ம.இ.கா. விலிருந்து விரட்டப்பட்டவர் என்பதைத்தவிர வேறு எந்தவொரு தகுதியும் உங்களுக்கு இல்லை. அரசியலில் நீங்கள் இன்னும் ஸிரோவாகத்தான் இருக்கிறீர்கள். உங்களை இன்னும் இந்திய சமுதாயமே நீங்கள் யார் என்று இன்னும் அறிந்து கொள்ளவில்லை. அப்படியிருக்க பினாங்கு உங்கள் தலைமையில் அமைய வேண்டுமென்றால் .....? இதனை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?
கெராக்கான் கட்சியோடு உங்களை ஒப்பிட முடியுமா? அதுவும் சீனர்களின் கட்சி தான். அவர்கள் இன்னும் பலம் வாய்ந்த கட்சி தான். டி.ஏ.பி. க்கு மாற்று கட்சி என்றால் அது கெராக்கான் தான். வேறு யாரும் இல்லை. சீனர்கள் இந்த இரண்டு கட்சிகளில் ஏதோ ஒன்றைத் தான் ஆதரிப்பார்கள். பினாங்கு மாநிலம், அது சீனர்களின் மாநிலம். அது மாறுவதற்கான வாய்ப்பு இல்லை.
புனிதன் சார்! உங்கள் MIPP யின் நிலையை எண்ணிப்பருங்கள். உங்களையோ உங்கள் கட்சியையோ உங்கள் வட்டத்தைத் தவிர யாராவது அறிவார்களா? இந்தியர்களே அறியமாட்டார்கள். அப்படியொரு கட்சியை வைத்துக் கொண்டு நீங்கள் இப்படி தெனாவெட்டாகப் பேசுவது ஒன்றும் புரியவில்லை. நீங்கள் ஏன் ம.இ.கா. விலிருந்து விரட்டப்பட்டீர்கள் என்பது இப்போது தான் புரிகிறது! உங்களுடைய ஆசை நமக்குப் புரிகிறது. ஆனால் மக்களின் ஆசை உங்களுக்குப் புரியவில்லையே!
சார்! சும்மா தமாஷ் பண்ணிக்கொண்டு, கோமாளித்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்காதீர்கள். ம.இ.கா. உங்களுக்குச் செனட்டர் பதவி கொடுக்கிறது என்றால் உடனே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கே ஓடிவிடுவீர்கள். இது தான் உங்களைப் பற்றியான இந்தியர்களின் கணிப்பு.
உங்கள் கட்சி எந்த வகையிலும் இந்தியரிடையே அறியப்படாத ஒரு கட்சி. நீங்கள் தான் பெரிகாத்தானில் இணைந்த முதல் இந்திய கட்சி என்பதால் உங்களுக்குத் தான் முதலிடம் என்று நீங்கள் நினைப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அரசியல் அப்படியல்ல. யாரிடம் செல்வாக்கு உண்டு என்று பார்ப்பது தான் அரசியல். உங்களுக்கு யாரும் புத்தி சொல்ல முடியாது. அப்படிச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
உங்களின் பெரிக்காத்தான் தலைமைத்துவம் என்ன முடிவு எடுக்கிறதோ அதுவரை நீங்கள் பொறுப்பது தான் நல்லது. கோமாளித்தனத்தை நிறுத்தி வையுங்கள்!
No comments:
Post a Comment