இந்த ஆண்டு சிவபெருமானின் ஆண்டு. இந்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு முடிந்தவரை சிவா என்கிற பெயரை வையுங்கள். இன்றைய நிலையில் ஆன்மீகத்தலைவர் என்றால் எல்லாரும் அறிந்த சுகி சிவம் அவர்கள் பெயரும் சிவம் என்று தான் வருகிறது.
முடிந்தவரை சிவபெருமானின் பெயரைப் பிரபலப்படுத்துங்கள். வலைதளங்களில் கொஞ்சம் முயற்சி செய்தால் நிறையவே பெயர்கள் உண்டு. ஒர் சில: சிவக்குமார், சிவநேசன், சிவபாக்கியம், சிவபக்தன்- இப்படி பலபெயர்கள் உண்டு. உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.
மௌனமாகக் காரியங்களைச் செயல்படுத்துங்கள். "நீ எதையோ சொல்! நாங்கள் செய்வதைச் செய்கிறோம்!" நமது எதிர்ப்பை அரசாங்கத்திடம் கொண்டு செல்கிறோம். அது தொடரட்டும். அதே சமயத்தில் எங்கள் சிவபெருமானின் பெருமையை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அதில் பெயர் வைப்பதும் ஒரு பகுதி.
அமைதியாகவே நமது காரியங்களை நாம் செய்வோம். வெகு விரைவில் இதற்கான ஒரு முற்றுப்புள்ளி வரும். காரணம் மக்களின் ஒற்றுமைக் குலைவதை எந்த அரசாங்கமும் விரும்பாது. ஒரு நாட்டில் பாதிப்பு வருகிறதென்றால் அனைவருக்கும் தான் அந்த பாதிப்பு வரும்.
சிவா என்கிற பெயரை வையுங்கள். புரட்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment