பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களைக் கேவலமாகப் பேசுவது என்பது ஒரு சில ஆண்களுக்கு அது இயற்கையாகவே வருவதுண்டு.
இது போன்ற செயல்கள் நம் இனத்தவரிடையே கொஞ்சம் அதிகம். பெண்கள் வெளியே போய் வேலை செய்வதைக்கூட விரும்பாத ஒரு சமூகம் நாம். கல்வி பயில வெளி மாநிலங்களுக்குப் போவதைக் கூட நம் பெற்றோர்கள் விரும்பவதில்லை. அதனால் பல வாய்ப்புகளை நமது பெண்கள் இழந்திருக்கின்றனர்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுருக்காமச் சொன்னால் பிள்ளைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதாகச் சொல்லி நாம் அவர்களுக்குப் பல தடைகளை விதித்திருக்கிறோம். ஆண் பிள்ளைகளுக்கே இத்தனை பிரச்சனை என்றால் பெண் பிள்ளைகளுக்கு இன்னும் எவ்வளவு கெடுபிடிகள் இருக்கும்?
ஆனால் இப்போது இந்தத் தடைகள் எல்லாம் உடைக்கப்பட்டு விட்டன. மலாய்ப் பெண்கள், சீனப்பேண்கள் அந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றுவிட்டனர். நாமும் அவர்களைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழியில்ல.
ஆனாலும் நமது பெண்கள் பொதுவாழ்க்கையில் இறங்குவதை இன்றும் பல ஆண்கள் விரும்புவதில்லை. பெற்றோர்கள் விரும்பினாலும் கல்வி அறிவு அற்ற ஆண்கள் பலர் விரும்புவதில்லை. கல்வி கற்ற பெண்கள், அதுவும் குறிப்பாக, அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்புவதில்லை. பெண்கள் அரசியலில் பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினார்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக வருவதை, குறிப்பிட்ட ஒர் சாரார், விரும்புவதில்லை.
காரணம் சொல்ல வேண்டுமானால் அவர்கள் வீட்டைச் சார்ந்த யாரையும் வெளியே போக அனுமதிப்பதில்லை. தங்களது மனைவிமார்களையோ, பெண்பிள்ளைகளையோ பொது வாழ்க்கையில் ஈடுபட அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அது அவர்களது விருப்பம் நம்மால் எதையும் செய்ய முடியாது.
ஆனால் மற்றவர்கள் வீட்டுப் பெண்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் நம்மால் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அப்படிப் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களை வசைபாடுவது அதைவிடக் கேவலம்.
அமைச்சராக ஒரு மலாய்ப் பெண்மணியோ அல்லது சீனப் பெண்மணியோ இருந்தால் அவர்கள் காலில் விழத் தயாராக இருக்கும் இந்த அறிவற்ற கும்பல் இந்தியப் பெண்கள் என்றால் அவர்களின் ஆரம்பகாலத்திலேயே அவர்களை நசுக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
நாம் சொல்ல வருவதெல்லாம் நமது இந்தியப் பெண்கள் மீது புழுதிவாரித் தூற்றாதீர்கள். நமது சமுதாயப் பெண்களும் வெளி உலகிற்கு வரவேண்டும். இந்நாட்டு மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். பொது வாழ்க்கையில் அவர்களும் மின்ன வேண்டும். மலாய், சீன பெண்களைப் போல் இந்தியப் பெண்களும் அமைச்சர்களாக வரவேண்டும். நாட்டை ஆள வேண்டும்.
பெண்களை அவமானப்படுத்தாதீர்கள்.பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களைக் கண்டபடி பழித்துரைக்காதீர்கள். இன்று நாம் என்ன செய்கிறோமோ அதுவே மீண்டு நமக்கும் வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்!
No comments:
Post a Comment