நடக்கப் போகின்ற போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வரை இப்ராகிமிற்காக அம்னோ தலைவர்கள் சிலர் பிரச்சாரம் செய்ய விரும்புவதாக செய்திகள் வெளியாகிருக்கின்றன! அதனாலென்ன! செய்திகள் செய்திகளாகவே இருக்கட்டும்!
எப்படிப் பார்த்தாலும் இதனை நாம் வரவேற்க வழியில்லை. அம்னோ தலைவர்களில் ஊழலற்ற தலைவர் என்று யாரைச் சொல்லுவது? ம.இ.கா. வினரைப் போலவே அத்தனையும் ஊழல் பெருச்சாளிகள்! ஒன்று திமிங்கலம்! இன்னொன்று குட்டி திமிங்கலம்! ஒன்றொக்கொன்று சளைத்தது அல்ல!
அம்னோ தலைவர்கள் பக்காத்தானுக்கு நல்லது செய்வார்கள் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. அன்வாரை எப்படிக் கவிழ்ப்பது என்று இப்போதும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் முதலைகள் அவர்கள்! அம்னோவில் நல்லவர்கள் என்றெல்லாம் ஒருவரும் இல்லை! அவர்கள் உதவிகரம் நீட்டுவது உதவி செய்ய அல்ல எட்டி உதைப்பதற்கு என்பதை அன்வார் புரிந்து கொள்ள வேண்டும்! அவர்கள் உதவி தேவையே இல்லை! பாம்பு நஞ்சைத் தான் கக்குமே தவிர நல்லது எதுவும் அங்கிருந்து வராது! அம்னோவினர் அம்பைத் தான் விடுவார்களே தவிர அன்பை அல்ல!
இதனை அன்வார் புரிந்து கொள்ளுவார் என நம்புகிறோம். அது மட்டுமல்ல. பி.கே.ஆர்.தலைவர்களும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பி.கே.ஆர்.ருக்காக பிரச்சாரம் செய்ய வருகிறோம் என்று சொல்லுபவர்களை "நன்றி!" என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமே தவிர அவர்களை வரவேற்பது என்பது சிக்கலில் கொண்டு போய் சேர்க்கும்.
போர்ட்டிக்சன் தொகுதி என்பது மலாய்க்காரர்கள் மட்டும் அல்ல சீனர்களும் இந்தியர்களும் அதிகம் உள்ள தொகுதியும் கூட! ஏற்கனவே மலாய்க்காரர்கள் ஓரளவு அம்னோவை ஒதுக்கிவிட்டனர். சீனர்களும் இந்தியர்களும் முற்றிலுமாக பாரிசானை ஓரங்கட்டிவிட்டனர்!
நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அம்னோவின் நோக்கம் சரியானதல்ல! அவர்களை வரவேற்பதும் சரியானதல்ல!
No comments:
Post a Comment