பாகான் டத்தோ, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிர்வாகத்திற்கும் அங்குள்ள நகராண்மைக் கழகத்தின் திமிரான நடவடிக்கைகளும் நம்மை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. நகராண்மைக் கழகம் 'நாங்கள் இன்னும் பாரிசான் ஆட்சியின் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்கிறோம்' என்பதாகவே நடந்துகொள்கிறது!
இதில் அதிசயப்படஒன்றுமில்லை. காரணம் அரசாங்க ஊழியர்கள் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. கடந்த ஐம்பது அறுபது ஆண்டு காலமாக அவர்கள் அப்படித்தான் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மாற்றுவது என்பது கொஞ்சம் கடினம் தான். அப்போது ஆட்சியில் இந்தியர்களைப் பிரதிநிதித்த சோத்துமாடுகள் சோத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு இன்னும் தலைக்கனம் அதிகமாகி விட்டது! அந்தத் தலைக்கனத்தை குறைப்பது இன்னும் சிரமமாகவே இருக்கிறது என்பது உண்மை.
ஆனாலும் அவர்கள் அப்படித் தொடர்வதை நிறுத்த வேண்டும். நிறுத்தும்படி செய்ய வேண்டும். அவர்களின் தலைக்கனத்தை குறைக்க வேண்டும்.
இப்போது இருக்கின்ற இந்தியர்களைப் பிரதிநிதிப்பவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களின் தொகுதியைப் பிரதிநிதிப்பவர்கள் - யாராக இருந்தாலும் சரி பிரச்சனைகளைக் கொண்டு செல்ல வேண்டும். இந்தியப் பிரதிநிதிகள் ஓடி ஒளிவதை இன்னும் இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அன்று ம.இ.கா. காரன் ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான். இப்போது ஆட்சியில் உள்ளவனும் அதையே செய்தால் நாம் என்ன எருமைகள் என்று நினைக்கிறார்களா?
இது போன்ற செய்திகள் வரும் போது ஆட்சியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள் ஓடி வந்து என்ன நடக்கிறது என்று அறிய வேண்டும். ஒரு வேளை அங்குள்ள பிரச்சனைகளை அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. அந்தத் தவறுகள் நம்முடைய மக்களின் தவறுகளாகத்தான் இருக்க முடியும்!
என்ன செய்யலாம்? ஒற்றுமை இல்லாத சமூகம். எதைச் சொன்னாலும் தலை ஆட்டம் சமூகம். பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் பேசும் சமூகம். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசும் சமூகம். குடிகாரச் சமூகம்.
இந்தச் சமூகம் இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம். பணம் இருந்தால் இன்னும் அதிகமாக ஏமாற்றலாம். அதற்காக இந்தச் சமூகத்தை ஒவ்வொருவனும் ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
திமிர் பிடித்தவர்களை அடக்க வேண்டும். இப்போது நமக்கு அரசியல் பலம் உள்ளது. அதனை நாம் காட்ட வேண்டும். இனி மேலும் இந்தக் கதை தொடரக் கூடாது. என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்!
No comments:
Post a Comment