அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
பிரதமர் மகாதிர் பதிவியிலிருந்து விலகும் போது பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பேன் என்பதாகத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
ஆக, பிரதமரைப் பொறுத்தவரை அத்தோடு அந்தப் பிரச்சனை முடிந்தது. ஆனாலும் ஒரு சில அரசியல்வாதிகள் அது முடிந்து விட்ட பிரச்சனையாக நினைக்கவில்லை. தொடர்ந்தாற் போல யார் அடுத்த பிரதமர் என்று கேள்வி எழுப்பவதும் குழ்பத்தை ஏற்படுத்துவதுமாக இருக்கின்றனர்.
இந்த வரிசையில் கடைசியாக குழப்பத்தை ஏற்படுத்துபவர் முன்னாள் அமைச்சரும், இந்நாள் பிரிபூமி கட்சியின் செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ரைஸ் யாத்திம்.
இவர் ஒரு படி மேலே போய் "பிரதமர் பதவி அன்வாருக்குக் கொடுக்கப்படும் என்று எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை!" என்பதாகக் கூறியிருக்கிறார்!
இது தேவையற்ற ஒரு பேச்சு. அவர் வழக்கறிஞர் என்பதற்காக அனைத்தும் எழுத்துப் பூர்வமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். உண்மை தான். ஆனால் பக்காத்தான் அரசங்கம் எந்த நிலையில் பதவிக்கு வந்தது என்பதை ரைஸ் யாத்திம் கொஞசம் யோசித்துப் பார்க்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெறும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை. அது ஒரு எதிர்பாராத வெற்றி. அது "எதிர்பாராதது" என்பதால் தான் எந்த ஒப்பந்ததும் தேவைப்பட வில்லை. அந்த நேரத்தில் தான் அந்தக் கணத்திலேயே அனைத்துக் கட்சிகளின் முன்னிலையில் "முதலில் டாக்டர் மகாதிர் அதன் பின்னர் அன்வார் இப்ராகிம்" என்று வாய்மொழியான ஒப்பந்தம் செய்யப்பட்டது. எல்லாம் வாய்மொழியான ஒப்பந்தம் தான். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டனர். அவ்வளவு தான். அதனை இப்போது ஊதி ஊதி பெரிதாக்கி அன்வார் தகுதியான தலைவர் இல்லை என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
அன்வாரை எதிர்க்கின்ற ஒரு குழு நீண்ட காலமாக அரசியலில் இயங்கி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்களில் பலர் பிரிபூமி கட்சியில் இணைந்து விட்டனர். இப்போது இங்கிருந்து தான் அடிக்கடி அடுத்த பிரதமர் அன்வார் இல்லை என்பதாகக் கூறி வருகின்றனர்.
ரைஸ் யாத்திம் பேசும் தோரணையைப் பார்க்கின்ற போது அது ஒரு அதிகாரப்பூர்வமான பேச்சாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. ஆனாலும் ஒப்பந்தம் ஒன்றுமில்லை என்று சொல்லும் போது இந்த வயதிலும் டாக்டர் மகாதிர் தான் சொன்ன சொல்லை மதிக்க மாட்டார் என்று ரைஸ் யாத்திம் சொல்ல வருவது போல் தோன்றுகிறது. டாக்டர் மகாதிரின் வயதுக்கு அவர் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். அது தான் அவருக்கு அழகு. அவர் மற்றவர்களைப் பேச விடுவதே தவறு. ஆனால் அது தான் நடக்கிறது.
டாக்டர் மகாதிர் எதற்குஒப்புக் கொண்டாரோ அதன்படி நடக்க வேண்டும் என்பதே நமது ஆசை!
No comments:
Post a Comment