நகைகள் அணிவது தவறா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!
அதிலும் இந்தியப் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் தான் நமது நாட்டில் பெரும்பாலான நகைக்கடைகள் இந்தியர்களுக்குச் சொந்தமானதாகவே இருக்கிறது. சீனர்களின் கடைகள் இருந்தாலும் நம்பகத்தன்மையில் அவை ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. அதனால் தான் அவை நீண்ட நாள்கள் நிலைப்பதில்லை.
நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நகைகளை வாங்கிக் குவிக்கலாம். ஆனால் வாங்கும் பணம் நம்முடையதாக இருக்க வேண்டும். நமது பணம், நமது உழைப்பு - அது தான் நமக்குப் பெருமை தரும். ஊரான் வீட்டுப் பணத்தில் வாங்குவது இழிவைத் தரும்.
வழக்கம் போல அரசியல்வாதிகள் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை! அவர்கள் பெருமைப்படுகிறார்களே அது எப்படி முடிகிறது என்பது தான் நமக்குப் புரிவதில்லை!
கொள்ளையடித்துப் பொருளைச் சேர்ப்பது என்பதே கேவலம். அதிலும் இன்னும் விதவிதமாக நகைகளைச் சேர்ப்பது என்பது அதைவிடக் கேவலம்! இன்னும் அவைகளைக் கழுத்தில் போட்டுக் கொண்டு ஊரே சிரிக்க போட்டுக் கொண்டு வருகிறார்களே எல்லாவற்றையும் விட இது கேவலம்! கேவலம்! கேவலம்!
அவர்களைப் பார்த்து நாடே காறித் துப்புகிறதை என்பது மறந்து ஊர்வலம் வருகிறார்களே - இதை விட வேறு என்ன கேவலம்?
திருடிய பணத்தில் உங்களுடைய பெருமைகளைக் காட்டாதீர்கள் என்பது தான் நாம் அவர்களுக்குச் சொல்லும் பாடம்.
உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள்களையே அபகரித்து விட சுற்றித் திரியும் ஒரு கூட்டம் உண்டு. நீங்களோ அரசியலைப் பயன்படுத்தி உங்களை யாரும் அணுக முடியாத எட்டாத தூரத்தில் இருக்கலாம். ஆனால் மறந்து விடாதீர்கள். உங்களையும் அபகரிக்க சட்டம் உண்டு, நீதிமன்றம் உண்டு.
சட்டம் இப்போது உங்களுக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் எப்போதும் சாதகமாக இருக்க முடியாது. நேரங்காலம் கூடி வரும் போது உங்களைப் பார்த்து ஊரே கும்மியடிக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.
அணிகலன்கள் அழகூட்டும். தங்கம், வைரம், வைடூரியம் அனைத்தும் அழகூட்டும் அணிகலன்கள் தான். சந்தேகமில்லை!
ஆனால் வாங்கும் அணிகலன்கள் நமது வீட்டுப் பணமாக இருக்க வேண்டும். நமது உழைப்பாக இருக்க வேண்டும். அதில் தான் நாம் மகிழ்ச்சி காண முடியும்.
திருட்டுப் பணத்தில் மகிழ்ச்சி காண முடியாது. ஊர் பார்த்து சிரிக்குமே தவிர யாரும் மெச்சிக் கொள்ளப் போவதில்லை.
நகைகள் நளினத்தைத் தரவேண்டுமே தவிர மற்றவர்களின் நகைப்புக்கு உள்ளாகக் கூடாது!
நகைகள் அணிவது தவறில்லை. அது நமது வீட்டு நகைகளாக இருக்க வேண்டும். கொள்ளையடித்து நகைகளைக் குவிப்பது ஊர் சிரிக்கும்! ஊரார் சிரிப்பர்!
எலும்புக் கூடுகளுக்கு அணிகலன்கள் அணிவித்தால் அது வெறுப்பைத்தான் அதிகரிக்கும்!
No comments:
Post a Comment