ஒன்றல்ல இரண்டல்ல பதினேழு மில்லியன் மலேசியர்களின் தரவுகள் வெளியாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தத் தரவுகள் எங்கிருந்து வெளியாகின்றன? பதில் சொல்ல வேண்டியவர்கள் மறுக்கின்றனர். தேசிய பதிவு இலாகா அப்படியெல்லாம் வெளியாகக் கூடிய சாத்தியமில்லை என்று கூறுகிறது. அவர்களின் வேலையாட்கள் சொக்கத்தங்கம் என்று அவர்கள் நம்புகிறார்கள். சைபர் பாதுகாப்பு முகமையும் அதையே தான் கூறுகின்றது. ஆனாலும் இது ஒரு பெரிய பிரச்சனை என்பதாக இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றனர். ஒப்புக்கொண்டது மட்டும் அல்லாமல் அதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கிவிட்டன. காவல்துறையின் உதவியை நாடியுள்ளன.
ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். எனது மகன் ஒருவனுடைய பெயர் எங்கேயும் கண்டுபிடிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இர்ண்டு மூன்று முறை அவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அது FAKE Call என்பது எனக்குத் தெரியும். காரணம் அதே எண்ணிலிருந்து எனக்கு இதற்கு முன் அழைப்பு வந்து நான் அதனை நிராகரித்து விட்டேன். ஆனால் எப்படியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் முயற்சியைக் கைவிடவில்லை! இப்போது என மகனுக்கு அதனை மாற்றிவிட்டார்கள், அவ்வளவு தான்! அவனுடைய பெயர் விபரங்கள் எங்கியிருந்து பெறப்பட்டிருக்கும்? ஒன்று தேசிய பதிவிலாகா மற்றொன்று வங்கிக்கணக்கிலிருந்து அதாவது பேங்க் நெகாரா மலேசியா. வேறு வாய்ப்பில்லை.
இன்றைய நிலையில் மலேசியர்கள் பெரும் அளவில் Fake நிறுவனங்களினால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்நாள் சேமிப்புகளை அப்படியே வழித்து எடுத்து விடுகிறார்கள். வேலை தருகிறோம் என்று சொல்லி இளைஞர்களின் எதிர்காலத்தையே சிதைத்து விடுகின்றனர். பலப்பல மோசடிகள்! காவல்துறையினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் கை தான் ஓங்கி நிற்கிறது! எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பதும் புரியவில்லை.
இப்போது அனைத்தும் காவல்துறையினரின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் அட்டூழியங்கள் தொடரும் என்று பார்ப்போம். அதுவரை எச்சரிக்கையாய் இருங்கள் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல?
No comments:
Post a Comment