கேட்டாலும் கேட்டார் ஒரு கேள்வி, பதில் சொல்லத்தான் ஆளில்லை!
நம்மால் கேட்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் தேச பக்தியின் தலவர் முகமட் அர்ஷாத் ராஜி!
கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப்பிரசண்டம் செய்வான் என்பது உண்மை. நம்மால் கேட்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். கேட்க முடியாது என்பதால் தம்பி தண்டப்பிரசண்டம் செய்கிறான்!
ஆனால் நாட்டில் இன்னும் நியாயமானவர்கள் நீதிமான்கள் இருக்கிறார்கள் என்பதற்கு முன்னாள் இராணுவத் தலைவர் அர்ஷாத் ஒரு முன்னுதாரணம்.
பதவிக்கு வந்ததும் தங்களது கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். ஒரு கோவிலை உடைத்தார்கள், புனித நூலை புண்ணியமற்ற நூல் என்றார்கள் இப்போது குடியை ஒழிப்போம் என்கிறார்கள். குடியை ஒழிப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. அங்கேயும் கீழ்த்தட்டு மேல்தட்டு என்று பிரித்து வைக்கிறார்கள்! ஆக குடிவகைகள் இடம் மாறியிருக்கின்றன.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குடியைத் தடை செய்தால் போதப்பொருள்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். இது வரை போதைப்பொருளை நாம் இன்னும் ஒழிக்கவில்லை. ஆக, மயக்கத்தில் இருப்பவன் தொடர்ந்து மயக்கத்தில் இருக்கத்தான் செய்வான்!
ஆனால் இவ்வளவு பேசும் இவர்கள் "ஊழலை ஒழிப்போம்!" என்று சொல்ல இவர்களுக்கு வாய் வரவில்லை! இது தான் மிகப் பெரிய சோகம். குடித்துவிட்டு அலைபவனால் இந்த நாட்டுக்கு எந்த கேடும் வந்ததில்லை. ஆனால் ஊழல் செய்பவனால் கீழ்மட்டத்திலிரிந்து மேல்மட்டம் வரை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
குடிக்குப் பேர் போனவர்கள் இந்தியர்கள். இவர்களால் இந்த நாட்டுக்கு என்ன கேடு வந்தது? இவனால் மற்றவர்கள் தான் சம்பாதித்தார்கள்! இவன் தான் சம்பாத்தியம் இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்!
ஊழலின் நிலை என்ன? பக்காத்தான் அரசாங்கம் மட்டும் இடையிலே வரவில்ல என்றால் இந்த நாடு சீனாவின் கைக்கு ஏலம் போயிருக்கும்! ஊழல் என்றால் சாதாரண ஊழல் அல்ல! பல பல கோடிகள்! எண்ணமுடியாத அளவுக்கு ஊழல்கள்! ஆனால் இப்போது இந்தக் கொல்லைப்புற அரசாங்கம் அனைத்தையும் நியாயப்படுத்தப் பார்க்கிறது!
கொல்லைப்புற வழியாக வந்தார்கள்! அத்தனை பேரும் ஊழல் பேர்வழிகள்! இப்போது ஆட்சியில் இருப்பதால் இன்னும் ஊழலில் ஈடுபாடு காட்டுகிறார்கள்! அதனால் ஊழலைப் பற்றி பேசுவதில்லை!
ஏதோ இருக்கிற கோயில்களையும், கிறிஸ்துவர்களையும் மட்டம் தட்டினால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்! ஏன் ஊழல் கூடாது என்றால் அதரவு கொடுக்க மாட்டார்கள் என்று எப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்?
தேசபக்தி இல்லாத ஒரு கூட்டத்துக்கு (பேட்ரியோட்)தேசபக்தியின் தலைவர் முகமட் அர்ஷாத் ராஜி ஒரு சவால் விட்டிருக்கிறார்!
என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம். குடியைக் கெடுக்கும் குடியா? நாட்டை அழிக்கும் ஊழலா?
No comments:
Post a Comment