சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இப்போது தமிழக திரைப்பட உலகில் புதிதாக, மகா பெரிய பிரச்சனையாக, உருவாகியிருக்கிறது யார் சுப்பர் ஸ்டார் என்கிற விவாதம்!
இது ஒன்றே போதும் தமிழ் நாட்டில் வேலைவெட்டி இல்லாத இளைஞர் கூட்டம் பெருகிக் கொண்டே போகிறது என்பது!
தமிழ் திரையுலகில் சுப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி காந்த் மட்டுமே. அதனை பிற நடிகர்கள் சொந்தம் கொண்டாட நினைப்பது சரியல்ல. நமது திரையுலக சரித்திரத்தப் பார்த்தால் இது போன்ற பிரச்சனை முன்பு எப்போதும் இருந்ததில்லை!
பார்ப்போமா? ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன், நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி என்று இப்படித்தான் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஏதோ ஒரு வகையான அடைமொழி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அது தான் வரலாறாக இருக்கிறது. அதைத்தான் நாம் இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதே போல சுப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினியைத் தான் குறிக்கும். தியாகராஜ பாகவதர், எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க வந்தவர் ஏழிசை மன்னர் என்றால் அது அவர் மட்டும் தான். நடிகவேள் என்றால் அது எம்.ஆர்.ராதாவை மட்டும் தான் குறிக்கும். அதற்கு மேல் அந்தப் பட்டத்திற்கு இடம் காலியில்லை!
சுப்பர் ஸ்டார் என்றால் இன்னும் எண்பது ஆண்டுகள் போனாலும் அது ரஜினி மட்டும் தான். ஏன்? தல, தளபதி என்கிறார்களே அது யாரைக் குறிக்கிறது? தல அஜித், தளபதி விஜய் அவ்வளவு தான். தல தனக்கு எந்தப் பட்டமும் வேண்டாம் என்று பெருந்தன்மையோடு ஒதுங்கிக் கொண்டார். தளபதி என்பது விஜய் பெயரோடு ஒட்டிக்கொண்டது! அதற்கு மேல் அது வேறு எங்கும் போகும் நிலையிலில்லை!
இப்போது விஜய்க்கு என்ன வந்தது? தனக்கு தளபதியும் வேண்டும் சுப்பர் ஸ்டார் என்று இன்னொரு பட்டமும் வேண்டும் என்று நினைப்பதே பெரும் தவறு. அவர் தனது ரசிகர்கள் மேல் குற்றம் சொன்னால் ஒன்று மட்டும் விளங்குகிறது. அவர் ரசிகர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்பவர் என்று புலனாகிறது!
விஜய் சார்! தாய் தகப்பன் பேச்சைக் கேட்க மாட்டேன் ரசிகர்கள் பேச்சை மட்டும் தான் கேட்பேன் என்றால், மன்னிக்கவும்! தடம் மாறுகிறீர்கள்!
No comments:
Post a Comment