"நான் மலேசியன்" என்னும் பெருமிதம் நமக்கு வர வேண்டும் என்று கூறுகிறார் முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ரபிடா அஸீஸ்.
நல்லதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறார் ரபிடா. வர வேற்கிறோம். அவர் பெருமிதம் அடைய வழியுண்டு. அவருடன் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் பெருமைப்பட வழியுண்டு. மேலும் மேலாதிக்க சமுதாயத்தினர் பெருமிதம் கொள்ள வழியுண்டு. சீன சமுதாயம் பெருமிதம் கொள்ள வழியுண்டு. நாட்டின் பொருளாதாரமே அவர்கள் கையில். அதனால் அவர்களும் பெருமிதம் கொள்ள வழியுண்டு.
ஆனால் கடைநிலையில் இருக்கின்ற இந்திய சமுதாயம் எந்த வகையில் "நான் மலேசியன்" என்று பெருமிதம் அடையும்?
குடியுரிமை இல்லை, நாடற்றவர்கள் கல்வியில் புறக்கணிப்பு, அரசாங்க வேலைகளில் புறக்கணிப்பு, தனியார் நிறுவனங்களில் புறக்கணிப்பு, குண்டர் கும்பளின் வளர்ச்சி - இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நாங்கள் "நான் மலேசியன்" என்று சொல்லிப் பெருமைப்பட என்ன இருக்கிறது!
நாங்கள் நல்லது செய்தால் அது மறைக்கப்படுகிறது. நாங்கள் சாதனைகள் செய்தால் அது மறைக்கப்படுகிறது. விளையாட்டுத் துறைகளில் எங்கள் பிள்ளைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். எங்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. நாட்டுக்காக சாதனைகள் செய்தாலும் எங்கள் முகம் தெரிவதில்லை.
எல்லா வகையிலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். இந்த நாட்டை உருவாக்கியவர்கள் நாங்கள். அதற்கான மதிப்போ, மரியாதையோ அரசு தரப்பிலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. நேற்று வந்த இந்தோனேசியர், நேற்று வந்த வங்காள தேசிகள், நேற்று வந்த பாக்கிஸ்தானியர் இவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற முன்னுரிமை எங்களுக்கு மறுக்கப்படுகின்றன.
நாங்கள் சமய ரீதியாக அடக்கப்படுகின்றோம். எங்களது கோவில்கள் எந்த அறிவுப்பும் இல்லாமல் உடைக்கப்படுகின்றன. உடைக்கப்படும் கோவில்களுக்கு மாற்றிடம் கொடுக்கப்படுவதில்லை. ஒரு சிறிய பிரச்சனையை வருடக் கணக்கில் அதிகாரிகளால் இழுத்தடிக்கப் படுகிறது.
இப்படித் தான் இந்நாட்டில் ஒவ்வொரு தமிழனும் பிரச்சனைகளை எதிர் நோக்குகிறான். அவைகளைத் தீர்க்க வேண்டும் என முன்னாள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நால் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
நாங்கள் வளர்ந்தால் தான் "நான் மலேசியன்!" என்கிற உணர்வு வரும்.
நான் மலேசியன்!
No comments:
Post a Comment