ஒவ்வொரு நாட்டிலும் ஊழலுக்குப் பேர் போனவர்கள் யார் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே! இதில் ஒளிவு மறைவு இல்லை! அது அவர்களுக்கே தெரியும் என்பது நமக்கும் தெரியும்.
நல்ல மனத்தோடு, சேவை செய்ய வேண்டும் என்கிற துடிப்போடு அரசியலுக்கு வருபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். நல்லவன் என்று அரசியலில் பெயர் எடுக்க வேண்டுமானால் அது மட்டும் நடக்காது. உங்களை மூட்டைக்கட்டி சிக்கிரம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்! அது தான் நல்லவனுக்கு ஏற்படும் கதி! திருட்டுத்தனம் செய்பவன் தான் தியாகி, தளபதி எனப் போற்றப்படுவான்! அது தான் அரசியல்!
நம்மைப் பொறுத்தவரை மலேசிய அரசியலில் இந்தியத் தலைவர்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேசுகிறோம். மற்ற இனத்தவர்கள் யோக்கியமானவர்கள் என்கிற அபிப்பிராயம் நமக்கு உண்டு. ஆனால் மூன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதிர், நஜிப், முகைதீன் போன்றவர்கள் அந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டார்கள்! அதனால் அரசியல் என்றால் 'முன்ன பின்ன' இருக்கத்தான் செய்யும் என்கிற எண்ணம் போய் அரசியலை அலிபாபா அரசியலாக மாற்றி விட்டார்கள்!
சமீபத்திய ஆய்வு ஒன்றில் உலகளவில் அரசியல்வாதிகளே மக்களால் வெறுக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். நம்பகத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள். பதவிகளில் இருக்கும் காலத்தில் கோடிகளைக் குவிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! அப்பப்பா! அவர்களின் ஆசைக்கு அளவே இல்லை. முடிந்தால் இந்த உலகத்தையே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம் நாட்டைப் பொறுத்தவரை இந்தியர்கள் எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என நாமறிவோம். இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கப்படும் பணம் எதுவும் இந்தியர்களுக்குப் போய் சேருவதில்லை. எல்லாமே மடைமாற்றம் செய்யப்படுகிறது.
நமது அரசியலில் நாம் சில நல்லவர்களைப் பார்த்திருக்கிறோம். துன் வீ.தி சம்பந்தனைப் போல சிலர். அவருக்குப்பின் நல்லவர்கள் யாரும் தலை தூக்க முடியாதபடி அரசியல் அமைந்துவிட்டது! இனி அமையும் என்னும் நம்பிக்கையும் போய்விட்டது.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்ப்போம்!
No comments:
Post a Comment