கேள்வி
நடிகர் சூரியா பேனர்கள் வைப்பதற்குப் பதிலாக கல்விக்கு உதவுங்கள் என்று குரல் கொடுத்திருக்கிறாரே!
பதில்
நடிகர் சூரியா பாராட்டப்பட வேண்டியவர். ஏழைகளில் கல்விக்காக குரல் கொடுக்கும் ஒரே நடிகர் அவர் தான்.
இந்த பேனர் விஷயத்தில் பல நடிகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய் யாரும் இனி விளம்பர பேனர் வைக்க வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது அவரது அடுத்த படமான பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த பேனரும் வைக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவைப் போட்டிருக்கிறார். அதன் பின்னர் போட்டாலும் போடலாம்!
அதே போல மதுரை அஜித் ரசிகர் மன்றத்தினரும் இனி எந்த நிகழ்விலும் பேனர்களை வைப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் 'தலை' யின் அனுமதி இல்லாமலேயே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். அவர் செய்த முடிவு சரியானது. ஆனால் அந்த உறுதி மொழி மதுரைக்கு மட்டும் தான்! ஆனல் 'தல' எந்தக் கருத்தையும் இதுவரை சொல்லவில்லை.
நடிகர் சூரியா இனி தனது படங்களுக்கு எந்த பேனரும் தேவை இல்லை என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பேனர்களுக்குச் செய்கின்ற செலவை பள்ளிகளுக்குச் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மற்ற நடிகர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. யரோ வீட்டு பிள்ளைகள் செத்தால் நமக்கு என்ன என்று கூட நினைக்கலாம். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சாகா வரம் பெற்றவர்களாக இருக்கலாம்!
நாமும் சூரியாவோடு சேர்ந்து இதைத் தான் சொல்ல விரும்புகிறோம். அது சினிமா நடிகர்களோ, அரசியல்வாதிகளோ இப்படியெல்லாம் பதாகைகளோ, பேனர்களோ, போட்டு சாலைகளை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தை கல்விக்காக செலவு செய்யுங்கள் என்பது தான்.
பதாகைகள் குப்பைத் தொட்டிக்கான கழிவு பொருட்கள்! கல்வி குப்பையல்ல, கோபுரம்!
No comments:
Post a Comment