சுற்றுலாத்துறை என்றால் மற்ற துறைகளைப் போல யார் வேண்டுமானலும் அமைச்சர் ஆகலாம் என்று சொல்ல முடியாது.
அந்தத் துறையைப் பொறுத்தவரை சீனர்கள் தான் பொருத்தமானவர்கள் என்பது தான் அமைச்சரவையின் முடிவு. அதனால் தான் இப்போதைய சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். சமீபகாலமாக அமைச்சர் தியோங் பல வகைகளில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.
உண்மையைச் சொல்லப் போனால் தாக்குதல்களை ஏற்படுத்துபவர்கள் அவருடைய சக அமைச்சர்கள் தான். அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஏதோ ஒரு இன விவகாரம் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்! நிறைய சீனப் பயணிகள் நமது நாட்டிற்குள் வருகிறார்கள் என்றால் அதனை சாமான்யமாகக் கருத முடியாது. அதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டும். சுற்றுலா அமைச்சர் அதனைச் செய்கின்றார்.
இன்றைய சீனா உலகளவில் பணக்காரர் நாடு என்று பெயர் எடுத்திருக்கிறது. அதில் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மையைச் சொன்னால் பல நாடுகள் அவர்கள் கையில் தான் இருக்கின்றன. உதாரணம் ஸ்ரீலங்கா. அது போதும். இன்று அலகளவில் சீன நாட்டவர்கள் தான் கையில் பணம் புரளும் மனிதர்களாக உலகை வலம் வருகின்றனர். சீன சுற்றுப்பயணிகளுக்குத்தான் பல நாடுகள் வலை வீசுகின்றன! அந்த வகையில் நமது நாட்டின் சுற்றுலா அமைச்சர் சீனப் பயணிகளை நமது நாட்டிற்குள் கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் நடப்பதோ அவர் மீது காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுகின்றனர்.
நாடு வெளிநாட்டுப் பயணிகளை நிறையவே எதிர்பார்க்கின்றது. காரணம் சுற்றுலா நாட்டின் வளர்ச்சிக்கு மிகத் தேவை. அவர்கள் நாட்டில் செலவளிக்கும் ஒவ்வொரு காசும் நாட்டின் வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். சீன நாட்டின் பயணிகள் நாட்டிற்கு வருகை தருகிறார்கள் என்றால் அது அமைச்சரின் தனித்திறன். அதனை பாராட்டாமல் அவர் மீது புழுதிவாரித் தூற்றுவது முட்டாள்தனம்!
இந்த அரைகுறைகள் திருந்த வேண்டும் என்பது தான் நமது எதிர்ப்பார்ப்பு!
No comments:
Post a Comment