திரெங்கானு மாநிலத்தில் ஷரியா நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அஃபெண்டி அவாங் இன்று சுமார் 70 பார்வையாளர்களின் முன்னிலையில் பிரம்படி தண்டனை இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அஃபண்டி அவாங், வயது 42, கல்வத் குற்றத்திற்காக ஷரியா நீதிமன்றம் விதித்த தண்டனை ஆறு பிரம்படிகள். அந்தத் தண்டனை பொதுவெளியில் அதாவது பள்ளிவாசலின் வளாகத்தில். சுமார் 70 பேர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. தண்டனையின் போது - அதாவது பிரம்படியின் போது - அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறிவிட்டது.
கொடுக்கப்பட்ட ஆறு பிரம்படிகளும் - மூன்று பிரம்படிகள் முதுகிலும் மூன்று அவரது பிட்டத்திலும் - நிறைவேற்றப்பட்டு அவர் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லபட்டார். பிரம்படி தண்டனை 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது நண்பகல் 2.50 மணிக்குத் தொடங்கப்பட்டு 2.52 க்கு முடிவடைந்துவிட்டது.
திரெங்கானு மாநிலத்தில் இது போன்று பொதுவெளியில் கல்வத் குற்றத்திற்காக அளிக்கப்பட்ட தண்டனை என்பது இதுவே முதல் முறையாகும்.
பலர் இது போன்ற பொதுவெளி தண்டனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் இது அவசியம் என்கிற கோணத்தில் திரங்கானு அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது.
இனி திரங்கானு மாநிலத்தில் இது போன்ற குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமும் எதிர்பார்ப்போம்.
No comments:
Post a Comment