கேள்வி
உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் ஊத்திக் கொண்டதாக சொல்லப் படுகிறதே!
பதில்
அப்படித்தான் தோன்றுகிறது. நமது மலேசிய நாட்டில் ஓர் ஐந்து நாளைக் கூட தியேட்டர்களில் அது எட்டவில்லை! இது ஆச்சரியம் தான். காரணம் தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ஒரு வாரம் கழித்துப் போகலாம் என்றால் படமே காலி! கமல் படத்துக்கு இப்படி ஒரு நிலையா.....? ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ஏதோ ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாமா? ரஜினியின் காலா படம் ஓடவில்லை. இப்போது விஸ்வரூபம் படம் ஓடவில்லை. அப்படியென்றால் பெரிய நடிகர்களின் படங்கள் ஓடாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருவருமே தமிழக அரசியலின் எதிர்காலங்கள்! நாட்டை ஆள வேண்டும் என வேட்கை உள்ளவர்கள்!
இவர்களின் இருவரின் படங்கள் ஓடவில்லை என்றால் தமிழக மக்கள் இவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று சொல்லுவதா? இந்தியாவை ஆளும் அதிகார வர்க்கம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அவர்கள் ரஜினி வருவதையே விரும்புகின்றனர். ரஜினியும் தான் ஆளும் அதிகாரத்தின் பக்கமே என்று தொடர்ந்து காட்டிக் கொண்டு வருகின்றார்.
தமிழக மக்கள் எதனை விரும்பவில்லையோ அதனை ரஜினி விரும்புகிறார்! தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழர் நலனுக்கு எதிரானவைகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்!
ரஜினி செய்யும் தவறுகளினால் கமலுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறதோ என்பது புரியவில்லை.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதி செய்ய முடியும். அடுத்து வரும் ரஜினியின் படங்கள் எந்த அளவுக்கு வெற்றிபெறுகின்றன என்பதை வைத்தே இந்த இருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்.
விஸ்வரூபம் வசூல் அளவில் தோல்விதான். இவர்கள் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஆனால் அரசியலில் இவர்கள் வெற்றி பெற வாழ்த்தமாட்டோம்! இவர்களின் தோல்வி, தமிழர்களின் வெற்றி!
No comments:
Post a Comment