திரு.ஆனந்த கிருஷ்ணன்
தமிழர்களுக்குப் பெருமைதரும் விதத்தில் உலகப் பணக்காரர் வரிசையில் இருந்தவர் தான் திரு ஆனந்த கிருஷ்ணன் அவர்கள். அவர் மலேசிய நாட்டின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். நீண்ட நாள்களாக இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டவர்.
அவரின் இந்திய முதலீடுகள் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் வர்த்தக உலலில் சகஜமான ஒன்று தான். நம் நாட்டில் அவர் பெரும்பாலும் அஸ்ட்ரோ தொலைகாட்சி, தொலைத் தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் - இரண்டும் தான் அவருக்கு அடையாளமாக விளங்குகிறது. ஆனால் அதைவிட பெரும் நிறுவனங்களையும் அவர் வெளிநாடுகளில் நடத்திவருகிறார்.
இவருடைய வாரிசுகளில் அவரது மகன் புத்த பிக்குவாக மாறிவிட்டார். அது நடந்துது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர். அவருடைய இரண்டு பெண் வாரிசுகளைப்பற்றி எந்த செய்திகளும் இல்லை. அதனால் அவருடைய நிறுவனங்கள் எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நம்மைப் பொறுத்தவரை நமது மலேசிய மண்ணில் அந்த இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை ஓரு தமிழரோ அல்லது ஓர் இந்தியரோ பிடிப்பதைத் தான் விரும்புகிறோம் ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் அகப்படவில்லை! இனி அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
வர்த்தக உலகில் எதுவும் நடக்கலாம். கீழே இருப்பவர் மேலே போவதும் மேலே இருப்பவர் தீடீரென கீழே இறங்குவதும் அது இயல்பாக நடக்கும் காரியம் தான். அதுவும் அரசியல் தொடர்பு உள்ளவர்கள் வெகு விரைவில் கோட்டையைப் பிடித்து விடுவார்கள்.
ஒரு காலத்தில் சீனரோடு போட்டிப்போட முடியுமா என்று பேசினார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் மலேசிய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் தான் ஆனந்த கிருஷ்ணன். ஆனால் இன்றைய காலகட்டம் முழுமையாக சீனர்களின் ஆக்கிரமப்பில் இருக்கிறது. நம்மால் முடியுமா என்கிற நிலைமையில் தான் இருக்கிறோம். எதுவும் முடியும்! எதுவும் சாத்தியமே!
No comments:
Post a Comment