இவர்களுக்குத் தேவை எனச் சொல்லப்படுபவர்கள் எல்லாம் இந்தியத் தொழிலாளர்கள் தாம். அதிலும் குறிப்பாகத் தமிழகத் தொழிலாளர்கள் தாம்/ அது ஏன் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது இவர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றலாம் என்பது மிக முக்கியம் வாய்ந்தது. ஆமாம் தமிழகத் தொழிலாளர்கள் என்றால் அவர்கள் ஏமாளிகள் என்று முத்திரைக் குத்தியவர்கள் மலேசிய உணவக உரிமையாளர்கள்! எத்தனையோ தொழிலாளர்களுக்குப் பல துன்பங்களை விளைவித்தும் எந்த ஒரு உணவக முதலாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை! கொஞ்சம் விழித்தவர்கள் எப்படியோ பிழைத்துக் கொண்டனர். பலர் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாய் ஊர் திரும்பினர்.
அரசாங்கம் அனுமதி கொடுத்த போது உணவக உரிமையாளர்கள் ஆடாத ஆட்டம் காட்டினர். நாம் எல்லா உரிமையாளர்களையும் குற்றம் சாட்டவில்லை. ஒரு சிலர் பிறந்ததிலிருந்தே மற்றவர்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவர்கள். அவர்கள் இருக்க வேண்டிய இடம் வேறு. உணவகத் தொழிலில் உள்ளவர்கள் ஆட்டம் காட்டினால் வேலை செய்யும் தொழிலாளர்களும் தங்களது ஆட்டத்தைக் காண்பிப்பர்! அத்தோடு நீங்கள் கோவிந்தா! போட வேண்டியது தான்/ தலை தூக்க முடியாதபடி உங்களைக் கவிழ்த்து விடுவார்கள்!
நமக்குத் தெரிந்தவரை இப்போது தமிழகத் தொழிலாளர்கள் மலேசியா பக்கம் வருவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள் எனச் சொல்லப்படுகின்றது. அவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் செல்வதையே விரும்புகிறார்களாம். அது அவர்களின் விருப்பம்.
இன்று புலம்புவர்கள் அன்று கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாம். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் தான் ஞாபகத்திற்கு வருகிறது!
No comments:
Post a Comment