கேள்வி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக செய்கின்ற செய்ல்களைப் பாராட்டலாமா?
பதில்
பாராட்டலாம்! அதுவும் நல்லது செய்தால் இன்னும் பாராட்டலாம்! ஆனால் நமக்கு அங்குள்ள அரசியல் பிடிபடவில்லை.
கடைசியாக நாம் தெரிந்து கொண்டது: சந்திரபாபு நாயுடு கட்டிய கட்டடத்தை இடித்து தள்ளிவிட்டாராம்! ஆனாலும் அவர் விதாண்டாவாதம் செய்யவில்லை. அந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடமாம்.
தமிழ் நாட்டில் என்ன நடந்தது பாருங்கள். அம்மையார் ஒரு நூல் நிலையத்தயே உடைத்து மருத்துவமனையாக மாற்றினார். இது போன்ற அடாவடித்தனத்தை நாம் விரும்பவில்லை. அது மக்களின் பணம். அதற்கு மரியாதை வேண்டும்.
நமது ரெட்டி போலவே நாயடுவும் தான் ஆட்சிக்கு வந்த போது மிகவும் ஆரவாரமாக செயல் பட்டார். அப்போது அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். கணினியைப் பயன்படுத்தும் முதலமைச்சர் என்றார்கள். பிறகு எந்த சத்தத்தையும் காணோம்!
மக்களுக்கு இந்த "ஷோ" காட்டுவதெல்லாம் நமக்கு வேண்டாம். உங்களால் இந்த ஆந்திர மாநில மக்களுக்கு என்ன பயன் என்பது தான் முக்கியம். அங்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க ரெட்டி வைத்திருக்கும் திட்டங்கள் என்ன! ஆந்திராவிலும் ஏழைகள் நிறையவே இருக்கிறார்கள். ஏழ்மையைப் போக்க என்ன செய்யப் போகிறார்? நிறைய கேள்விகள் உண்டு.
இப்போது நாம் பார்க்கும் அரசியல் எல்லம் அரசியல் எதிரிகளை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. எல்லா மாநிலங்களிலும் இதே நிலை தான். தாங்கள் பதவியில் இருக்கும் காலம் வரை எதிரிகளை ஒழித்துக் கட்டுவதையே நோக்கமாக இருக்கும் இவர்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதைத்தான் செய்தார்கள்!
ஜெகன் ரெட்டி ஒரு நல்ல முதலமைச்சாராக நடந்து கொள்ள வேண்டும். அதைத் தான் ஆந்திர மக்களும் விரும்புகிறார்கள், நாமும் விரும்புகிறோம். இந்தியா ஓர் ஏழை நாடு என்று சொல்லுவதே கேவலம். அதனைப் பணக்கார மாநிலமாக, பணக்கார நாடாக மாற்றுவது அரசியல்வாதிகளின் கையில் தான் இருக்கிறது.
ஜெகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தை வளமாக மாநிலமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment