மற்றபடி வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் சம்பளம் இல்லாமல் நாங்கள் வேலை செய்யத்தயார் என்று சொல்ல முன்வரவில்லை. அதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலேசியர்களில் பலர் ஒவ்வொரு மாதமும் வாங்கிய பல்வேறு பொருள்களுக்கு மாதாமாதம் மாதத்தவணை கட்டுபவர்களாகத்தான் இருக்கிறோம். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்கள் மட்டும் வேறு விதமாகவா வாழப் போகிறார்கள்?
முதலில் ரமணன் அவர்களை வாழ்த்துகிறோம். அவருக்கு ஏதேனும் குடும்ப வருமானம் வரலாம். ஆனால் ரமணன் அவர்களுக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்குவது நமது கடமை. நீங்கள் உங்களுக்கான சம்பளம் வாங்குவதில்லை என்பதைப் பொதுமக்கள் பார்வையில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் தியாகத்தை அலட்சியப் படுத்துபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.
மக்களைப் பொறுத்தவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் செய்த, செய்கின்ற சேவை என்ன என்பது தான் முதலில் நிற்கும். அதனை நீங்கள் செம்மயாகவே செய்கிறீர்கள் என்பது தான் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றியான கருத்து நிலவுகிறது. அதனைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் நீங்கள் உங்கள் பயணத்தை இப்போது போன்றே நல்ல முறையில் தொடர வேண்டும்.
இந்தியர்களில் பெரும்பாலானோர் தொழில் செய்ய கடன் வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கை. பார்க்கப்போனால் அவர்களில் பெரும்பாலானோர் சிறு தொழிலுக்கான உதவிகளை எதிர்ப்பாக்கின்றனர். பெருந்தொழிலில் உள்ளவர்கள் பெரும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கும் உதவ வேண்டும். இத்தனை ஆண்டுகளாக எந்த உதவியும் யாருக்கும் கிடைக்கவில்லை. நீங்கள் வந்த பிறகுதான் கடனுதவி கிடைக்கிறது என்பது பொதுவான அபிப்பிராயம்.
நீங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளைப் பொறுப்போடு செய்ய வேண்டும் என்பது தான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது. சம்பளம் வாங்குகிறீர்களோ வாங்கவில்லையோ அதனை யாரும் லட்சியம் செய்யப்போவதில்லை. உங்கள் பணி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
No comments:
Post a Comment