சமீபத்தில் காத்தாரில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் மலேசிய அணியினர் சிறப்பாக விளையாடி 12 தங்கப்பதக்கங்களக் குவித்திருக்கின்றனர். ஆறு பேர் - ஓர் ஆண் வீரரும் ஐந்து பெண் வீராங்கனைகளும் - கலந்து கொண்ட இந்தப் போட்டியில் ஒவ்வொருவரும் தலா இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர்.
அவர்களின் சாதனை நமது சமுதாயத்திற்குப் பெருமையே.. அவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார்கள் என்பது உண்மையானாலும் அவர்களது திறமையை நாடு அங்கீகரிக்கிறதா என்பது ஐயத்திற்குரியதாகத்தான் தோன்றுகிறது. பன்னிரண்டு பதக்கங்களைப் பெற்றிருக்கும் நமது வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு என்ன செய்திருக்கிறது என்கிற கேள்வி எழுந்தாலும் வழக்கம் போல தலையாட்டி விட்டுப் போக வேண்டிய நிலை தான்!
இந்த நேரத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்த வீரர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய செய்தியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு ரொக்கமும் சான்றிதழும் வழங்கியிருப்பது ஆறுதலான செய்தி. நமது வீரர்கள் - வீராங்கனைகள் மதிக்கப்பட வேண்டும்; போற்றப்பட வேண்டும். நமக்குள் பாராட்டப்படுவது போன்று விளையாட்டுத்துறை அமைச்சும் அவர்களுக்குத் தக்க சன்மானங்கள் வழங்கி கௌரவிக்க வேண்டும். விருதுகளும் வழங்க வேண்டும். வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ். என். ராயர் இது போன்ற பிரச்சனைகளை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும்.
எல்லா காலங்களிலும் நம்மைப் புறக்கணிக்கப்பட்ட சமுதாயமாகத்தான் அரசாங்கம் பார்க்கிறது. இந்த வீரர்களின் வெற்றி நாட்டிற்குத்தான் பெருமை. அந்தப் பெருமை தொடர்வதற்கு அரசாங்கத்தின் பங்கு என்ன?
No comments:
Post a Comment