இப்போது, நம்மிடையே உள்ள மனிதர்,களிடம், எதற்கெல்லாம் பெருமை படுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது!
இதனைப் பெருமை என்று சொல்லுவதா அல்லது தன்னையும் அவமானத்திறகுள்ளாக்கி பிறரையும் அவமானப்படுத்துவது என்பது அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டதா என்பது நமக்கும் விளங்கவில்லை!
இப்படி எல்லாம் சொல்லுவதற்குத் தைரியம் வேண்டும். ஒருவரை, அதுவும் நல்லவர் என்று பெயர் எடுத்த ஒருவரை, அவரைப் பதவியிலிருந்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக என்ன என்னவெல்லாம் செய்யலாம், செய்ய வேண்டும் என்று மலேசியர்களுக்குப் பாடம் நடத்துகிறார்களோ, நமது அரசியல்வாதிகள்!
ஆபாச காணொளிகள் என்பது நம் நாட்டில் வளர்ந்து வருகின்ற ஒரு துறையோ என்று சொல்லத் தோன்றுகிறது! உருப்படாதவர்கள் என்று யாரை நாம் நினைக்கிறோமோ அவர்கள் தான் இது போன்ற ஆபாச காணொளிகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்!
இவர்களின் நோக்கம் தான் என்ன? பணம் சம்பாதிப்பது தான் என்று தெரிகிறது! இல்லாவிட்டால் ஒருவரே முன் வந்து "நான் தான் அவன்!" என்று சொல்லத் துணிவாரோ! இப்படியெல்லாம் சொல்லும் போது அவ்ருக்கே தெரியும் அவ்ர் செய்கின்ற வேலைக்கு ஆபத்து வரும் என்று! ஆபத்தோடு சிறை வாசமும் கிடைக்கலாம்! அவரின் குடும்பத்திற்கும் அவமானம் சேர்ந்து வரும். ஆனாலும் அப்படி அவரால் சொல்ல முடிகிறது என்றால் அவரைப் பின்னணியிலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்பது நமக்குப் புரியாமலா போகும்!
மலேசிய அரசியலில் இப்படி ஆபாச காணொளிகளை அதிகம் கொண்டு வந்தவர்கள் என்றால் முன்னாள் ஆளுங்கட்சியினருக்கு இதில் நிறைய பங்கு உண்டு. இப்போதும் இது போன்ற விரும்பத்தக்காத நடவடிக்கைகள் தொடர்கிறது என்றால் அவர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என நம்பலாம்!
எது எப்படி இருப்பினும் இது போன்ற ஆபாசங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நம்மில் எல்லாருக்கும் ஒருமித்த கருத்துண்டு. அரசியலில் பேரும் புகழும் உடையவர்களை இப்படி எல்லாம் அசிங்கப்படுத்துவது ஒரு கலாச்சாரமாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது.
இப்போது "நான் தான் அவன்!" என்று சொன்னவனின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. நல்ல குடும்பங்களிலிருந்து மிப்படியெல்லாம் மனிதர்கள் வர மாட்டார்கள். செய்துவிட்டு, ஏதோ ஒரு தவறான காரியத்தைச் செய்துவிட்டு, அதற்குப் பெருமைப்பட மாட்டார்கள்.
இப்படி பெருமை படுபவன் மனிதனல்ல!
No comments:
Post a Comment