கல்வி தான் நமது ஆயுதம். வறுமையைப் போக்க, வாழ்க்கை தரத்தை உயர்த்த, பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி கல்வி மட்டும் தான்.
ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று நம்மை யாரும் முத்திரைக் குத்தவில்லை. நமக்கு நாமே முத்திரைக்குத்திக் கொண்டோம். நம்மை உயர்த்திக் கொள்ள அப்போதும் வழிகள் இருந்தன இப்போதும் இருக்கின்றன.
அன்று தோட்டப்புறங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகள் நாம் உயர்வதற்கான வழிவகைகளைக் காட்டின. அன்றே நாம் பயன்படுத்தியிருந்தால் நமது சமுதாயம் ஒரு நடுநிலையான வாழ்க்கைத்தரத்தை அடைந்திருக்கும். அப்போது கல்வியையே உதாசீனம் செய்தோம். அன்று செய்த அதே தவற்றை இன்றும் செய்கிறோம். இன்னும் நம்மிடம் கல்வியின் மூக்கியத்துவம் உணரப்படவில்லை.
மலாய் சமுகத்தைப் பார்த்தாவது நாம் திருந்திருக்க வேண்டும். நமக்கும் அந்த விழிப்புணர்வு இல்லை நமது தலைவர்களுக்கும் அந்த கல்வி அவசியம் என்கிற புரிதலும் இல்லை. ஏன் நமது தலைவர்களும் அரைகுறை படிப்பாளிகளாகத்தான் இருந்திருக்கின்றனர். அவர்கள் நம்மை வழிநடத்துவதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்பதைத்தான் அவர்கள் காட்டியிருக்கின்றனர்.
ஆனாலும் குற்றங்களை மற்றவர்கள் மீது திணிப்பதை விடுத்து நம்முடைய குற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாம் முன்னேற நமது முயற்சி தான் தேவையே தவிர உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஓடிவந்து நமக்கு உதவும் என்கிற எதிர்பாப்ர்ப்புகளை விட்டு ஒழிக்க வேண்டும். நமக்கு அக்கறை என்றால் நாம் தான் அக்கறை காட்ட வேண்டும்.
கல்வி என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம். அது முன்னேற்றத்தைக் கொண்டுவரும். கல்வி கற்ற சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்கும். கற்றவனுக்கு சேல்லுகின்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி கற்றவன் மரியாதைக்குரியவன் ஆகிறான்.
கல்வியே நமது முன்னேற்றத்திற்கான ஆயுதம். .
No comments:
Post a Comment