கேள்வி
பா.ஜ.க. வின் தோல்வியை "வெற்றிகரமான தோல்வி" என்று தமிழிசை பெருமைப்படுகிறாரே!
பதில்
நாம் சராசரியாக பயன்படுத்தும் வார்த்தை "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!" என்பதைத்தான் இப்படி வேறு மாதிரியாகச் சொல்லுகிறார் தமிழிசை!
அதனாலென்ன நாமும் அவருடன் சேர்ந்து பெருமைப்படுவோம்!
தோல்வி என்று வந்து விட்டாலே - அது வெற்றிகரமான தோல்வியாக இருந்தாலும்" மதிப்பும் மரியாதையும் போய்விட்டது என்று அர்த்தம்! ஆனால் அரசியல்வாதிகள் மதிப்பு, மரியாதை, மானம், அவமானம் - இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்! அதெல்லாம் அவர்களுக்கு தூசு! அவர்களுக்குப் பதவியைத் தவிர வேறு எதுவும் தேவை இல்லை! பதவி இருந்தால் தான் பணம் வரும், கமிஷன் வரும்! அதற்காகத் தானே அவர்கள் இலஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள்!
இந்த "வெற்றிகரமான தோல்வி!" என்பதன் பொருள், இனி மேல் பதவி இல்லை! பதவி இல்லை என்றால் எவனும் மதிக்க மாட்டான்! யாரையும் அதிகாரம் பண்ண முடியாது! நேற்று "சார்!" என்று விளிச்சவன் இனி பெயரைச் சொல்லிக் கூட கூப்பிடலாம்! எதற்கும் தயாராக இருக்க வேண்டும்! இதுவரை மற்றவர்களை அடிக்க காவல்துறையைப் பயன்படுத்தியவன் இனி காவல்துறையைத் தன் மேலேயே ஏவி விடுவான்! இவைகள் எல்லாம் பதவி இல்லை என்றால் வருகின்ற சோகங்கள்!
தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் எச்.ராஜாவின் அக்ராகரத் திமிர் குறைய வாய்ப்பிருக்கிறது. தமிழிசை அடக்கமாக வாசிப்பார். எஸ்.வி. சேகர் இனித் தனியாகப் பயணிக்க வாய்ப்பு இருக்கிறது! தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுடன் இணைய எந்தக் கட்சியும் முன் வராது! ஒரு வேளை தமிழக அமைச்சர்களுக்கு இனி மேல் கொஞ்சம் ரோஷம் வரலாம்! பா.ஜ.கா. வோடு மோதலாம்!
ஆக, வெற்றிகரமான தோல்வி என்பதில் பல அர்த்தங்கள் உண்டு. இனி அதிகாரம் இல்லை என்பது தான் அதன் சுருக்கம். தமிழிசையும் நாவை அடக்கக் கற்றுக் கொள்ளுவார்.
இது பா.ஜ.கா. விற்கு வெற்றிகரமான தோல்வி தான்! நல்லது செய்தால் நல்லது நடக்கும்! மாற்றம் செய்கிறேன் என்று நாற்றத்தைக் கொண்டு வந்தால் நாற்றம் தான் நடக்கும்!
No comments:
Post a Comment