வெள்ளிக்கிழமை தொழுகைகளில் பிற மதங்களை இழிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென சிலாங்கூர் சுல்தான் மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
சிலாங்கூர் சுல்தான் இதனை மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதும் ஆனால் சமய சொற்பொழிவார்கள் அதனை மீண்டும் ,மீண்டும் மீறுவதும் அது எப்படி என்பதை நம்மாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் நாட்டில் அமைதி நிலவ வேண்டும்; சமயப் பிரச்சனைகள் எழக்கூடாது; மக்கள் சமாதானத்தோடு வாழ வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு சமயவாதிகளுக்கு ஆலோசனைக் கூறுகிறார். அறிவுரைக் கூறுகிறார். எதுவும் எடுபடவில்லை.
அப்படியென்றால் இப்போது யார் பெரியவர் என்று நினைக்கத் தோன்றுகிறது! ஆட்சியாளர் சொல்வதை சமயவாதிகள் கேட்கமாட்டார்களோ? ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் தான் முக்கியம். நாட்டில், மாநிலங்களில் அமைதி என்பது முக்கியம். நாட்டின் சுபிட்சம் என்பது முக்கியம். நாட்டில் அமைதி நிலவினால்தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி அனைத்தும் சிறப்பாக அமையும்.
ஆனால் சமய போதகர்களுக்கு நாட்டின் நலன் முக்கியமா என்றால் அங்கு தான் பிரச்சனை எழுகிறது. அதுவும் பல நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். அமைதியின்மைக்குக் காரணமானவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரங்களைப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
சிலாங்கூர் சுல்தான் அவர்கள் நல்லதையே கூறியிருக்கிறார். அவருடைய கோபம் நியாயமானது. நாடு வளர்ச்சியை நோக்கி போகின்ற நேரத்தில் தடைக்கற்களாக இருப்பவர்கள் சமயவாதிகள். இவர்களிடம் பிற்போக்குத்தனம் அதிகம். இவர்கள் அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிகொண்டு வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள். சம்பளம் இல்லையென்றால் இவர்கள் அனைவரும் வலைச் சுருட்டிக்கொண்டு தங்களது குடும்பத்துக்காக உழைக்க வேண்டி வரும்.
எப்படியோ சமயவாதிகளுக்கு நல்லதொரு எச்சரிக்கையை விடுத்திரார் சுல்தான் அவர்கள். நல்லதே நடக்க பிரார்த்தனைசெய்வோம்.
No comments:
Post a Comment