பிரதமர் துறை துணை அமைச்சர் பொ.வேதமூர்த்தி பதவி விலகவேண்டும்; அந்தப் பதவியை வேறொரு இந்தியருக்குக் கொடுக்க வேண்டும் என்பதாக பாஸ் கட்சி அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறது.
இது ஒரு சரியான பரிந்துரையா அல்லது இது சரியா தவறா என்று யார் தீர்மானிப்பது? இந்தியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! நம்மைப் பொறுத்தவரை இது தவறான பரிந்துரை என்று நாம் அடித்துச் சொல்லலாம்.
இனவாத கட்சியான பாஸ் ஏன் இப்படி ஒரு பரிந்துரையைச் செய்கிறது? இந்தியர்கள் சார்பில் யார் பிரதிநிதிக்க வேண்டும் என்பது பற்றி பாஸ் கட்சிக்கு என்ன கவலை?
பொ.வேதமூர்த்தி இந்தப் பதவிக்கு சரியான தேர்வு என்பது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் சரியான, பொறுப்பான ஒருவரை இந்தியர்களின் நலனைக் கவனிக்க தேர்ந்தெடுத்தவர் எல்லாத் தகுதியும் உள்ளவர். அவர் தகுதி இல்லாதவராக இருந்தால் பிரதமர் அவரைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார், இத பாஸ் கட்சி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
வெதமூர்த்தியே இந்தியரின் நலனுக்கான சரியான தேர்வு. அதில் நமக்கு எந்த ஐயமுமில்லை. பாஸ் கட்சியின் தலையீடு தேவை இல்லாதது. சீபீல்ட் ஆலய விவகாரத்தில் வேதா சரியான நடைமுறைகளைக் கையாண்டார். ஒரு வேளை பாஸ் எதிர்பார்ப்பது போல வேதாவிடம் "அற்புத விளக்கு" இல்லாமல் இருக்க்லாம்! அவர் எந்த நேரத்திலும் தனது கடமையிலிருந்து தவறவில்லை!
பாஸ் சொல்லுகிறதே என்று ஓர் அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்குவது தவறான உதாரணமாகி விடும். இன்று வேதா என்றால் நாளை இன்னொருவரைக் கைகாட்டுவார்கள்! அவர்கள் மட்டும் அல்ல. மலாய் அரசு சாரா அமைப்புக்களும் அதே வேலைகளைத்தான் செய்வார்கள். காரணம் இந்தியர்கள் என்றால் பாதையில் நடந்து செல்லும் ஒரு மலாய்க்காரர் கூட கவிழ்த்து விடலாம் என்னும் தவறான எண்ணம் அவர்களிடம் உண்டு. அதனை மாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் புதிய மலேசியாவின் உருவாக்கம்! மீண்டும் மீண்டும் இந்தியர்களைச் சீண்டுவதும் இழித்துரைத்துப் பேசுவதும் ஒரு சிலருக்கு, ஒரு சில கட்சிகளுக்குப் பொழுது போக்காகி விட்டது!
மீண்டும் சொல்லுகிறோம். வேதாவுக்கு மாற்று இல்லை! நமக்கு சாமிவேலுக்கள் வேண்டாம்! வேதாக்கள் மட்டுமே தேவை!
வேதாவிற்குப் பதிலாக...? ............வேதாவே தான்...!
No comments:
Post a Comment