புத்தாண்டு பிறந்துவிட்டது!
ஒவ்வொரு புத்தாண்டிலும் தீர்மானங்கள் போட்டாகிவிட்டன. எதுவும் நடைமுறையில் சாத்தியப்படவில்லை! ஓரிரு வாரங்களில் எல்லாம் காணாமல் போய்விட்டன! அதற்கு நமது பலவீனமே காரணம்.
இனி எந்தப் புதிய தீர்மானங்களும் சாத்தியமில்லை என்று நான் சொல்ல மாட்டேன். செய்கின்ற வேலைகளை ஒழுங்காக, நூறு விழுக்காடு கவனம் செலுத்தி வந்தாலே போதும். அதுவே அனைத்து தீர்மானங்களுக்கும் சமம்.
இந்த ஆண்டு தீர்மானம் என்பது "செய்வன திருந்தச் செய்" என்பதாக இருக்கட்டும். நமது வேலைகளைத் திருந்தச் செய்தலே போதுமானது.
அரைகுறை வேலைகளைச் செய்துவிட்டு நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம்மிடமும் உண்டு. அதைக் குறைத்துக் கொள்வோம். அது நமது சமுதாயத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும். நம்மையும் சோம்பறிகளோடு சேர்த்துவிடுவார்கள்!
இந்த ஆண்டு நமக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்!
No comments:
Post a Comment