கல்வி கற்பதற்கு என்ன தான் எல்லை? எல்லாவற்றுக்கும் எல்லைகள் உண்டு. ஆனால் கல்விக்கு ஏது எல்லை என்று நிருபித்தவர் மேலே காணப்படும் பேராசிரியர் பார்த்திபன்.
எல்லையே இல்லை என்பதைத்தான் அவரின் கல்வியின் மீதான தாகத்தைப் பார்க்கிறோம். அவரின் வயது 56. கடந்த 30 ஆண்டுகளாக அவர் படித்துப் பெற்ற பட்டங்களின் எண்ணிக்கை 145. உலகளவின் வேறு யாரும் இத்தனை பட்டங்களைப் பெற்றிருப்பார்களா? தெரியவில்லை!
அவரின் குடும்பப் பின்னணியைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாகச் சொல்வதற்கில்லை. சாதாரண குடும்பப் பின்னணி தான். தெருவிளக்கில் படித்தவர் தான். நம்மைப் போலவே கணிதம் என்றால் பிடிக்காத பாடம் தான். ஆனால் அதனையெல்லாம் புறந்ததள்ளிவிட்டு கருமமே கண்ணயிருந்து அவர் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.
இத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் இப்போது அவர் அடுத்த பட்டம் பெறுவதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவர் மனைவியும் ஒன்பது பட்டங்களைப் பெற்றவர் என்கிறார்கள். நல்லவேளை அத்தோடு நிறுத்திக் கொண்டார். குடும்பப் பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
நமது மாணவர்களை நினைத்துப் பாருங்கள். அல்லது எந்த மாணவராக இருந்தால் என்ன? நினைத்துப் பாருங்கள். ஒரு பட்டம் பெறுவதற்கே நாக்குத் தள்ளிப் போகிறது என்கிறார்கள்! மிக மிக ஆர்வமுள்ளவர்கள் இரண்டோ, மூன்றோ இருக்கலாமே தவிர அதற்கு மேல் வாய்ப்பில்லை.
கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்குத் தான். பேராசிரியர் தனது அறிவாற்றல் பல துறைகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனைச் செயல்படுத்துகிறார். இன்னும் எத்தனை துறைகளில் அவர் பட்டம் பெறப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பேராசிரியர் பார்த்திபன் அவர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
No comments:
Post a Comment