அவர்கள் துன்புறுத்தாத மிருகங்களே கிடையாது. அட! இந்த பூனைகள் அப்படி என்ன தான் செய்துவிட்டன? அவைகள் மனிதர்களுடன் விளையாடும் தன்மை கொண்டவை. நன்கு பழக்கப்படுத்தினால் பூனைகள் மனிதருடன் கொஞ்சம், கெஞ்சும் எல்லாமே செய்யும்.
அப்படிப்பட்ட தன்மை கொண்ட பூனைகள் எப்படியெல்லாம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றன என்று பாருங்கள். மேலே படத்தைப் பாருங்கள். ஒரு மனிதர் - மனிதர் என்று சொல்லவே அருகதையற்றவர் - அந்தப் பூனையை கழுத்தில், கட்டி, தரையோசு தரையாக இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது மனம் கசிந்து போகிறது.
இது போன்ற ஜென்மங்கள் எல்லாம் பூனை வளர்க்க வேண்டும் என்று யார் கட்டாயப்படுத்தினார்கள்? அது பூனை தான். ஆனால் அது துன்புறுவதைப் பார்த்து நாம் என்ன சந்தோஷப்பட முடியுமா? அது மிருகம் தான். ஆனால் வலி என்பது அதுக்கும் இருக்கத்தானே செய்யும்?
ஒன்று மட்டும் உறுதி. . இங்கு ஹீரோ என்றால் அது நீதிமன்றம் தான். பாராட்டலாம். இனி யாரும் செய்யத் தயங்கும் அளவுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், தண்டனையாக ரிங்கிட் 10,000 வெள்ளி அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது. 10,000 வெள்ளி என்பது பெரிய தொகை தானே? இது போன்று அபராதத்தை மிகைப்படுத்தினால் இனி யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இது பூனைக்கு மட்டும் என்பதாக இருக்கக் கூடாது நாய்களுக்கும் சேர்த்துத்தான் தண்டனைகள் இருக்க வேண்டும்.
வேறுவழி இல்லை. ஒவ்வொன்றையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். தண்டனை, அபராதம் எல்லாம் கடுமையாக இல்லையென்றால் அவனவன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வான்.
இனி மேலாவது பிராணிகள் துன்புறுத்துவது குறைகிறதா என்று பார்ப்போம்
No comments:
Post a Comment