வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளிவிபரத்துறையின் தலைவர் கூறியிருக்கிறார். வரவேற்பது நமது கடமை.
இன்றை நிலையில் மலேசியர்களில் பலர் சிங்கப்பூரை நோக்கித்தான் படையெடுக்கின்றனர். வேறு வழியில்லை. வயிறு என்று ஒன்று இருக்கிறதே!
நமது குடும்பப்பெண்கள் பெரும்பாலோர் இங்கே தான் வேலை செய்து தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். பிள்ளைகளின் கல்வி ஒன்றே போதும். அவர்கள் வேறு எங்கேயும் போக வழியில்லை.
ஆனாலும் சமீபகாலமாக அதுவும் உடைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. குடும்பம் வாழ வேண்டுமே என்பதற்காக வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்ய வேண்டிய சூழல். அதனையும் நம் பெண்கள் செய்கின்றனர். வேறு வழியில்லாமல் அதனையும் செய்கின்றனர்.
நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. அதற்கானப் பதில் புள்ளியல் துறையிடம் உண்டு. இல்லாததை நாம் கேட்கவில்லை. இருப்பதை நாம் கேட்கிறோம். எத்தனை பேர் வேலை இழந்திருக்கின்றனர் என்பது புள்ளியல் துறைக்குத் தெரியும். அதே சமயத்தில் அதனை இன ரீதியாக சோல்ல முடியுமா? இன விகிதாச்சாரபடி மலாயர், சீனர், இந்தியர் - இப்படிப் பிரித்துச் சொன்னால் அதனை நிவர்த்தி செய்ய முடியுமா எனப் பார்க்கலாம். எங்களது தலைவர்கள் அதனைச் செய்வார்கள். மூவினங்களில் இந்தியர்களே மூன்றாவது பெரிய இனமாக இருக்கின்றனர். ஆனால் வேலை என்று வரும்போது அவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆமாம் அவர்கள் வேலை இல்லாதவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர். நடப்பில் அப்படித்தான் தெரிகிறது!
நம்மைப் பொறுத்தவரை இந்தியர்களுக்குத்தான் முதலிடம். சிறுபான்மையினர் வேலை இல்லாமையில் முதலிடம் என்றால் எங்கோ சரியாக இல்லை என்று பொருள். அது அரசாங்கத்தின் கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். அல்லது நமது தலைவர்களின் கையாலாகத்தனம்.
வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைகிறது என்பது நல்ல செய்தி. அதே சமயத்தில் இந்தியர்களின் வேலை இல்லாதோர் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரிந்தால் அதுவும் நல்லது.
No comments:
Post a Comment