Sunday, 22 September 2019
கின்னஸ் சாதனை...!
முகிலன் செல்ல பெருமாள்
"தற்காப்பு கலை தான் எனது வாழ்க்கை" என்கிறார் மும்பை, தாராவியில் வாழ்ந்துவரும் 16 வயது தமிழ் இளைஞரான முகிலன்.
அவரது குடும்பம் அவர் கைக் குழந்தையாய் இருந்த போது தமிழகம், நெய்வேலியிலிருந்து மும்பைக்குக் குடியேறியது.
முகிலன் டேக்வாண்டோ (Taekwondo) தற்காப்புக் கலையில் பாயிற்சியாளராக இருக்கிறார். இந்த இளம் வயதிலேயே பயிற்சியாளர் என்றால் அவர் எந்த அளவுக்கு அந்தக் கலையின் மீது பற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முகிலன் பல்வேறு தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவராக இருந்தாலும் அவர் டேக்வாண்டோ கலையில் மட்டும் அதிகம் ஈடுபாடு கொண்டு அந்தக் கலையின் மீதே அதிகக் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்.
இப்போது முகிலன் ஐந்து வயது குழந்தையிலிருந்து நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வரை இந்தத் தற்காப்புக் கலையில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்!
மாநில அளவில் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் முகிலன். அடுத்து கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார். வெற்றி பெற வாழ்த்துவோம்!
தனது தற்காப்புக் கலையின் மானசீக குரு என்றால் அது ப்ரூஸ் லீ என்று கூறும் முகிலன் இந்தக் கலையையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்டதாகக் கூறுகிறார்!
"தற்காப்புக்கலை மட்டும் அல்ல, விளையாட்டுக்கள் அனைத்தையுமே வாழ்க்கை முறையாக கருதும் மனோபாவம் நம்மிடையே வளர வேண்டும்!" என்கிறார் முகிலன்.
உண்மையே! நாட்டுக்கு நோயுற்றவர்களை விட நோயற்றவர்களே தேவை என்பதை யார் மறுக்க முடியும்!
வருங்காலங்களில் அவர் பெறப் போகும் வெற்றிகளுக்காக வாழ்த்துவோம்!
நன்றி: பி.பி.சி.
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment