பெண் ஒருவர், அவரது பெயர் சூர்ய மனிஷ், தனது ஸ்கூட்டரில் இடது புறமாகப் போய்க் கொண்டிருக்கிறார். தீடீரென வலது புறமாக வர வேண்டிய பேருந்து ஒன்று அவருக்கு நேர் எதிராக இடது புறமாக வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒதுங்கவதற்கு இடமில்லாமல் பள்ளி பேருந்து ஒன்றிலிருந்து பள்ளி மாணவர்கள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன செய்வது என்று அறியாமல் அப்படியே தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டார். ஆடவில்லை! அசையவில்லை! பயத்தால் உறைந்து போய் விட்டார்.
எதிரே வந்த பேரூந்து ஓட்டுநர் நிதானமாக பேருந்தை அந்தப் பெண் மேல் மோதாமல் பேரூந்தை வலது பக்கமாக செலுத்தி எந்த சேதமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
அந்தப் பெண் பயந்தாரோ, இல்லையோ ஆனால் அவர், நம் பார்வைக்கு, வீரப் பெண்மணியாகவே தோன்றுகிறார்! அவர் அந்த ஸ்கூட்டரில் உடகார்ந்திருக்கிற தோரணை அவரை ஒரு வீரப் பெண்மணியாகவே நமக்குக் காட்டுகிறது.
எது எப்படி இருப்பினும் ஒரு பேருந்தை எதிர்த்து நிற்பது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது அவரது வீரத்தையே காட்டுகிறது!
பேரூந்து ஓட்டுநர் செய்தது தவறு தான்!
No comments:
Post a Comment