மக்காவ் மோசடிகளைப் பற்றி நிறையச் செய்திகள் வருகின்றன. ஆனாலும் பலருக்கு இந்த முடிவில்லா ஏமாற்று வேலையில் ஏமாந்து தான் போகின்றனர். ஏமாற்றுவதும் தொடர்கிறது ஏமாறுவதும் தொடர்கிறது! நின்ற பாடில்லை! முற்றுப்புள்ளியும் வைக்க முடியவில்லை!
இந்த மோசடிக் கும்பல் பல வகையான வழிமுறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். பல நூதனமான வழிமுறைகள். நாம் நினைத்துப் பார்க்காத வழிமுறைகள்!
ஆனால் அவர்கள் எந்த வகையைப் பயன்படுத்தினாலும் கடைசியில் அவர்களுக்குத் தேவையானது ஒன்றே ஒன்று தான்: உங்களது வங்கி கணக்கு எண் மட்டும் தான்! அந்த எண் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால் அத்தோடு முடிந்தது அவர்களின் வேலை! அப்போது தான் ஆரம்பிக்கும் உங்களது வேலை!
எப்போது தான் ஒரு முடிவுக்கு வரும் இந்த மக்காவ் மோசடிக்கும்பலின் ஏமாற்று வேலை? எந்த ஒரு வெளிச்சமும் இதுவரையில் காணோம். காவல்துறையும் திணறுகிறது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது! ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயம் நம்பலாம். நாம் நினைப்பது போல காவல்துறை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படியில்லை. காவல்துறையினர் சும்மா இருக்க நியாயமில்லை. வெகு விரைவில் காவல்துறையினர் இதற்கு ஒரு முடிவு கட்டுவர் என நாம் நம்பலாம்.
பொது மக்களைப் பொறுத்தவரை இந்த மோசடியில் நமது பங்கு என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறையும், வங்கியும் நம்மைத் தொலைப்பேசி வழி தொடர்பு கொள்ளாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறை நிச்சயமாக அதனைச் செய்யாது. வங்கி ஒருசில விஷயங்களுக்காக தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர்கள் உங்கள் வங்கிக்கணக்கு எண் போன்றவைகளைக் கேட்க மாட்டார்கள்.
அப்படியே வங்கிகள் ஏதேனும் பேச வேண்டுமென்றாலும் நீங்களே அவர்களிடம் "நான் நேரடியாகவே வங்கிக்கு வருகிறேன்" என்று சொல்லி தொலைப்பேசி உரையாடலை முடித்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் வங்கியின் தொலைப்பேசி எண், பேசும் நபர் யார் என்று நன்கு தெரிந்து கொண்டு நீங்களே அவர்களுடன் தொடர்பு கொள்வது உத்தமமான காரியம். ஏமற்றுபவர்கள் நீங்கள் தொலைப்பேசியில் அவர்களைத் தொடர்பு கொள்வதை விரும்ப மாட்டார்கள். அவர்களின் தொலைப்பேசி எண், அவர்களது பெயர் போன்றவை நிச்சயமாக அவர்களிடமிருந்து கிடைக்காது என்பதை நீங்கள் நம்பலாம்.
இந்த மக்காவ் மோசடிக்கும்பலைப் பற்றி நாம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் அவர்களின் கை ஒங்குகிறது. மக்கள் நிறையவே ஏமாறுகிறார்கள். ஏமாறுவதை நிறுத்த முடியவில்லை. நம்முடைய ஒத்துழைப்பு இல்லாதவரை எந்த மோசடிக்கும்பலானாலும் நம்மை ஏமாற்ற முடியும்! நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
ஆமாம்! மோசடி வேலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன! நாமும் ஏமாந்து கொண்டே போகிறோம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு! இதற்கான முடிவும் நிச்சயம் ஒரு நாள் வரும்!
No comments:
Post a Comment