முப்தி, டத்தோ முகமட் அஸ்ரி ஸைனல் அபிடின், பெர்லிஸ் மாநிலம்
நாம் தான் குழம்பி விட்டோமோ? பொதுவெளியில் தண்டனை என்றால் அதற்கும் இஸ்லாமிய ஷாரியா சட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்று பெர்லிஸ் முப்தி அவர்கள் சொல்லி இருப்பது உண்மையில் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!
பொது வெளியில் தண்டனை என்றாலே அது இஸ்லாமிய சட்டம் என்று தான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான் நாமும் இது போன்ற சட்டங்கள் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது முப்தி அவர்கள் நமக்கு ஒர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அது இஸ்லாமிய சட்டம் அல்ல என்கிறார். அது அதிகாரத்தில் உள்ளவர்கள் கொடுக்கும் தண்டனையே தவிர இஸ்லாமிய சட்டம் அல்ல என்பது நமக்கும் புதுமையாகத்தான் இருக்கிறது.
ஷரியா சட்டம் என்றால் அது இஸ்லாமிய சட்டம் என்று தானே நாம் அர்த்தம் கொள்கிறோம்? இஸ்லாமிய சட்டம் இல்லை என்றால் அது எப்படி இது போன்ற சட்டங்களை ஷரியா நீதிமன்றம் விதிக்க முடியும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.
ஷரியா நீதிமன்றம் சிவில் நீதிமன்றம் இரு நீதிமன்றங்களும் ஒரே வித சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது நமக்கு மேலோட்டமாகத் தெரியுமே தவிர அதுபற்றிய ஆழ்ந்த அறிவு நமக்கு இல்லை. ஒன்று மட்டும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் கொடுக்கப்படும் தண்டனைகள் இஸ்லாமிய சட்டம் என்பதாக ஊடகங்கள் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்ட செய்தி. அவ்வளவுதான்.
முப்தி அவர்கள் சொல்லுவதைப் பார்த்தால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது போன்ற சட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் உண்டா என்பது உண்மையில் நமக்குத் தெரியவில்லை. சிவில் சட்டம் நீதிபதிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஷாரியா சட்டம் அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறதா? புரியவில்லையே!
No comments:
Post a Comment