நண்பர்கள் அனைவருக்கும் சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்!
வெறும் வாழ்த்துகள் சொல்லிவிட்டுப் போய்விடுவதில் எந்தப் பயனும் இல்லை.
சீன இனத்தவர் நம்மோடு காலம் காலமாக வாழ்பவர்கள். மற்றவர்கள் எந்த அளவுக்கு அவர்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனாம் நாம் அவர்களைப்பற்றி அதிகமாகவே அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நாம் இந்நாட்டிற்கு வந்த காலம் சீனர்கள் இந்நாட்டிற்கு வந்த காலம் எல்லாம் ஒரே காலகட்டம் தான்.
சீனர்களும் நம்மைப் போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத் தூண்களாக விளங்குகின்றனர். நாமோ இன்றும் யார் யாருக்கோ கையேந்தும் கையேந்திகளாகத்தான் இருக்கிறோம்.
பொருளாதாரத்தில் நாம் முன்னோக்கி நகர வேண்டும். அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் சீனர்களின் வளர்ச்சியைப் பாருங்கள், கவனியுங்கள். அவர்களின் முன்னேற்றத்தைக் கூர்ந்து பாருங்கள். அவர்களின் பலம் என்ன. நமது பலவீனம் என்ன என்பதைக் கவனமாக ஆராயுங்கள்.
நம் நாட்டில், நம்மைச் சுற்றியுள்ள சீனர்களே நமக்கு நல்ல உதாரணம். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ன என்ன பக்கபலமாக இருக்கின்றனவோ நமக்கும் அது பலமாக இருக்கும்.
சீனர்கள் முன்னேறிவிட்ட சமூகம் தான். அவர்கள் மட்டும் தானா? நம் இனத்திலும் செட்டியார்கள், குஜாராத்தியர்கள், தமிழ் முஸ்லிம்கள் அனைவருமே தொழில் செய்யும் சமூகம் தான். நாம் அனைவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. ஆனால் சீனர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கின்றன.
அதனால் தான் சீனர்களின் எப்படி தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வந்தாலே போதும். அதனையே நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு நமக்கான பாதைகளை அமைத்துக் கொள்ளலாம்.
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment