கேமரன்மலையில் இலஞ்சமே வெற்றி பெற்றது என்று நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
மலாய் வாக்காளர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு வகையில் இலஞ்சத்தைப் பெறுகின்றனர். மற்ற இடங்களில் என்ன நடந்ததோ அதையே தான் அங்கும் அம்னோ அரசியல்வாதிகள் தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். இலஞ்சம் கொடுப்பது அவர்களுக்குப் புதிதல்ல. இந்திய வாக்காளர்களுக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணைய் என்று தமிழ் நாட்டு பாணியில் கொடுத்தது பலருக்குத் தெரியும். ஆனால் மலாய் வாக்காளர்களுக்கு அது பணமாக கொடுப்பது வழக்கமான ஒன்று தான்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். தேர்தல் ஆணையம் இப்போது புதிய பொலிவுடன், புதிய மாற்றத்துடன் அவர்களுக்குத் தேவையான அதிகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை தான். இதற்கு முன்னர் நடந்த இடைத் தேர்தல்களில் அவர்களும் முடிந்தவரை ஊழற்ற தேர்தல்களாக நடத்தி முடித்திருக்கின்றனர். ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். தவறுகளை அவர்கள் நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றனர். போகப் போக அது சரியாக்கப்படும் என நம்பலாம்.
ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இதற்கு முன்னர் நடந்த தேர்தல்கள் அனைத்தும் ஆளும் அரசாங்கத்தின் இடைத் தேர்தல்கள். ஆளும் கட்சியான பக்காத்தான் இலஞ்சம் இல்லா தேர்தல் என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறது. அதனால் அவர்கள் இலஞ்சம் என்று எதனையும் கொடுக்கப் போவதில்லை. ஆனால் பாரிசான் அரசியல்வாதிகள் அப்படி எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.
கேமரன்மலை தேர்தல் என்பது எதிர்கட்சியான பாரிசான் அரசாங்கத்தின் - பகாங் மாநிலத்தில் - நடைப்பெற்ற முதல் இடைத் தேர்தல். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் நடைப்பெற்ற ஒரு தேர்தல். அதில் எந்த வில்லங்கமுமில்லை. வெளிப்படையாக எந்த பண பரிவர்த்தனையும் நடைப்பெறும் சாத்தியமுமில்லை.
ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் ...? ஆளுக்கு எவ்வளவு கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிக்க வாய்ப்புண்டு. மாநிலம் அவர்கள் கையில். எதுவும் செய்யலாம். எதுவும் நடக்கலாம். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. மத்திய அரசாங்கத்திடம் ஏகப்பட்ட கடனை அவர்கள் வைத்திருக்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்களின் குரு, நஜிப் எந்தக் கவலையுமின்றி நாட்டையே சீனாவுக்கு அடகு வைத்தவர்! அதனால் எப்பாடு பட்டாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்! ஆக, அவர்கள் எதனையும் செய்ய வாய்ப்புண்டு. செய்தார்கள் என்பது எனது கணிப்பு!
மலையில் இலஞ்சமே மலையேறியது!
Wednesday, 30 January 2019
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது
வருத்தமான செய்தி தான்.
தமிழ் நேசன் நாளிதழ் ஒரு முடிவுக்கு வந்தது. நூறு ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் பொருளாதாரா சுமைகளைத் தாங்க முடியாமல் அந்த நாளிதழ் நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் கடைசி பதிப்பு நாளை 31-1-2019 பதிப்போடு ஒரு முடிவுக்கு வரும்.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பத்திரிக்கை உடனான எனது தொடர்பு ஏறக்குறைய பத்து வயதில் இருந்து ஆரம்பமாகிறது. அருகில் உள்ள கடைக்காரர் தமிழ் நேசன் தான் வாங்குவார். அவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் பற்றாளர். அது காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கை என்பதாகத்தான் வெளி வந்து வந்து கொண்டிருந்தது.அப்போதெல்லாம் திரு என்னும் சொல்லுக்குப் பதிலாக ஸ்ரீ என்னும் சொல்லைத்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். அந்த ஒரு பத்திரிக்கை தான் அத்தோட்டத்திற்கு வரும் ஒரே பத்திரிக்கை. வேறு பத்திரிக்கைகள் உண்டா என்பதுகூட நான் அறிந்திருக்கவில்லை.
அந்த வயதில் அப்படி என்ன செய்திகளைப் படித்திருப்பேன்> ஒரு வேளை சினிமா செய்திகளாக இருக்கலாம்! ஞாபகமில்லை! ஆனால் தினசரி படிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகிற எல்லாக் கதைகளையும் படித்து விடுவேன்! நான் ஒரு சிறுகதை பைத்தியம். அப்போதெல்லாம் யார் சிறுகதைகள் எழுதினார்கள் என்பதை நான் மறந்து போனாலும் ஒரு சில பெயர்கள் இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. "தூதன்" என்னும் பெயரில் ஒருவர் எழுதி வந்தார். மு.தனபாக்கியம் என்னும் யாழ்ப்பாணப் பெண்மணி ஒருவர் எழுதி வந்தார். இவர் சிரம்பானைச் சேர்ந்தவர். உஷா நாயர் என்பவரும் எழுதி வந்தார். லாபு. சி.வடிவேலுவும் ஞாபகத்திற்கு வருகிறார்.வேறு பெயர்கள் எதுவும் உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை.
நான் தமிழ் நேசனுடன் தொடர்புடைய காலத்தில் யார் ஆசிரியராக இருந்தார் என்பது தெரியவில்லை என்றாலும் கு.அழகிரிசாமியின் பெயரும் ஆதிநாகப்பன் பெயரும் இன்னும் மனதில் நிற்கிறது.
ஏறக்குறைய தமிழ் நேசன் நாளிதழை நாற்பது- நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நான் காசு போட்டு வாங்கி படித்து வந்திருக்கிறேன். பின்னர் அரசியல் காரணங்களுக்காக நான் அந்த பத்திரிக்கையுடனான தொடர்பை துண்டித்து விட்டேன்.
தமிழ் நேசன் அரசியல்வாதிகளின் சொத்தாக மாறிய பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவரை நமது
அரசியல்வாதிகளுக்கு அழிக்கத்தான் தெரியுமே தவிர ஆக்கப்பூர்வமாக எதனையும் செய்யத் தெரியாது. அது தான் நடந்திருக்கிறது.
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. வேதனையே!

Tuesday, 29 January 2019
ஊழலை ஒழிப்போம்...!
ஊழலை ஒழிப்போம் என்கிற மாபெரும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் - அதுவே அரசாங்கம் மட்டும் அல்ல - மக்களின் எண்ணங்களும் கூட.
ஆனால் ஐந்து ஆண்டுகள் என்பது தேவை தானா என்கிற ஐயமும் நமக்கு ஏற்படுகிறது. காரணம் பக்கத்தான் அரசு அமைந்த பிறகு பொதுவாகவே ஊழல் குறைந்திருக்கிறது என்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். அதனை நாம் வரவேற்கிறோம்.
இதுவே நமக்கு ஆறுதல். இப்போது குறைந்திருக்கிற இந்த ஊழல் என்பது நேரடியாக மக்களுடன் தொடர்புடையது. இதெல்லாம் சிறிய அளவிலும் உண்டு ஒரு சில பெரிய அளவிலும் உண்டு.
நமக்குத் தேவை அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை சொல்ல முடியாத அளவுக்கு எகிறிப்போய் விட்டது! அதே போல எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் விலைகள் ஏறிப்போய் விட்டன! பல பொருள்களின் விலை ஏற்றம் என்றால் நம் கண்ணுக்குத் தெரியாமல் யாரோ கையூட்டு வாங்கிறார்கள் என்பது தானே அர்த்தம்!
அரசாங்கத்தின் இந்த ஊழல் ஒழிப்பு சரியான வழியில் செல்லுகிறது. எல்லா அரசுத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். விலைவாசி ஏற்றத்திற்கு ஊழல் அதிகாரிகளே காரணம். ஆனால் எங்கு, யார் இந்த ஊழல் அதிகாரிகள் என்பது நமக்குப் புலப்படவில்லை! அரசாங்கம் அதனை அறியும். அரசாங்க அதிகாரிகள் அரசியல்வாதிகளோடு கூட்டுச் சேர்ந்து செய்கின்ற ஊழல்கள் பொது மக்களைப் பாதிக்கின்றது. விலைவாசிகள் ஏறுகின்றன. இங்குக் கைமாறுவது கோடிக்கணக்கில் - அதன் சுமையை மக்கள் சுமக்கின்றனர்!
இந்த செய்தியைப் படிக்கும் போது நமக்கு அதன் விளைவுகள் என்னவென்று தெரிவதில்லை. காரணம் இந்த ஊழல்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் மிகவும் கௌரவமான முறையில் நடைபெறுகின்றது. நஜிப் செய்த ஊழல்கள் நமக்குத் தெரியவில்லையே! ம.இ.கா. செய்த ஊழல்கள் நமக்குத் தெரியவில்லையே! ஆனால் இந்த ஊழல்கள் எல்லாம் மக்களைப் பாதிக்கிறது என்பது கொஞ்சம் ஆழமாகப் போனால் தெரியும்! குறிப்பாக அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் இவர்களைக் கண்காணித்தாலே ஊழல்கள் குறையும்!
ஊழலை ஒழிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்போம்! ஊழல் ஒழிக! ஊழல்வாதிகள் ஒழிக!

Monday, 28 January 2019
பாஸ் - அம்னோ ஒன்று சேருமா..?
பாஸ் - அம்னோ இரு மலாய்க் கட்சிகளும் கேமரன்மலை இடைத் தேர்தலில் ஒன்று சேர்ந்தது மூலம் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லலாம். தோல்வி அடைந்திருந்தால் அது பற்றி பேசாமலே இருந்திருப்பார்கள். ஆனால் வெற்றி ஆயிற்றே!
இந்த இரு கட்சிகளும் சேர்ந்ததில் கிடைத்த கேமரன்மலை வெற்றி அடுத்து வரும் செமன்யி இடைத் தேர்தலிலும் ஒன்று சேர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனலாம். இரு கட்சிகளும் ஒன்று சேராவிட்டால் தொடர்ந்து தோல்விகளைத் தான் எதிர்க்கொள்ள நேரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்.
ஆனால் இந்த ஒன்று சேர்வது என்பது தேர்தல் காலங்களில் மட்டுமே நடக்கக் கூட்டியது. அதுவும் குறிப்பாக இடைத் தேர்தல்களில் மட்டும் தான். பொதுத் தேர்தல் என்று வரும் போது இவர்களால் ஒன்று சேர முடியுமா என்பது கேள்விக் குறியே!
இரு கட்சிகளும் வெவ்வேறு பாதை. வெவ்வேறு கொள்கை.பாஸ் கட்சியினருக்கு அவர்களை விட்டால் இஸ்லாம் பேர் முடியாது என்று நினைக்கிறார்கள்! அம்னோ அவர்களை விட்டால் மலாய்க்காரர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்கிறார்கள்! அத்தோடு அம்னோவுக்கு "தொட்டுக்க தொடைச்சிக்க" இஸ்லாம் தேவைப்படுகிறது! அது மட்டுமல்லாமல் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் ம.இ.கா., ம.சீ.ச. கூட்டணி தேவைப்படுகிறது. ஆக அம்னோ தன்னை ஒரு பல்லின கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. பாஸ் கட்சியின் கொள்கை வேறு.
பாஸ் கட்சி அம்னோவுடன் ஒன்று சேர்ந்தால் மலாய்க்காரர்களின் பலம் அதிகமாகும். மற்ற இனத்தவர்களை அடக்கி ஆள முடியும் என்கிறது பாஸ். சரி எப்படி ஒன்று சேர்ப்பது? பாஸ் கட்சியுடன் அம்னோ ஒன்று சேருமா அல்லது அம்னோவுடன் பாஸ் ஒன்று சேருமா? அது நடப்பது இயலாத காரியம். அம்னோவை விட பாஸ் கட்சியிடம் மிகப்பற்றுள்ள மலாய் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லேசில் அசைந்து கொடுக்க மாட்டார்கள்! அம்னோ நிலை வேறு. அவர்கள் மலாய்க்கரர்களை ஊட்டி ஊட்டியே வளர்த்தவர்கள். கொடுத்து கொடுத்து வளர்த்தவர்கள்! கெடுத்து கெடுத்து வளர்க்கப்பட்டவர்கள்! எந்த நேரத்திலும் அவர்கள் கோபித்துக் கொள்ளலாம்! தடம் மாறலாம்!
இரண்டு கட்சிகளும் ஒன்று சேர பல முயற்சிகள் நடந்தன. அத்தனையும் தோல்வியில் முடிந்தன. பாஸ் கட்சியின் முன்னால் தலைவர் நிக் அசிஸ் அம்னோவை நம்பி பல முறை அம்னோவால் ஏமாற்றப்பட்டவர். அதனால் அவர் கடைசி காலம் வரை அம்னோவை நம்பாலே மறைந்தார்.
இரு கட்சிகளும் ஒன்று சேர வாய்ப்பில்லை. இடைத் தேர்தலில் கூட்டு சேரலாம். அதுவும் அந்தக் கூட்டு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் நீயா, நானா என்கிற பிரச்சனை வரும் போது அனைத்தும் அடிபட்டுப் போகும்.
வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளை ஒன்று சேர்ப்பது என்பது இயலாத காரியம்.
பொறுத்திருப்போம்! அரசியலில் எதுவும் நடக்கலாம்!

Sunday, 27 January 2019
இதுவும் நல்லது தான்..!
கேமரன்மலை இடைத் தேர்தலின் முடிவு நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஆனால் இதுவும் நல்லதுக்குத் தான் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் பாரிசானின் பிடியிலிருந்த ஒரு தொகுதி (இன்னுந்தான்) அந்தத் தொகுதியில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. குறிப்பாக பூர்வீகக் குடியினரின் வாழ்க்கைத் தரம் எந்த ஒரு மேம்பாடும் காணவில்லை. அதே போல இந்தியர்களின் விவசாயத்தையும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.
இது கடந்த காலம். அதனை விடுவோம். முடிந்து போனவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.
இனி எப்படி இருக்கும்? முதல் மாற்றம் அந்தத் தொகுதி இந்தியருக்கும் இல்லை மலாய்க்காரருக்கும் இல்லை. பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் அத்தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அறுபது ஆண்டுகளாக செய்ய முடியாத ஒரு மாற்றத்தை யார் செய்தார். அம்னோ செய்யவில்லை. பக்கத்தான் அரசாங்கம் இந்த மாற்றத்தை அம்னோவின் மூலம் கொண்டு வரச் செய்திருக்கிறது! பக்கத்தான் அரசாங்கம் அமையவில்லை என்றால் அங்கு ஒரு இந்தியரோ அல்லது மலாய்க்காரரோ போட்டியிட்டிருப்பார்! நிச்சயமாக ஒரு பூர்வீகக்குடியச் சேர்ந்த ஒருவருக்கு அம்னோ இடம் கொடுத்திருக்காது! அந்த அளவுக்கு அவர்கள் மேல் அம்னோவுக்கு மரியாதை இல்லை! ஆனால் வருங்காலங்களில் பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் தான் அங்கு போட்டியிடுவார் என நம்பலாம். அதுவே பூர்வீகக்குடியினருக்கு மாபெரும் அங்கீகாரம். முதல் மரியாதைக் கிடைத்திருக்கிறது! வாழ்த்துகள்!
இந்தத் தொகுதி இத்தனை ஆண்டுகள் மாற்றாந்தாய் பிள்ளையாக கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இனி இத்தொகுதி அப்படியெல்லாம் கருத முடியாது. காரணம் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக வேலை செய்ய வேண்டும். அம்னோவினர் எந்தக் காலத்திலும் தொகுதிப் பக்கம் வருவதில்லை! வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தே பழக்கமானவர்கள்! இனி இந்த வேலையெல்லாம் நடக்காது! தொகுதிக்கு என்ன செய்தாய் என்று தலை நிமிர்ந்து கேட்கக் கூடியவர்களாக இந்த மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
வருங்காலத்தில் பகாங் மாநிலம் கண் திறந்த மாநிலமாக இருக்கும். சும்மா காசை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களாக இருக்க மாட்டார்கள்! காரணம் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ளுவார்கள். இலஞ்சம் தலைவிரித்தாடும் போது எந்த ஒரு நல்ல காரியத்தையும் குறிப்பிட்ட நாள்களில் செய்த முடிக்க முடியாது! ஏற்கனவே நமக்குள்ள அனுபவம் தான்!
இந்த கேமரன்மலை இப்போது நமக்கு ஒரு புதிய பாதையைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. பூர்வக்குடியினர் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படும்; ஏற்பட்டே ஆக வேண்டும். இந்திய விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்த்தே ஆக வேண்டும்! சும்மா பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால் சோத்துக்கு ஆகாது!
இது நல்ல மாற்றம் தான்!

Saturday, 26 January 2019
எதிர்பார்த்தது தான்..!
கேமரன்மலையில் பாரிசானின் வெற்றி எதிர்பார்த்தது தான். வெற்றி பெற்ற ரம்லிக்கு நமது வாழ்த்துகள்.
பகாங் மாநிலம் பாரிசானின் கோட்டை என்பது நாம் அறிந்தது தான். நஜிப் என்ன தான் பெரிய கில்லாடியாக இருந்தாலும் அங்குள்ள மலாய்க்கரர்கள் அவர் மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது. காரணம் நஜிப்பின் தந்தை மாநிலத்தின் மந்திரி பெசார் ஆகவும் இரண்டாவது பிரதமராகவும் இருந்தவர். அது போல நஜிப் பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்து பின்னர் நாட்டின் ஆறாவது பிரதமராக வந்தவர். தந்தையும் மகனும் மாநிலத்தின் மந்திரி பெசார்களாகவும் நாட்டின் பிரதமர்களாகவும் இருந்தவர்களில் வேறு யாரும் இல்லை! அதனால் பகாங் மாநில மக்களிடையே தந்தையும் மகனும் மிகவும் ஆழமாக மனதிலே பதிந்துவிட்டவர்கள். அவர்கள் செய்கின்ற மெகா மகாத் தவறுகளைக் கூட மன்னிக்கின்ற மனப்பக்குவம் மக்களுக்கு இருக்கின்றது! இந்த வெற்றியை அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.
வேறு ஒரு கோணத்திலும் நாம் இந்த வெற்றியைப் பார்க்க வேண்டும். பகாங் மாநிலம் பாரிசான் ஆட்சியில் இருக்கின்ற ஒரு மாநிலம். கேமரன்மலையும் விதி விலக்கல்ல. மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் இங்கு நடைமுறைப் படுத்தப்படவில்லை. பூர்வீகக்குடியினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் முன்னேற எந்தவிதத் திட்டங்களும் இல்லை. ஆனாலும் எல்லாக் காலங்களிலும், குறிப்பாக தேர்தல் காலங்களில் பூர்விகக் குடியினருக்குக் கையூட்டுகள் கொடுத்து இது நாள் வரை பாரிசான் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்திருக்கின்றனர். அது போல அம்னோவும் கையூட்டுகள் இல்லாமல் எந்தத் தேர்தலையும் சந்தித்ததில்லை. பொதுவாக மாநில வெற்றி என்பதே அம்னோவின் 'தாராளமயக்' கொள்கை தான்! அப்படித்தான் அவர்கள் தேர்தலோ, இல்லையோ வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள்!
இப்போதும் கூட தேர்தலுக்குப் பின்னர் பணம் பட்டுவாடா - கையூட்டு - செய்யப்படலாம்.! அதற்கான முன்னேற்பாடுகள் மாநில அரசாங்கம் செய்திருக்கும்! இதனையெல்லாம் அவர்கள் செய்யக் கூடியவர்கள் தானே! ஐயப்பட என்ன இருக்கிறது?
கையூட்டுகள் கொடுத்தே மக்களைக் கெடுத்த அரசியல் கட்சிகள் தாங்கள் எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதனையும் செய்வார்கள்! இப்போதும் அது தான் நடந்திருக்கிறது!
பாரிசானின் எதிர்பார்த்த வெற்றி தான்!~

Friday, 25 January 2019
மலை ஏறுவாரா மனோகரன்...?
கேமரன்மலை இடைத் தேர்தல் இன்று 26-ம் தேதி சனிக்கழமை நடைபெறுகிறது.
மக்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படுகின்ற ஓர் இடைத்தேர்தல். அனைத்துத் தலைவர்களும் களம் இறங்கியிருக்கிறார்கள். பக்கத்தான் தலைவர்கள் அனைவரும் லிம் கிட் சீயாங், டாக்டர் மகாதிர் உட்பட இன்னும் பிற தலைவர்களும் மலை ஏறியிருக்கிறார்கள்! முன்னாள் பிரதமர் நஜிப் அவருடைய அரசியல் எதிர்காலம் இந்தத் தேர்தலில் தான் அடங்கியிருப்பதாக நம்புகிறார்!
கேமரன்மலை எல்லாக் காலங்களிலும் பாரிசானின் கோட்டை எனச் சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் அது ம.இ.கா. வின் பாரம்பரியம் மிக்க ஒரு தொகுதி. ஆனால் இம்முறை ம.இ.கா. தனது பாதுகாப்பான தொகுதியை இழந்து விட்டது. பெரும்பாலும் மலாய்க்காரர்கள்-பூர்வக்குடியினர் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
பொதுவாக பகாங் மாநிலம் பாரிசான் ஆட்சியில் இன்னும் இருக்கிறது. நஜிப் பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால் தனது மாநிலத்திற்குள் பக்கத்தான் கட்சி உள் நுழைவதை விரும்பமாட்டார். அப்படி பக்கத்தான் வெற்றி பெற்றால் அந்த இரும்புக் கோட்டை தகர்ந்து விட்டது என்பதற்கான அறிகுறி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இப்போது, அதாவது 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பல மாநிலங்களில் மட்டும் அல்ல மத்தியிலும் பக்கத்தான் அரசாங்கம் ஆட்சி நடத்துகிறது என்பது நமக்குத் தெரியும். அப்படியென்றால் பகாங் மாநில மக்கள் மத்தியில் பக்கத்தான் அரசாங்கத்தைப் பற்றியான கணிப்பு எப்படி இருக்கும்? இப்போது கேமரன்மலை மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?
மலாய்க்கார வாக்களரிடையே அம்னோவும், பாஸ் கட்சியும் தான் இன்னும் மனத்தில் இடம் பிடித்த கட்சிகள் என்பதற்கு எந்த ஆதாராமும் இல்லை! இப்போது பக்கத்தான் கட்சிகளும் மலாய்க்காரரிடையே ஊடுருவல் செய்திருக்கின்றன என்பதையும் மறக்கக் கூடாது.
இன்னொன்று அங்குள்ள பூர்வக்குடி மக்களை யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதற்கு முன்னர் அவர்களுக்குப் பணம் கொடுத்துத் தான் ம.இ.கா. வெற்றி பெற்று வந்தது! பூர்வக்குடியினர் அவர்களது வாழ்வாதாரத்திற்காக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்த நியாயமும் கிடைக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக, இந்தத் தேர்தலில் என்ன நடக்கும்? மலாய்க்காரரிடையே பிளவு, பூர்வக்குடியினரின் முழு ஆதரவு, இந்திய, சீனரிடையே மகத்தான ஆதரவு - இது போதும் பக்கத்தான் வெற்றி பெற!
மனோகரன் மலை ஏறுவாரா? நிச்சயம் ஏறுவார்!

வேறு மாற்று வழி இல்லையா...?
"கம்போங் சுங்கை கெத்தா மக்களுக்கு உதவ தான் ஆசை ஆனால் என்ன செய்வது அவர்கள் மாற்றான் வீட்டு நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக இருந்து கொண்டு சட்டம் பேசினால், நாங்கள் என்ன செய்வோம்?" என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் ஆர்,சண்முகம்.
அவர் சொல்லுகின்ற நியாயத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால் நில உரிமையாளர் நாற்பது ஆண்டு காலமாக அந்த மக்கள் தங்குவதற்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்தாரே அதே போல மின்சாரத்தையும், குடிநீரையும் விட்டுக் கொடுக்கலாமே! மக்கள் தானே அந்தக் கட்டணத்தைச் செலுத்தப் போகிறார்கள். அதற்கு ஏன் தடங்கள்?
ஒரு நில உரிமையாளர் நாற்பது ஆண்டுகள் ஏன் அவர்கள் தங்குவதற்கு அனுமதித்தார்? நாற்பது ஆண்டுகள் ஏன் அவர் பொறுமை காத்தார்? இப்படி எல்லாம் பொறுமை காப்பவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்களா/ இத்தனை ஆண்டுகள் அவர்கள் குடியிருக்க அனுமதித்திருக்கிறார் என்றால் அதைக் கேட்பதற்கே சந்தேகத்தை எழுப்புகிறதே!
பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த நிலத்தை தனது தந்தையார் வாங்கியது எனவும் அதற்கான ரசீதுகள் எல்லாம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லுகிறாரே! ஏழை எளியவர்கள், பாமர மக்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், தோட்டப் பாட்டாளிகள் - இவர்களைப் போன்றோர் பல இடங்களில் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள். இப்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்! .
நிலத்தின் உரிமை ஒருவரின் பெயரில் இருக்கலாம். சட்டம் அவர் தான் உரிமையாளர் என்று சொல்லலாம். ஆனால் அந்த நிலத்திற்கு ஒருவரின் தந்தை பணம் போட்டிருக்கிறார் என்றால் அதனையும் பார்க்க வேண்டும். எங்கே அந்த மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள், எந்த இடத்தில் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த பின்னர் தான் "என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை!" என்கிறார் சண்முகம்! உண்மை தான். நில உரிமை யார் பெயரில் இருக்கிறதோ அவர் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது.
மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்று எப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டுப் பாய்கிறதோ அதே போல அவர்கள் பக்கத்து நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றே கட்டவில்லை என்பது பொய்க் குற்றச்சாட்டு!
சரி இவர்களின் பிரச்சனைக்கு என்ன தான் முடிவு? சண்முகம் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் இதற்கு எந்த முடிவும் கிடையாது என்றே தோன்றுகிறது! கஷ்டப்பட்டு உழைத்து அந்த நிலத்தில் போட்ட பணத்திற்கு எந்த புண்ணியமும் இல்லாமல் போய்விட்டது. அவர்கள் ஏமாற்ற்ப்பட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. என்றாலும் அவர்களால் அதனை மெய்ப்பிக்க முடியவில்லை. பணம் போனது போனது தான்.
பக்கத்தான் அரசங்கத்திலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப்பர்க்க முடியாது!
வேறு மாற்று வழி உண்டா என்பதை ஒய்.பி. தான் சிந்திக்க வேண்டும். காரணம் அது அவரது தொகுதி! அவரது தொகுதி மக்கள்!

Thursday, 24 January 2019
இவர் திருந்தவில்லை! மனம் வருந்தவில்லை!
பத்துமலை பரபரப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. பக்தர்களின் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. ஆனால் பக்தர்கள் பத்துமலையில் செய்த "குப்பை மேடு" கலாச்சாரம் அதிகம்!
சில பிரச்சனைகளை நம்மால் ஏனோ தீர்த்துக் கொள்ள முடியவில்லை. நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சிறிய வயதில் பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்காததால் வந்த வினை இது. பெற்றோர்களே தொடர்ந்து செய்கின்ற தவறுகளைப் பார்த்து குழைந்தைகளும் அவர்களையே பின் பற்றுகின்றனர். பெற்றோர்களை எப்படி திருத்துவது?
நாம் ஒரு புண்ணிய தலத்திற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் நாகரிகம் நம்மிடையே இல்லை. ஏன் புண்ணிய தலங்களுக்குப் போகிறோம்? இறைவனை தரிசிக்க, இறைவனை வேண்ட, இறைவனின் ஆசி பெற , இறைவன் நமது குற்றங்குறைகளை மன்னிக்க, பிள்ளை வரம் கேட்க - இப்படி பல வேண்டுதல்களோடு நாம் புண்ணிய தலங்களுக்குப் போகிறோம். எல்லாம் சரி தவறேதும் இல்லை.
நம் வேண்டுதல்கள் முடிந்ததும் அல்லது நிறைவேறியதும் என்ன செய்கிறோம்? சாப்பிட்டவைகளை ஆங்காங்கே தூக்கி எறிகிறோம். பாதி சாப்பீட்டும், பாதி சாப்பிடாமலும் உள்ள நெகிழிப் பைகளை அனாவசியாமாக கண்ட கண்ட இடங்களில் வீசி எறிகிறோம்.
நண்பர் ஒருவர் சொன்னார்: "சுற்றுப்பிராகரத்தை வலம் வந்து சாமியைக் கும்பிட்டுவிட்டு அங்கேயே சோற்றுப்பைகளை வீசுவதும், குடித்துவிட்டுப் போத்தல்களை தூக்கி எறிவதும் ... சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. நம் சமூகத்தைப் பற்றி நினைக்கும் போது ...சே!....வெட்கமாக இருக்கிறது"
இது ஒரு கஷ்டமான சூழ்நிலை. நாம் நல்லவர்களாக இருக்கலாம். பக்தர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று யாரும் சான்று பகர முடியாது. நல்லவர்களோ, கெட்டவர்களோ ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்றலாம். கார் ஓட்டுகிறோமே சட்டத்தை மீற முடியுமா? சட்டம் நல்லவர்கள் கெட்டவர்கள் பார்ப்பதில்லை. அதே போல ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வீட்டில் உளளே கண்டபடி குப்பைகள் போடுவோமா? சுத்தம் சுகம் தரும் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடம் வீட்டுக்கு மட்டும் அல்ல. பொது இடங்களுக்கும் சேர்த்துத் தான். அதுவும் கோவில் என்பது புனிதம் சார்ந்த இடம். குப்பைகளைக் குவித்து விட்டு, இறைவன் சந்நிதியில் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தனை செய்தால் உங்கள் பிராரத்தனை நிறைவேறுமா?
கொஞ்சம் யோசியுங்கள். பொது இடம் பொது நலம். எல்லாக் காலங்களிலும் நாம் பொது நலத்தைப் பேண வேண்டும். அதுவும் புனிதம் சார்ந்த இடங்களில் இன்னும் அதிகப் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த "குப்பைப்போடும்" கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குப்பைத் தொட்டிகள் வைத்தும் அதனை யாரும் சீண்டிப் பார்ப்பதில்லை. என்ன பொறுப்பற்ற சமூகம் நாம்? எதிலும் ஒழுங்கில்லை! எதிலும் பொறுப்பில்லை! எதிலும் அலட்சியம்!
இன்னும் நாம் திருந்தவில்லை! அது பற்றி நாம் இன்னும் மனம் வருந்தவுமில்லை!
எப்போது திருந்துவோம்? எப்போது மனம் வருந்துவோம்?

Monday, 21 January 2019
YB ஓடி ஒளியாதீர்கள்....!
ஓடி ஒளியாதீர்கள் ஓய்.பி.! என்று தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது!
ஆமாம்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஓடி ஒளிகின்றார் என்றால் அவர் மீது மக்களுக்குச் சந்தேகம் வரத்தான் செய்யும். அவர் யார்? கெடா, புக்கிட் செலம்பாவ் பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் ரெங்கசாமி. இவர் தொகுதியில் தான் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. கம்போங் சுங்கை கித்தா 2 என்கிற அந்த சிறிய கிராமத்தில் சுமார் 70 பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மின்சார வசதி இல்லை அத்தோடு குடிநீர் வசதியும் இல்லை.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் சொந்த நிலத்தில் இருந்து கொண்டு எந்த வித வசதியும் இன்றி வாழுகின்ற மக்கள் இவர்கள். இவர்கள் தங்களது சொந்த நிலம் என்றாலும் இன்னொருவர் இவர்களின் நிலங்களுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்! அது தான் இவர்களின் சோகம்.
கடந்த காலத்தில் அரசாங்கம் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை! இவர்களின் வாக்குகளை மட்டுமே கண்டு கொண்டனர்! இந்த முறை அவர்கள் பி.கே.ஆர். கட்சிக்கு வாக்களித்து தங்களுக்கு விடிவு காலம் வராதா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பி.கே.ஆர். சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் வெற்றிபெற்ற பிறகு அவர்கள் பக்கமே எட்டிப் பார்க்க வில்லையாம்!
இது நமக்கு ம.இ.கா. வினரை நினைவூட்டுகிறதே! இல்லை! இல்லை! இது நமது பக்காத்தான் அரசாங்கம் தான்! இது அவருக்குத் தெரிந்த பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். தெரியாது என்று சொல்ல முடியாது! ஆனால் அவர் ஓடி ஒளிவது தான் நமக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. இது போன்ற பிரச்சனைகள் வரும் போது நாம் என்ன சொல்லுவோம்? "காச வாங்கிட்டான்'பா!" என்று சர்வ சாதாரணமாக சொல்லுகின்ற பழக்கம் நம்மிடையே உள்ளது!
சரி! என்ன தான் செய்யலாம்? இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஓடி ஒளிவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை! பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியுடன் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகமும் இணைந்து இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.
ஏழை எளிவர்களை ஏமாற்றுவது எளிது. நாடெங்களிலும் இப்படித்தான் இந்தியர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! இதற்குச் சரியான முறையில் ஆராய்ந்து ஒரு தீர்வு காண வேண்டும். இன்னும் பிரச்சனையை இழுத்துக் கொண்டு போகக் கூடாது.
நல்லதொரு முடிவை இந்த மக்களுக்குக் கொண்டு வர வேண்டும். ஓடி ஒளியாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்!

Sunday, 20 January 2019
குறைத்துக் கொள்ளுங்கள்...!
தைப்பூசத் திருவிழாவின் போது தேங்காய் உடைப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்துகிறது.
தைப்பூசம் சமயத் திருவிழா. தேங்காய் உடைப்பது நமது பாரம்பரியம். ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படுவதை ஒவ்வோர் ஆண்டும் பார்த்து வருகிறோம்.
தமிழ் நாட்டில் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகின்ற ஒரு திருவிழா. பழனியில் அதிவிமரிசையாக கொண்டாப்படுகிறது.
தமிழ் நாட்டுக்கு வெளியே மலேசியாவில் தான் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பத்துமலை, தண்ணிர்மலை, கல்லுமலை இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குறிப்பிட்ட மலைகளில் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
மலேசியாவில் மட்டும் தான் நீண்ட இரத ஊர்வலங்கள் அதனூடே தேங்காய் உடைப்பது என்பது நம்மிடையே ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி விட்டது. தவறில்லை.
இங்குச் சொல்ல வருவதெல்லாம் தேங்காய்களை வீணடிக்காதீர்கள் என்பது தான். தேங்காய் உடைப்பதில் போட்டி வேண்டாம். நமது மனத் திருப்திக்காக ஒன்று உடைத்தாலே போதுமானது. போட்டிக்காக உடைப்பது போக வேண்டிய இடம் போய் சேராது!
மேலும் தேங்காய் ஓர் உணவுப் பொருள். உடைந்த தேங்காய்களைச் சேகரித்து அதனையே தங்களது பசிக்காக உண்ணும் பலர் இருக்கின்றனர். தேங்காயை உடைக்காமல் அவர்களிடமே உண்ணக் கொடுக்கலாம். உடைப்பதை விட அது இன்னும் மேல்.
பக்தி என்னும் பெயரில் தேங்காய்களை உடைத்து அந்தத் தேங்காய்கள் பலரின் கால்களில் மிதிப்பட்டு, உதைப்பட்டு, அடிப்பட்டு பார்ப்பதற்கே நமது பக்தி கேவலப்படுத்தப் படுகிறதே என்னும் உணர்வும் நமக்கு வேண்டும். பொது மக்கள் ந்டக்கின்ற பாதையில் இப்படி ஆயிரக்கணக்கில் தேங்காய்கள் சிதறிடக்கப்பட்டுக் கிடந்தால் யார் என்ன செய்ய முடியும்? அதனை ஓர் உணவாக நாம் பார்க்க வேண்டும். அதற்கான மரியாதையும் நாம் கொடுக்க வேண்டும்.
பக்திக்கு நாம் மரியாதைக் கொடுக்க வேண்டும். தேங்காய் ஓர் உணவு என்னும் முறையிலும் நாம் மரியாதைக் கொடுக்க வேண்டும்.
வீணடிப்பு வேண்டாம். எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு. அளவுக்கு மீறினால் ....?
அதனால் முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள்!
Saturday, 19 January 2019
ஒரு பிரச்சனை இரண்டு தீர்வுகள்...!
சில சமயங்களில் சில பிரச்சனைகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஒரு பக்கம் சரி என்பதும் இன்னொரு பக்கம் சரி இல்லை என்பதும் பொது மக்களை மாக்களாக நினைக்கும் போக்கு சரியில்லை என்பதே நமது நிலை!
பினாங்கு தைப்பூசத்தில் காளைகளை வைத்து தேர் இழுக்கத் தடை விதித்திருப்பதாக இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் , பினாங்கு துணை முதல்வருமான பி.இராசாமி கூறுகிறார்.
அதற்கு அவர் கூறும் காரணம்: "இது விலங்குகளுக்கு எதிரான வன்முறை. வேண்டுமானால் காளைகளை உடன் அழைத்துச் செல்லுங்கள். அவைகளை வைத்து தேர்களை இழுக்காதீர்கள். பக்தர்கள் தேரை இழுக்கலாம் அல்லது இழுவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இலட்சக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஒரு திருநாளில் காளைகளை வதை செய்வது கொடுமை!" என்கிறார்.
இன்னொரு பக்கம் பார்ப்போம். பினாங்கு நகரத்தார் என்ன சொல்லுகிறர்கள்? அவர்களின் வெள்ளி இரதம் தயார். இரதத்தை இழுக்க 16 ஜோடி காளை மாடுகளும் தயார். இந்து சமய நம்பிக்கையில் மாடுகளை வதை செய்வது என்று ஒன்றுமில்லை. கோமாதா பூஜை செய்து அதற்கான மரியாதை செய்வதால் எந்தப் பாதகமும் இல்லை என்கிறார்கள்.
இதுவும் சரி அதுவும் சரி. ஆனால் எது சரி? காளைகள் வதை செய்வதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் இது வதையா? ஒரு இரதத்தை இழுப்பதற்கு அதன் எடையை வைத்துத் தான் எத்தனை காளைகள் தேவை என்று முடிவு செய்வார்கள். ஆக, அவைகள் அதிகமான பாரத்தை இழுக்க வாய்ப்பில்லை. தாங்கக் கூடிய அளவு தான் இரதங்களை இழுக்கின்றன.
கோமாதா பூஜை அதற்கான மரியாதை என்பதெல்லாம் எந்த அளவுக்கு காளைகளுக்குப் பயனாக இருக்கும்? அவைகளின் பாரத்தைக் குறைக்க அது உதவுமா? பக்தர்களின் பாரத்தைக் குறைக்கத்தான் அனைத்து பூஜை, புனஸ்காரங்களும் நடக்கின்றனவே தவிர மாடுகளின் பாரத்தைக் குறைக்கவா பூஜைகள் நடைபெறுகின்றன!
நமது நோக்கம் அதுவல்ல. நாம் அனைவருமே தலைவராக வேண்டும் என்னும் விரும்பும் சமூகம். அதனால் யார் சொன்னாலும் கேட்க மாட்டோம். யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்னும் தலைக்கனம் நம்மிடம் அதிகம்! அதனால் தான் சீபீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரம் ஒருவரின் மரணத்தில் முடிந்தது.
தலைமை என்பது ஒருவரிடம் தான் இருக்க வேண்டும். எது நல்லது, எது மக்களுக்கு நல்லது, எது அரசாங்கத்திற்கு நல்லது, அரசாங்கத்தின் சூழல் என்று அனைத்தையும் அறிந்து ஓர் முடிவு எடுத்து விட்டால் அதன் பின் நமது கருத்து வேறுபாடுகளை மறந்து அந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு அதனால் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் அது முக்கியம் அல்ல. இது சமுதாயப் பிரச்சனை. சமுதாயத்திற்கு எது நல்லதோ அது தான் முக்கியம்.
இந்தப் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் முக்கியம் அல்ல. பொது நலனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுக்கும் போக்கை நாம் அல்லது நமது தலைவர்கள் என்று சொல்லுபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வறட்டு பிடிவாதம் நமது சமுதாயத்தைப் பாதிக்கும். மக்களைப் பாதிக்கும். உங்கள் சுயநலத்தினால் இந்த சமுதாயம் பாதிப்பதை நாம் அனுமதிக்க முடியாது.
காளை வதையா அல்லது பூஜையா? எது சரி?

இது தான் வெற்றிகரமான தோல்வி என்பது..!
சமீபத்தில் ஒர் அரசியல்வாதி பெண்மணி தனது கட்சியின் தோல்வியைப் பற்றி குறிப்பிடும் போது அது "வெற்றிகரமான தோல்வி!?" என்றார்,
இப்போது நமது சி.ஐ.டி. தலைவர் வான் அகமது நாஜ்முடீன் முகமது அப்படித்தான் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்! கடந்த ஐந்து ஆண்டுகளாக காவல்துறை இந்திராகாந்தியின் மகளான பிரசன்னா டிக்சாவை தேடி வருகின்றது என்றும் இதுவரை பிரசன்னாவையும் அவரது தந்தையும் இந்திராகாந்தியின் முன்னாள் கணவருமான பத்மநாதனையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றும் வான் அகமது கூறுகிறார்.
"நாங்கள் பொது மக்களின் உதவியை நாடுகிறோம். அவரின் இருப்பிடத்தைத் தெரிந்தவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கமாறு பல வேண்டுகோள்கள் விடுத்தும் இதுவரை எந்தப் பயனுமில்லை!" என்கிறார் சி.ஐ.டி. தலைவர்!
பொது மக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? பத்மநாதன் அல்லது முகமது ரிதுவான் சமயத்தைச் சார்ந்தவர்கள் எவரும் அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது தலைவருக்குத் தெரியாதா? காட்டிக் கொடுப்பது சாமிக் குற்றம் என நம்புபவர்கள் எப்படிக் காட்டிக் கொடுப்பார்கள்? சரி அதை விடுங்கள். சீனர்களுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இந்தியர்களின் மத்தியில் ரிதுவான் வாழ வழியில்லை அகப்பட்டுக் கொள்ளுவார்! நேரம் சரியில்லை என்றால் அடியும் வாங்குவார்! ஆக, இப்போது எங்கே தேடுவது? தலைவர் எங்கே தேடிக் கொண்டிருக்கிறார்?
அதனால் பொது மக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? இது மலேசியர்களின் பிரச்சனை அல்ல. ஒரு சமயத்தைச் சார்ந்தவரின் பிரச்சனை. சமயத்தின் மூலம் தான் ரிதுவானுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க முடியும். சமயம் தான் சரியான வழி காட்ட முடியும். சமயவாதிகளின் அறிவுரை தான் அவருக்கு ஏற்றதாக இருக்கும்.
இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் ரிதுவானைக் கண்டுப் பிடிப்பது எளிதல்ல! ஜாகிர் நாயக்-கிற்கே அடைக்கலம் கொடுத்து ஒரு புதிய பாதையை காட்டியவர்கள் நாம். ரிதுவானுக்கும் நம்மால் ஒரு புதிய பாதையைக் காட்ட முடியாதா என்ன?
இந்த நீண்ட நாள் தேடுதல் வேட்டை காவல்துறைக்கு ஒரு கஷ்டகாலம். . இதற்கு ஒரு முடிவைக் காண வேண்டும். ஒரு பிரச்சனையை இழுத்துக் கொண்டே போவது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்! அல்லது அது யாரால் முடியும் என்பதை அறிந்து அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
காவல் துறைக்கு இது தோல்வி அல்ல! வெற்றிகரமான தோல்வி!

Friday, 18 January 2019
EWRF வுக்கு நன்றி..!
நமது சமுதாய இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல இயக்கங்கள், மன்றங்கள் தொடர்ந்து அவர்களால் முடிந்த அளவு உதவிகள் செய்து கொண்டு தான் வருகின்றனர். இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
அந்த வகையில் EWRF நீண்ட காலமாக இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஓர் இயக்கம்.
இந்த ஆண்டு தொழிற் திறன் பயிற்சிக்காக பல நூறு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு களம் இறங்கியிருக்கின்றனர். நல்ல நோக்கம். தைப்பூச தினத்தன்று அனைத்து திருத்தலங்களிலும் அவர்களின் முகப்பிடங்களைத் திறக்கின்றனர். பத்துமலை, கெர்லிங், தண்ணிர்மலை, கல்லுமலை இன்னும் அனைத்து திருத்தலங்களிலும் அவர்களின் முகப்பிடங்கள் திறந்திருக்கும்.
இந்த ஆண்டு நாம் இன்னும் அதிகமாக இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து நமது இளைஞர்களுக்கு நாமும் வழி காட்ட வேண்டும்.
இதற்கு முன்னர் யாரும் ஒன்றும் செய்யவில்லையா என்னும் கேள்வி எழுவது இயல்பு. செய்தார்கள். முயற்சி எடுத்தார்கள். நாம் ஐநூறு இளைஞர்களுக்கு விண்ணப்பம் செய்தால் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஐந்து இளைஞர்களுக்குத் தான் வாய்ப்புக் கொடுப்பார்கள்! அது ம.இ.கா. வின் கணக்கு! நமக்குப் புரிய நியாயமில்லை.
ஆனால் இப்போது கணக்கு மாறியிருக்கிறது. இப்போது பக்காத்தானின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கும் என நம்பலாம். நம்புகிறோம். அதனால் தான் காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.
கல்லூரிகளில் இடம் இல்லை என்பதெல்லாம் சும்மா பேச்சு! அவர்களுடைய கணக்கு வேறு. ஒரே இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்றால் வெவ்வேறு உணவுகள் என்கிற பிரச்சனைகள் எழாது. மேலும் திறமையான மாணவர்களை அவர்கள் விரும்புவதில்லை. இருக்கட்டும்! அது அவர்கள் பிரச்சனை. அவர்களுக்காக நாம் முட்டாள்களாக இருக்க முடியாது!
இப்போது நமது தேவை எல்லாம்; தொழிற் திறன் பயிற்சி பெற யார் யார் தகுதி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் தொழிற் பயிற்சி பெற வேண்டும்.
எங்குப் படித்தாலும் இன்னும் மேலே படிக்கின்ற வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் வரை போகலாம். படிக்கலாம். ஒரு தடையும் இல்லை.
ஒரு தகுதியும் இல்லாமல், ஒரு பயிற்சியும் இல்லாமல் வருங்காலங்கலில் உங்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கான தகுதியை இழந்து விடுவீர்கள். இன்றைய காலம் என்பது கல்வி சான்றிதழ் காலம்! ஏதாவது ஒரு பயிற்சி. ஏதாவது ஒரு சான்றிதழ். அது தான் உங்களுக்கான வேலை வாய்ப்புக்களைக் கொண்டு வரும்.
இந்த ஆண்டு முதல் நம் நாட்டு தொழிற் மையங்களில் நமது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக வேண்டும். இதுவே நமது கோரிக்கை.
மீண்டும் EWRF வுக்கு நன்றி!

Thursday, 17 January 2019
இதுவும் அத்திப்பட்டி தான்....!
இங்கு, நமது நாட்டில், தமிழர்கள் வாழுகின்ற சில இடங்களைப் பார்க்கின்ற போது "அத்திப்பட்டி" யை விட இன்னும் கேவலமாக இருக்கிறது என்பது உண்மை!
ஒரு காலத்தில் தோட்டப்புறத்தில் வாழ்ந்தவர்கள் என்னவோ சொந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்தாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களது கடமைகளைச் செய்யாமல் இருப்பது என்ன காரணம் என்று நமக்குப் புரியவில்லை.!
இவர்கள் கடமைகளைச் செய்யாமல் தடுப்பவர் யார்? இங்கு வாழ்கின்ற மக்கள் தங்களுக்குத் தண்ணீர் வசதி வேண்டும், மின்சாரம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநிலத்தின் மந்திரி பெசார் வரையில் சென்றிருக்கிறார்கள். ஆனால் எதுவும் நகரவும் இல்லை, நடக்கவும் இல்லை! வேறு எங்கு செல்வது?
கெடா மாநிலம், பீடோங் அருகே, கம்போங் சுங்கை பெத்தா, டிவிஷன் 2, என்கிற பெயருள்ள தோட்டமே அது. ஒரு வசதியும் இல்லாத ஒரு தோட்டத்தில் வாழ்ந்து கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்க இவர்களுக்கு என்ன தலைவிதியா? யாரும் சீண்டாத ஒரு தோட்டம் தான். ஆனால் தேர்தல் வரும் போது மட்டும் வாக்குகளுக்காக அவர்களைத் தேடிப் போகிறார்களே அது ஏன்?
சரி, அது தான் பாரிசான் அரசாங்கம்! இப்போது நிலைமை மாறி இருக்கிறதே!
மாநில பக்கத்தான் அரசாங்கத்தில் இந்தியர்களின் விவகாரத்திற்குப் பொறுப்பானவர் சண்முகம் ரங்கசாமி. தண்ணீர், மின்சாரம் - பொறுப்பு சாம்ரி யுசோப். அதற்கு மேல் மந்திரி பெசார். அதற்கு மேல் அன்வார் இப்ராகிம். இன்னும் பிரதமர் வரையிலும் போகலாம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு வேலை கொடுக்கப்பட வேண்டும். அவர்களை வேலை வாங்க வேண்டும்.
முடியாது என்று எதுவும் இல்லை. முடியாது என்று சொல்லப்பட்ட ஒரு சில விஷயங்கள் இப்போது முடிகிறதே! முடியும் என்று நம்புங்கள். அத்திப்பட்டியை அலங்காரப்பட்டியாக ஆக்கிக் காட்டுங்கள்! குனிந்தது போதும்! நிமிர்ந்து நில்லுங்கள்! உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்!
அத்திப்பட்டி அல்ல! அலங்காரப்பட்டி!

பெட்ரோல் விலை குறைந்தது..ஆனால்...?
பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி. ஒவ்வொரு வாரமும் விலை ஏறுமா, இறங்குமா என்று இப்போது பார்க்க வேண்டியுள்ளது. இறங்கினால் மகிழ்ச்சி தான்!
எண்ணைய் விலை குறைந்தாலும் விலைவாசிகளின் விலை குறைய வேணடுமே என்கின்ற எதிர்பார்ப்பு இயற்கையாகவே பொது மக்களுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படி குறைகின்ற சாத்தியம் உண்டா என்கின்ற கேள்வி எழும்போது கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது! காரணம் விலைவாசி ஏறினால் ஏறியது தான் என்கிற ஒரு மனப்பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டோம். அதே போல வியாபாரிகளும் விலைகளை ஏற்றத் தயராக இருக்கிறார்களே தவிர குறைக்க வேண்டும் என்னும் மனப்பக்குவத்தை இன்னும் பெறவில்லை. ஏறினால் ஏறியது தான் என்பது அவர்களின் அன்றாட மந்திரமாக ஆகி விட்டது.
ஒரு சிறிய விஷயம் தான். எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி விட்டது. பழங்கள் தான். எல்லாம் நாட்டுப் பழங்கள் தான். இரண்டு, மூன்று வெள்ளி விற்றவை இப்போது நூறு விழுக்காடு ஏறி விட்டது! எதுவும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாக வில்லை! உள்ளூர் பழங்கள் தான்! எண்ணைய் விலை குறைந்து விட்டதே அப்புறம் ஏன் விலை ஏறுகிறது? அதற்கும் காரணம் உண்டு.
"இப்போது தானே எண்ணைய் விலை குறைந்திருக்கிறது. இதற்கு முன் நாங்கள் வாங்கிய உரம், மருந்துகள் எல்லாம் ஏகப்பட்ட விலை கொடுத்துத் தானே வாங்கினோம். இப்போது நாங்கள் விலைகளைக் குறைத்தால் எங்களுக்கு நட்டம் வரும் இல்லையா?" என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்!
இதனையே காரணமாக வைத்து சில காலங்களைக் கடத்துவார்கள்! அடுத்து விலை எப்போது ஏறும் என்று தான் அவர்கள் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்!
எது எப்படியோ நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். விலைவாசியைக் குறைப்பது என்பது கடைக்காரர்களால் இயலாத காரியம். அரசாங்கம் தலையிட்டால் ஒழிய விலைகள் குறைகின்ற வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் அரசாங்கமே விலைகளை நிர்ணயிக்க வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்களில் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள்.
இப்போது அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் இருக்கின்ற விலைகளை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் விலைகள் குறைக்கப்பட வேண்டும். முன்பெல்லாம் இன்று எண்ணைய் விலை ஏறினால் நாளை அனைத்து விலைகளும் ஏறிவிடும்! ஆனால் இப்போதோ எண்ணைய் விலை குறைந்து ஒரு மாதம் ஆகியும் எதுவும் குறைந்த பாடில்லை!
ஏறியது ஏறியது தான் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது! அதற்கு ஒரு முடிவு கட்டுவது என்பது அரசாங்கத்தால் முடியும்! முடிய வேண்டும்!

Wednesday, 16 January 2019
ஆறு மாதங்களே போதும்..!
அரசு சாரா இயக்கமான "டிரா" அமைப்பு அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
நம்மைப் பொறுத்தவரை குடியுரிமை, நீல அடையாள அட்டை - இவைகள் தான் நம் இனத்தவரிடையே முதலிடம் வகிக்கிறது. நீல அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்காது. இது தான் தலையாயப் பிரச்சனை. வேலை இல்லாதவன் எப்படி வாழ்வான்? அவன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்?
அவன் வேறொரு நாட்டில் பிறந்திருந்தால் அவனுடைய நிலைமை வேறு. ஆனால் அவன் இங்குப் பிறந்தவன். இந்த மண்ணில் பிறந்தவன். ஏதோ ஒரு காரணம் அவன் பிறப்பு பதிவு செய்யபட வில்லை. அதற்கு அவன் காரணமல்ல. என்னைக் கேட்டால் அரசாங்கமே அதற்குக் காரணம் என்பேன்! எப்படிப் பார்த்தாலும் அதற்கான காரணம் அரசாங்கம் தான்!
குடியுரிமைக்காக காத்திருக்கும் ஆண்டுகளுக்கு எந்த வரம்புமில்லை! பத்து ஆண்டுகல், இருபது ஆண்டுகள் என்று காத்துக் கிடப்பவர்கள் ஏராளம்! எதற்கும் ஒரு வரம்புண்டு.
எந்தத் தலை போகிற பிரச்சனையானாலும் அரசாங்கம் மனது வைத்தால் ஆறு மாதங்களே போதும். முடியாது என்று சொல்லுவதற்கு எந்த நியாயமுமில்லை. அப்படி முடியாது என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் தங்களது பணிகளைப் பொறுப்புணர்வோடு செய்யவில்ல என்பது பொருள்! நிறைய சோம்பேறிகளை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!
அரசாங்கம் பொறுப்பில்லாமலிருந்தால் பொது மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா என்பது தான் கேள்வி. நாம் சொல்ல வருவதெல்லாம் காத்திருக்கும் நாள்களைக் குறையுங்கள் என்பது தான். முந்தைய அரசாங்கத்தில் குட்டி நெப்போலியன்களின் அதிகாரம் தூள் பறந்து கொண்டிருந்தது என்பது நாம் அறிந்தது தான்! இப்போது பக்கத்தான் அராசங்கத்திலும் அது தான் நடக்கிறது என்றால் புதிய அரசாங்கமும் வீண் என்கிற எண்ணம் தானே மக்களிடம் ஏற்படும்!அதுவும் குறிப்பாக இந்தியர்கள் குடியுரிமை, அடையாள அட்டை அதனால் ஏற்படுகின்ற வேலையில்லாப் பிரச்சனை என்று ஒரு சங்கிலித் தொடர் நீண்டுக் கொண்டே போகிறதே! பழைய அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு தானே புதிய அரசாங்கம்?
டிரா அமைப்பு என்ன வேண்டுகோள் வைக்கிறது? குடியுரிமை கொடுப்பதை விரைவு படுத்துங்கள். நீல அடையாள அட்டை கொடுப்பதை விரைவு படுத்துங்கள். சிவப்பு அடையாள அட்டையை விரைவு படுத்துங்கள். தத்தெடுப்பு விவகாரங்களை விரைவுபடுத்துங்கள். விரைவு என்பது தான் அவர்கள் விடுத்திருக்கும் கோரிக்கைகளின் சுருக்கம். இதைத் தான் மக்களும் சொல்லுகிறார்கள். மக்களின் சார்பில் அவர்களும் சொல்லுகிறார்கள்.
ஒரு வித்தியாசம். தேர்தல் சமயத்தில் இந்தக் கோரிக்கைகளைப் பற்றி பேசிய அன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் - இன்று நாட்டை வழி நடத்தும் அதே அரசியல்வாதிகள் - பேசாமல் வாய் திறக்க முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள்! ஆனால் மக்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் பேச வேண்டிய கட்டாயம்.
ஆமாம்! பிரச்சனைகளைத் தீர்க்க ஆறு மாதங்கள் போதும்!

மனிதம் இன்னும் வாழ்கிறது..!
சில சமயங்களில் சில செய்திகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
அத்தகையைச் செய்தி தான் இன்று காலை படித்த செய்தி. ஏழு வயது மாணவி பள்ளிவிட்டுப் போகும் போது வீட்டுக்குப் போகும் பாதையைத் தவற விட்டார். அப்போது ஒரு நல்ல மனிதர் - ஒரு மலாய்க்காரர் - அவரது காரில் அந்தக் குழந்தையை ஏற்றிக் கோண்டு போய் அவரது வீட்டில் விட்டார் என்பது தான் அந்தச் செய்தி.
பொதுவாகவே பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லி வளர்க்கிறோம்? யாருடைய காரிலும் ஏறாதீர்கள். புதிய - அறிமுகமில்லாத, தெரியாத மனிதர்கள் என்றால் ஒதுங்கி நில்லுங்கள். என்கிறோம். நம தினசரி கடமைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. அப்படி சொல்லுவதிலும் ஒரு நியாயமுண்டு. காரணம் நாட்டில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது பெற்றோர்கள் எந்த அளவுக்கு அவர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது விளங்கும்.
ஆனால் அந்த மலாய்க்கார நண்பர் அனைத்தையும் பொய்யாக்கி விட்டார். கடத்தல் சம்பவங்கள் ஒரு தொடர் கதையாக நடக்கும் நாட்டில் இப்படி ஒரு சம்பவமா என்று நமக்கு வியப்பைத் தருகிறது!
ஆனாலும் இப்படி ஒரு சம்பவத்தை வைத்து பெற்றோர்கள் ஏந்த ஒரு முடிவுக்கும் வந்து விட முடியாது. கடத்தல்காரர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கும் வரை கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.
எனக்குத் தெரிந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு தமிழ்ப்பள்ளிக்கு முன்னால் நடந்தது. பள்ளிப் பேருந்துக்காக காத்துக் கிடந்த ஒரு மாணவியை ஒரு வேனில் வந்த நபர் "உன் தகப்பனார் காரில் அடிபட்டு விட்டார் உடனே வா!" என்று அழைத்திருக்கிறான். அந்த மாணவி சுதாகரித்துக் கொண்டாள். "நான் தலைமை ஆசிரியரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று பள்ளி அலுவலகத்தை நோக்கி ஓடிவிட்டாள். இது உண்மை சம்பவம்.
இது போன்று பல சம்பவங்கள் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எப்படியோ கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். தப்பிப்பது எளிது என்கிற போது கடத்தல் சம்பவங்கள் கூடிக் கொண்டே போவதும் நடந்து கொண்டு தான் இருக்கும்.
எது எப்படி இருப்பினும் பெற்றோர்கள் அசட்டையாக இருந்து விடக்கூடாது. ஏதோ ஒரு சம்பவம். எந்தப் பக்கமும் பாதிப்பு இல்லை. நல்ல மனதோடு அந்த மனிதர் உதவி செய்திருக்கிறார். நல்லவர்கள் நாடெங்கிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த நல்லவர்களை வாழ்த்துவோம்; வரவேற்போம்!
மனிதம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது! அது மலர வேண்டும்! பெருக வேண்டும்!

Monday, 14 January 2019
மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்..!
சில சமயங்களில் சில செய்திகளைப் படிக்கும் போது நமது மனம் கனத்துப் போகிறது.
வாழ்க்கை மனிதனை எப்படியெல்லாம் மாற்றியமைக்கிறது. சரியான பாதை, சரியான வழி தெரியவில்லையென்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. அதுவும் ஏழை எளியவராய் பிறந்து விட்டால் சொல்லவே வேண்டாம். தொட்டதெல்லாம் தொட்டாசிணுங்கி என்றால் என்ன தான் வழி?
இப்படித்தான் ஒரு நண்பரைப் பற்றி படிக்க நேர்ந்தது. கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள். நிரந்தர வேலை இல்லை. அவ்வப்போது கிடைத்த வேலைகளை செய்து வந்தார் அவர். மனைவி ஆஸ்த்மா நோயாளி. அவருக்கும் வேலை இல்லை. ஏதோ பூ மாலைகள் கட்டும் வேலை. கொஞ்சம் வருமானம்.
இந்த நேரத்தில் விபத்தில் மாட்டினார் அந்தக் குடும்பத் தலைவர். கால் முறிந்தது. நடப்பதில் சிரமத்தை எதிர் நோக்கினார். வீடு இல்லை. வேலை இல்லை. பேரூந்து நிலையத்தில் கொஞ்சம் நாள் வாசம். அருகில் இருந்த இஸ்லாமிய உணவகம் அவருக்கு உணவுகள் கொடுத்து உதவியது. அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் பள்ளியிலேயே இலவச உணவு கிடைக்கும்.
கடைசியில் அவருக்கு உதவியது எல்லாம் ஒரு வாளி தண்ணீரும் ஒரு துண்டும். அதனை வைத்து வியாபாரத்தைத் தொடங்கினார். கார்களைத் துடைத்து அங்கிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து ஏதோ வாழ்க்கை ஓடியது. நல்ல காலம் என்றால் எழுபது வெள்ளி கிடைக்கும். கெட்ட காலம் என்றால் ஒன்றுமே கிடைக்காது! இந்த நேரத்தில் அவருடைய மகளும் கொஞ்சம் உதவியாக இருப்பார். வலிய போய் வாடிக்கையாளர்களைக் கேட்டு தந்தைக்கு தொழிலைக் கொண்டு வருவார்.
இந்த நேரத்தில் தான் ஒரு மலாய்க்கார நண்பர் நல்ல உள்ளம் படைத்த மனிதர் அவருடைய பிரச்சனைகளை அறிந்து தனது முகநூலில் அதனை வெளியிட்டு உதவி செய்ய நினைப்பவர்கள் அவருக்கு உதுவுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இப்போது சுகுமாரன், கண்ணகி அவரது பிள்ளைகள் ஷர்மினி, ஹரிஹரன் ஆகியோரது வாழ்க்கை மாறி விட்டது. அந்த மலாய்க்கார நண்பருக்கு ஆயிரம் கோடி வாழ்த்துகள்! முகநூலை எதெதற்கோ பயன்படுத்துகிறோம். ஒரு நல்ல காரியம் செய்தால் எப்படி நல்லது நடக்கும் என்பது நமக்குக் கிடைத்த பாடம்.
ஒரு விஷயத்தில் நான் அந்தத் தம்பதியரைப் பாராட்டுகிறேன். அவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆம், சராசரியை விட கீழ் நிலையில் இருந்த அந்தத் தம்பதியினருக்குக் கல்வியின் மேன்மை தெரிந்திருக்கிறது.
இது போது இந்த சமுதாயம் உயர்வதற்கு!

சகிப்புத்தன்மை உங்களுக்கும் சேர்த்துத்தான்...!
இந்நாடு ஓர் இஸ்லாமிய நாடு. இதனை நாம் - அனைத்து மதத்தினரும் - ஏற்றுக் கொண்டது தான். இங்கு வாழ்கின்ற மக்கள் இஸ்லாமியர், கிறிஸ்துவர், இந்துக்கள், பௌத்தர்கள், பாரம்பரிய சீன மதத்தினர் இன்னும் சிறு சிறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இது தான் மலேசியா. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமே சுமார் 70 விழுக்காட்டினர். கூடலாம அல்லது குறையலாம். ஆனால் இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சி என்பது அசுர வளர்ச்சி எனலாம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சியே அன்றி எந்தத் தளர்ச்சியும் இல்லை. மற்ற மதத்தினரின் வளர்ச்சி என்பது வெறும் பூஜ்ஜியமே! குறைகிறதே தவிர கூடுகிறது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.
ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் அதுவும் குறிப்பாக இஸ்லாமிய அரசியல்வாதிகள் பேசுகின்ற போது எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறது என்று அதிசயத்துப் போகிறோம்! இவர்கள் அரசியல் இலாபம் பெறுவதற்கு எதை எதையோ கற்பனையான செய்திகளையெல்லாம் வெளியிட்டு வேஷம் போடுகிறார்களே என்று அவர்களின் அறிவின் மீதே நமக்குச் சந்தேகம் வந்து விடுகிறது!
அந்த அறிவு ஜீவிகளில் ஒருவர் தான் ரிசால் மரைக்கான்! பினாங்கு, கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற ஊறுப்பினர். அம்னோவின் தங்க மகனில் ஒருவர்! இவர் பெயரைப் பார்த்தாலே தெரியும் கலப்பற்ற தூயவர் என்பது!
ஒரு செய்தியை அவர் கொண்டு வந்திருக்கிறார். பினாங்கில் ஏதோ ஒரு கட்டடத்தில் இரவு நேரத்தில் விளக்குகள் போடப்பட்டதும் சிலுவை வடிவில் ஒளி வீசுகிறதாம்! பாவம்! பயந்து போயிருக்கிறார் மனிதர்! பினாங்கு தீவுக்கு ஏதோ அபாயம் வந்து விட்டதோ என்று எண்ணி புலம்பியிருக்கிறார்! உடனே தனது பரிவாரங்களுக்கு ஓலமிட்டிருக்கிறார்! போய் காவல்துறைக்கு புகார் செய்யுங்கள்! ஆபத்து நெருங்கிவிட்டது என்று.
இப்படியெல்லாம் இவரால் எப்படி கற்பனை செய்ய முடிகிறது? மரைக்காயர் அடிக்கடி ஒன்றை மறந்து விடுகிறார். இஸ்லாமியர்களோ எழுபது விழுக்காட்டினர். கிறிஸ்துவர்களோ பத்துக்கும் குறைவான விழுக்காட்டினர். இந்தப் பத்துக்கும் குறைவான விழுக்காட்டினர் எப்படி எழுபது விழுக்காட்டினருக்கு மிரட்டலாக இருக்க முடியும்?
இப்படி பத்து விழுக்காட்டுக்கும் குறைவான கிறிஸ்துவர்களைப் பார்த்து ஏன் மரைக்காயர் புலம்புகிறார்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் ஆபத்து ஆபத்து என்று கத்தினால் உங்களிடம் ஏதோ குறைபாடு இருக்கிறது என்பது தான் அர்த்தம்! எழுபது விழுக்காடு மக்கள் பத்து விழுக்காடு மக்களைப் பார்த்து பயப்படலாமா? இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். மக்களிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அரசியல்வாதிகளிடம் தான் பிரச்சனையே! ஏன் அவர்களிடம் பிரச்சனை? காரணம் அவர்கள் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல. கூடுதலாக அவர்கள் திருடர்களாகவும் இருக்கிறார்கள்! அது தான் அவர்களை அடிக்கடி புலம்ப வைக்கிறது!
நண்பரே! சகிப்புத்தன்மை எங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் சேர்த்துத் தான்!
Sunday, 13 January 2019
இது எப்படி நடக்கிறது..?
சில விஷயங்களை நம்மால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. தமிழ்ப்பள்ளி பிரச்சனை என்னும் போது நமக்கு மனம் வலிக்கத்தான் செய்கிறது.
ஆனால் என்ன செய்வது? பாரிசான் ஆட்சியில் உள்ள மிச்சம் உள்ள எச்சங்களை அரசு எதிர்நோக்குகிறதோ இல்லையோ தமிழ்ப் பள்ளிகளை நேசிக்கும் நமக்கு அரசை விட அதிகமாகவே நாம் பாதிப்படைகிறோம்.
காஜாங், செமினி தமிழ்ப்பள்ளியின் நுழைவாயிலை மாநகர் மன்ற அதிகாரிகள் உடைக்க முயற்சி செய்த போது அதனைப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக செய்தி.
ஆக, இது புது செய்தி அல்ல. பழைய செய்தி. நம்மைப் போன்று வெளியே உள்ளவர்களுக்குப் புதிய செய்தி. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இதனை அறிந்திருக்கின்றனர். பள்ளி நிர்வாகம் இதனை அறிந்திருக்கிறது அவர்களுக்கு அது புதிதல்ல.
எப்போது இந்தப் பிரச்சனை ஆரம்பமானது என்பது தெரியவில்லை. நிச்சயமாக சென்ற பாரிசான் ஆட்சியில் தான். ஆனால் எவ்வளவு நாளைக்கு அதனையே நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? ஏற்கனவே பக்கத்தான் ஆட்சியில் தான் சிலாங்கூர் மாநிலம் உள்ளது. ஆனாலும் கல்வி மத்திய அமைச்சிடம் இருந்தது நமக்குத் தெரியும். அதனால் அப்போது அவர்களால் எதனையும் செய்யா இயலாத நிலை. ஆனால் இப்போது?
கணபதி ராவ் அந்த மாநிலத்தின் பிரச்சனைகளை அறிந்தவர். தமிழ்ப்பள்ளிகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அவர் இந்தத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனையை அறிந்தவராகத் தான் இருப்பார். இப்போது இவர்களது இந்த "நுழைவாயில்" பிரச்சனையை அப்போதே அறிந்த அவர் கொஞ்சம் சிரத்தை எடுத்து இப்போதாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுத்திருக்கலாம். கல்வி என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்காக அவர் அதனை அலட்சியப்படுத்த முடியாது. கல்வி அமைச்சராக இருப்பவர் அவரது கட்சியினர் தான். அவரே அதற்கு ஒரு தீர்வு காண முயற்சி எடுத்திருக்கலாம். அவருடைய நிலைப்பாடு என்னவென்பது நமக்குத் தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் ஒன்று சொல்லுவேன். புதிய அரசாங்கத்தின் மீது நாங்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் மறவாதீர்கள். இத்தனை ஆண்டுகள் பாரிசான் கட்சி எங்களைப் புறக்கணித்து வந்திருக்கிறது இப்போது இவர்களும் அதே பாணி ஆட்சியை எங்கள் மீது திணிக்க வேண்டாம்
முடிந்த அளவு இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டுங்கள். அதுவும் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுங்கள்.
செமினி தமிழ்ப்பள்ளியின் உள்ளூர் அரசியல் என்னவென்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வி முக்கியம். அது தீர்க்கப்பட வேண்டும். முன்னர் நடந்த குளறுபடிகள் இனி வேண்டாம்.
பக்கத்தான் ஆட்சி பக்காவாக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

Saturday, 12 January 2019
வீழ்ந்தார் கேவீயஸ்....!
கேமரன்மலையில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் கேவியஸ்! ! காரணம் தான் தொடர்ந்து கடந்த நான்காண்டுகளாக அங்கு மக்களிடையே சேவையாற்றி நல்ல பெயரோடு இருக்கிறேன் என்கிறார்! என்னோடு சமாதானமாகப் போங்கள் நான் வெற்றிபெற்று காட்டுகிறேன் என்றார்.
அவர் பேச்சு எடுபடவில்லை. சென்ற பொதுத் தேர்தலிலும் அதேயே தான் சொன்னார். அப்போதும் எடுபடவில்லை. அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்? பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார்.!
நான் டாக்டர் மகாதிர், அன்வார் இப்ரகிம் அவர்களின் ஆதரவாளன் என்பதாக ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்! அதனாலென்ன? போடட்டும்! இவர் சொல்லுவதை யார் நம்புவார் என்பது தான் கேள்வி. இவர் பக்கத்தான் மேடைகளில் பேசுவதை மக்கள் விரும்பமாட்டார்கள் அதனால் பக்காத்தான் கூட்டணி இவரை மேடை ஏறாமல் பார்த்துக் கொண்டால் பக்கத்தானுக்கு நல்லது.
இனி இவரின் நிலை என்ன? பாரிசான் பக்கம் திரும்புவார் என நம்பிக்கை இல்லை! கட்சியை மற்றவர்களிடம் விட்டுச் செல்வாரா என்பதும் தெரியவில்லை. காரணம் அவருக்குக் கட்சி வேண்டும். தலைவர் பதவி வேண்டும். கட்சியை அப்படியே பக்கத்தான் பக்கம் திருப்பி விடுவாரா என்பதும் தெரியவில்லை!
இவரைப் போன்ற மனிதர்களைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்? இவர் என்ன இனப் பற்றாளரா? மொழிப் பற்றாளரா? இவரால் நமது தமிழினத்திற்கு என்ன இலாபம்? இந்தியர்களுக்கு என்ன இலாபம்? அல்லது மொத்த மலேசிய இனத்திற்கு என்ன இலாபம்? ஒன்றுமே இல்லை! சுயநலத்தின் மொத்த உருவம்!
இவர் தலைவராக இருக்க வேண்டுமென்றால் யார் இவரை ஆதரிப்பார், இந்தியர்களைத் தவிர! அல்லது பணத்தைக் கொடுத்து சிலரை வாங்கலாம். அப்படித்தான் வாங்கி வைத்திருந்தார்! அதுவும் இப்போது கைவிட்டுப் போய் விட்டது!
இப்போதே ஒன்றைக் கணிக்கலாம். இனி அரசியலில் இவருக்கு அந்திம காலம்! இவரை இந்திய சமூகம் எப்போதோ புறக்கணித்து விட்டது. சீனர்களோ, மலாய்க்காரர்களோ இவரை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டார்கள்! இந்தியர்களில் ஏதோ சில சில்லறைகள் இருக்கலாம்! மற்றபடி அரசியலில் இனி இவர் தலை தூக்க முடியாது.
"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது!" என்னும் கண்ணதாசனின் வரிகள் உண்மையிலும் உண்மை!
இனி எழ வழியுமில்லை! தேவையுமில்லை! வீழ்ந்தது வீழ்ந்தது தான்!
Friday, 11 January 2019
பக்தர்களே இதனையும் நினைவிற் கொள்ளுங்கள்..!
தைப்பூசத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு அவர்களின் பசி தீர்க்க, தாகம் தீர்க்க பல அமைப்புக்கள் உதவி கரம் நீட்டுகின்றன. இது சாதாரண விஷயம் அல்ல.
நம் நாட்டில் இந்த அளவுக்கு வேறு ஏதேனும் சமய இயக்கங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் செய்கின்றனவா என்றால் 'இல்லை' என்று தாராளமாக சொல்லலாம்.
காரணம் தைப்பூசம் என்றாலே பல இலட்சம் மக்கள் கூடுகின்ற இடமாக இப்போது மாறிவிட்டது. அதனால் உணவு விற்பனை என்பது இயலாத காரியம்! தொண்டு நிறுவனங்கள் தான் பக்தர்களின் பசியைப் போக்க வேண்டும்.
பக்தர்கள் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். இந்த உணவுகளுக்கு பின்னால் பலருடைய உழைப்பு இருக்கிறது. பலருடைய பணம் இருக்கிறது. சும்மா எதுவும் கிடைப்பதில்லை ஆனால் உங்கள் கைகளுக்கு வரும் போது அது உங்களுக்குச் சும்மா கிடைக்கிறது! சும்மா கிடைக்கிறது என்பதற்காக அதனை அலட்சியப் படுத்த வேண்டும் என்னும் அவசியம் இல்லை!
உணவு என்னும் போது அது பாதுகாக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அது உணவு. உண்ண உணவு இல்லாமல் பல கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் செத்து மடிகின்றனர். ஏன் நம் நாட்டில் கூட சாப்பிட ஒன்றுமில்லாத ஏழைகள் எத்தனையோ பேர்! மறவாதீர்கள்!
தமிழ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட காஜா புயலினால் என்ன ஆயிற்று? உணவிலே புரண்டவர்கள் எல்லாம் உண்ண உணவில்லாமல் கதறி அழுத காட்சிகளை நாம் பார்த்தோம். இன்னும் அவர்களின் பாடு தீரவில்லை. தீர்க்க ஆளில்லை!
அதனால் பக்தகோடிகளே! உணவுகளைத் தூக்கி எறியாதீர்கள். குப்பைத்தொட்டிகளை வழிய விடாதீர்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். உங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். வயிறாரச் சாப்பிடுங்கள். ஆனால் வீணாக்காதீர்கள். உங்களுக்குத் தேவையான உணவு, குழந்தைகளுக்குத் தேவையான உணவு என்று பிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் அளவு என்ன என்று உங்களுக்குத் தெரியும். யானைகளுக்குப் போட வேண்டியவைகளைப் பூனைகளுக்குப் போடாதீர்கள்!
உணவு வயிற்றுப் பசியைக் போக்கத்தான். அதனைஅழகாக உண்டு ஆரோக்கியமாக வாழுங்கள். இறைவனை வழிபடுங்கள். உணவை வீணடிப்பது மூலம் இறைவனை இம்சிக்காதீர்கள். இறைவன் கொடுத்த உணவு என்று நினையுங்கள். இறைவன் கொடுத்த உணவு என்று நினைத்தால் தான் உங்களுக்கு இறை ஆசி கிடைக்கும்.
உணவை வீணடிக்காதீர்கள்!

Thursday, 10 January 2019
கேமரன்மலை யாருக்கு...?
இன்னொரு இடைத் தேர்தல் வந்துவிட்டது. இப்போது கேமரன்மலை. வெகு விரைவில் இன்னொரு சட்டமன்ற தேர்தல் வரும். ஆக இடைத் தேர்தல்களுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை என்றே தோன்றுகிறது!
இடைத் தேர்தல்கள் பக்காத்தான் ஆட்சிக்கு தொடர் சோதனைகள்! சரி இப்போது நாம் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.
ஆளுங்கட்சியான ஜ.செ.க. வின் சார்பில் நிற்கப் போகிறவர் எம்.மனோகரன். சென்ற இரண்டு பொதுத் தேர்தலிலும் அதே கேமரன்மலை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப் போனவர், அன்றைய பரிசான் ஆட்சியில். இந்த முறை ஆளுங்கட்சியின் சார்பில் நிற்கிறார் எதிர்க்கட்சியான பாரிசான் சார்பில் நிற்பவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியான ரம்லி முகமட் நூர். ரம்லி முகமட் நூர் பழங்குடி மக்களின் பெரும்பான்மையான செமாய் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஓய்வு பெற்றவராக இருந்தாலும் அவருடைய மகனும் இப்போது காவல்துறையில் தனது பணியைத் தொடர்கிறார்.
வாக்களர்களை எடுத்துக் கொண்டால் சீனர்களும் இந்தியர்களும் 45 விழுக்காட்டினர். மலாய்க்காரர்களும் பழங்குடியினரும் 56 விழுக்காட்டினர். இதில் பழங்குடியினர் மட்டும் 22 விழுக்காட்டினர். இந்தத் தேர்தலில் பழங்குடியினர் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது.
பாஸ் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடாததால் முஸ்லிம்களின் வாக்குகள் பாரிசானுக்கே என்று கணிக்கப்படுகிறது. அதாவது மலாய்க்காரர்களின் வாக்கும் பழங்குடியினரின் வாக்கும் பாரிசானுக்குத் தான் என்கிறார்கள்.
ஆனால் ஒன்று. திருடர்களுக்கு (பாரிசான்) வாக்களிப்பதை எல்லா முஸ்லிம்களும் விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது. நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அதே போல பழங்குடியினர் அனைவரும் முஸ்லிம்கள் என்று அடையாளமும் குத்த முடியாது. அவர்களில் கிறிஸ்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இன்னொன்றையும் மறக்கலாகாது. பாரிசான் வேட்பாளர் பழங்குடியினர் என்பது உண்மை. தான்.ஆனால் இந்தப் பழங்குடியினர் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ரம்லி என்ன செய்திருக்கிறார்? அவர்களின் பிரச்சனையை அரசாங்கத்திடம் கொண்டு சென்றிருக்கிறாரா? அவர்களின் பல பிரச்சனைகள் தீரவில்லையே.
இன்றைய நிலை என்ன? கடந்த கால அரசாங்கம் அவர்களின் பிரச்சனைகள் எதனையும் தீர்க்கவில்லை. இன்றைய அரசாங்கத்திடம் அவர்கள் பகைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. பழங்குடியினரும் புதிய அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என நம்பலாம்.
அதனால் வெற்றி பக்கத்தானுக்கே!

Wednesday, 9 January 2019
ஏன் இந்த கருத்துக் கணிப்புகள்..?
நம்மைச் சுற்றி ஏதோ ஒரு சில கருத்துக் கணிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன; தொடர்ந்து கொண்டு தான் இருக்க்ன்றன.
கருத்துக் கணிப்புகள் நாட்டு நலனுக்காக, சமுதாய நலனுக்காக. மக்களின் நல்வாழ்வுக்காக, தங்களை மாற்றிக் கொள்ளுவதற்காக, இரூந்தால் அனைவருக்கும் நலம் பயக்கும்.
ஆனால் குறுகிய மனப்பான்மையோடு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதும், பல சமயத்தினரிடையே சங்கடங்களை ஏற்படுத்துவதும் பொறுப்பற்ற தனம் என்று தான் சொல்ல வேண்டும்.
கருத்து கணிப்புகள் நல்லதை நோக்கியே செல்ல வேண்டும். சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன்.
கருத்துக் கணிப்பு மையம் ஒன்று மலாய்க்காரர்களிடையே ஒரு கணிப்பைச் செய்திருந்தது. அந்தக் கருத்துக் கணிப்பில் மூன்று ஆளுமைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். நிதியமைச்சர் லிம் குவான் எங், சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் கடைசியாக தலைமை நீதிபதி ரிச்ச்ர்ட் மலாஞ்சும்.
இந்த மூன்று ஆளுமைகளைப் பற்றி மலாய்க்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் அந்தக் கருத்துக் கணிப்பு. நிதியமைச்சரைப் பற்றியான கணிப்பு "ஏதோ ஏற்றுக் கொள்ளுகிறோம் பரவாயில்லை!" என்பது தான் அது. "அவர் மலாய்க்காரர் இல்லை என்றாலும் ஏற்றுக் கொள்ளுகிறோம் அரை மனதோடு!" என்றார்கள்.
ஆனால் டோமி தோமஸ் , மலாஞ்சும் நிலைமை வேறு. அவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பிரச்சனை என்பது அவர்களின் சட்ட அறிவைப் பற்றியது அல்ல. பிரச்சனையே அவர்களின் சமயம் பற்றியது. முதலில் அவர்கள் கிறிஸ்துவர்கள். அடுத்து அவர்கள் சட்ட நிபுணர்கள். இவர்கள் எப்படி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இயங்குவார்கள் என்கிற ஒரு சந்தேகம் அவர்களுக்கு! இவர்களோ சட்டம் என்ன சொல்லுகிறது என்று தான் பார்ப்பார்களே தவிர குறிப்பிட்ட சமயம் என்ன சொல்லுகிறது என்று பார்க்கமாட்டார்கள்! ஒரு தலை சார்பு என்ப்தெல்லாம் இவர்களிடம் இல்லை. முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் சமயத்தைச் சார்ந்தே தீர்ப்பளித்தார்கள். ஆனால் இவர்கள் சட்டத்தை அனுசரித்தே தீர்ப்பளிப்பார்கள்.
இப்போது புரிந்திருக்கும் இந்த இரண்டு ஆளுமைகளும் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கான காரணம்.
எல்லா இனங்களிலும் நல்லவர்களை ஆதரிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இலஞ்சம், ஊழல் இல்லாதவர்கள் ஆதரிக்கத்தான் செய்வார்கள். மலாய்க்காரர்களிலும் ஆதரிப்பவர்கள் உண்டு.
நாம் சொல்ல வருவதெல்லாம் எது நல்லது எது கெட்டது என்று யோசியுங்கள். அது போதும். சமயத்தை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்பது தான்!
கருத்து கணிப்புகள் நன்மைக்கே!

"வரலாற்றுப் பேரரசு"
மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கு மேலும் ஒரு விருது. இம்முறை மலேசிய சிகை அலங்கரிப்பாளர் உரிமையாளர் சங்கம் "வரலாற்றுப் பேரரசு" என்னும் விருதினை அளித்துக் கௌரவித்திருக்கிறது.
விருதுகள் முத்துக்கிருஷ்ணனுக்கு ஒன்றும் புதிதல்ல. பல விருதுகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. நிச்சயமாக அந்த விருதுகளுக்கு அவர் தகுதியானவர். அதில் ஏதும் ஐயமில்லை.
நான் அவரை நேரடியாக அறியாதவன். எல்லாம் பத்திரிக்கைகள் மூலம் தான். முதன் முதலாக அவருடைய எழுத்தை, கட்டுரையை, தமிழ் நேசன் நாளிதழில் படித்ததாக ஞாபகம். ஜப்பானில் இருந்து தமிழ் ஒலிபரப்பு என்பதாக அவர் எழுதியிருந்தார். நானும் அதனை ஆதரித்துக் கடிதம் எழுதினேன். அதிலிருந்து அவர் எழுத்து எனக்கு அறிமுகம்.
நான் கட்டுரைகளை அதிகம் விரும்பி வாசிப்பவன். சமீப காலத்தில் தமிழ் மலர் நாளிதழில் அவர் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வியப்படைந்தேன். நிறைய ஆய்வுகள். நிறைய களப்பணிகள். நிறைய சரித்திர வாசிப்புக்கள்.
இப்படியெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் - கொஞ்சம் அல்ல - நிறைய, நிறைய - ஆர்வம் வேண்டும். எத்தனையோ பேர் "போதுமடா சாமி!" என்று சலிப்படைந்து விட்டனர். ஆனால் முத்துக்கிருஷ்ணன் இன்னும் சலிப்படையவில்லை. இன்னும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்! ஏன்? ஒன்று சமுதாய நோக்கம் அவர் எழுத்தில் இருக்கிறது. இனப்பற்று அவரிடம் இருக்கிறது. மொழிப்பற்று அவரிடம் இருக்கிறது. இந்த சமுதாயம் முன்னேற வேண்டும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. இன்னும் அவர் எழுதுவார் என எதிர்ப்பார்க்கலாம்.
இவ்வளவு சொன்ன எனக்கு ஒரு மனக்குறை இருக்கிறது. இவ்வளவு விருதுகள் கிடைக்கப்பெற்ற அவருக்கு இந்த விருதுகள் எல்லாம் எங்கிருந்து வந்தன? எல்லாம் "நமக்குள்ளேயே" கொடுக்கப்பட்ட விருதுகள் என்னும் மனக்குறை எனக்கு இருக்கிறது.
எழுத்தாளர்களுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு, அரசாங்க விருதுகள் கிடைப்பதை ம.இ.கா. வினர் விரும்பவில்லை. அதனால் நாம் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டோம். பக்காத்தான் அரசாங்கம் அப்படி இருக்காது என நம்புகிறோம்.
ஒரு பத்திரிக்கையாளரும், டாக்டர் மகாதிரின் நெருங்கிய சகாவுமான ஏ. காதிர் ஜாசினுக்கு எப்படி டத்தோ விருது கிடைத்ததோ அதே போல முத்துக்கிருஷ்ணனுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். அவரின் திறமைக்கு டத்தோ விருது பொருத்தமானது கௌரவமானது என நம்புகிறேன்.
மீண்டும் "வரலாற்றுப் பேரரசு" அவர்களுக்கு வாழ்த்துகள்!

Tuesday, 8 January 2019
போவான்! போவான்! ஐயோ போவான்!
சில நேரங்களில் நாம் செய்கின்ற தவறுகள் எப்படியெல்லாம் நம்மைப் பாதிக்கிறது என்பதை நாம் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதுவும் படித்தவன் செய்தால்? அதான் பாரதியார் சொல்லிவிட்டாரே: படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான் ஐயோ என்று போவான்! அது போதும்! பாரதியார சொன்னதே போதும்!
சமீபத்தில் அனைத்துலக இந்திய கடப்பிதழைப் புதிப்பிக்க வேண்டிய கட்டாயம். இந்திய தூதரகம் தேவை இல்லை. அவர்களின் முகவர் மட்டுமே.
பொதுவாக இவர்களிடமிருந்து எந்த விஷயத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிவதில்லை! தொலைப்பேசி இருக்கிறது! ஆனால் இல்லை! அவர்கள் அதனைப் பயன்படுத்துவதில்லை! அப்படியே தப்பித்தவறி கிடைத்தாலும் ஒரு முழுமையான எந்தத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற முடிவதில்லை! அது தான் உண்மை.
இணயத்தளத்தில் தேடி அந்த பாரங்களை எடுத்து எழுதலாம் என்றாலும் அங்கும் சரியானத் தகவல்கள் கிடைப்பதில்லை! ஒன்று கிடைக்கும், ஒன்று கிடைக்காது! எதிலும் முழுமையான தகவல்கள் இல்லை! சரி, இணயத்தில் அது இல்லை, இது இல்லை என்றால் அவர்களோ அது இருக்கும் என்பார்கள்!
கடைசியாக எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அங்கேயே போய் தெரிந்து கொள்ளலாம் என்று அங்கேயே விபரங்களைக் கேட்டோம். பிரச்சனை ஒன்றும் இல்லை. அனைத்துக்கும் பணம் தான் மூலம்! அவர்களே செய்து கொடுத்து பணம் வாங்குவது தான் அவர்களின் நோக்கம்!
கடப்பிதழின் புகைப்படம் எப்படி இருக்கும்? நாம் மற்றைய நாடுகளைப் போலத்தான் என்று நினைத்தால் அது தவறு. பாரத்தில் ஓர் அளவு கொடுத்திருப்பார்கள், நமக்கே விபரீதமாக இருக்கும்! அப்படி ஓர் அளவைக் கொடுத்தவர்கள் ஏன் புகைப்பட மாதிரி ஒன்றை அந்த பாரத்திலேயே கொடுக்கக் கூடாது? ஆக, நம் இங்கு எடுக்கும் புகைப்படம் அங்கே செல்லாது! அவர்கள் தான் எடுப்பார்களாம். அதற்கு நாம் ரி.ம. 25.00 வெள்ளிக்கொடுக்க வேண்டுமாம்!
எல்லாமே ஏமாற்று வேலை. விசா எடுப்பதற்கு ரி.ம. 350.00 என்கிறார்கள். அது கடைசியில் ரி.ம. 400.00 வெள்ளிக்கு மேல் போய் முடிகிறது.
நம்முடைய வருத்தம் எல்லாம் ஏன் இப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தான். இணையத்தளத்தில் சரியான தகவல்களைக் கொடுத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கு எதுவுமே முழுமையாக இல்லை. எல்லாம் அரைகுறை! மக்களிடமிருந்து பணம் பறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் அவர்கள் இயங்குகிறார்கள்.
ஒரு மாபெரும் நாட்டின் முகவராக இருக்கும் ஒர் அலுவலகம் இப்படி பித்தாலட்டத் தனமாக நடந்து கொள்ளுவது நமக்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது! அதுவும் படித்தவன் தான் நடத்துகிறான். பொருளாதார ரீதியில் எந்த நஷ்டமும் ஏற்பட வாய்ப்பில்லை. அவனுக்கு நல்ல இலாபம் இருந்தும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? புரியவில்லை!
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று சொன்னாரே பாரதி அதே குரலில் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்...என்று சொன்னதும் நம்மால் மறக்க முடியவில்லை!
போவான்! போவான்! போவான்! ஐயோ என்று போவான்!

Sunday, 6 January 2019
இது யார் தவறு..?
பொதுவாக தமிழைப் புறக்கணிப்பது அரசாங்க பணியாளர்களுக்கு இயல்பான ஒன்று தான். காரணம் 'நீ என்ன பெருசா?' என்கிற எண்ணம் தான். இப்பொழுது அவர்கள் புறக்கணித்தால் "நீ பக்கத்தானுக்கு வாக்களித்தால் மட்டும் உன்னால் என்ன செய்ய முடியும்?' என்கிற கோபம் தான்!
ஆனால் இதனை நாம் சரி செய்ய முடியும். சுகாதார அமைச்சு அதிகாரிகள் உணவகங்களில் "புகை பிடிக்கக் கூடாது" என்கிற விளம்பரங்களை இப்போது உணவகங்களில் பொருத்தி வருகின்றனர். தேசிய மொழி, ஆங்கிலம், சீனம் அனைத்தும் உண்டு, தமிழைத் தவிர. இதன் அர்த்தம் உணவகங்களில் இந்தியர்கள் புகை பிடிக்கலாம் என்று சொல்ல வருகிறார்களா என்பதும் நமக்குத் தெரியவில்லை! அப்படி இருக்க நியாயம் இல்லை!
சில பிரச்சனைகளை மேலிடத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். போர்ட்டிக்சன் நகரில் இது நடக்கிறது என்றால் அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் வருங்கால பிரதமர் என்று சொல்லப்படும் அன்வார் இப்ராகிம். அவருடைய அலுவலகம் அங்கு இருக்கத்தான் செய்யும். அவருடைய பார்வைக்கு அது கொண்டு செல்லப்பட வேண்டும். அல்லது நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது சபாநாயகர் என்று வரிசைப்பிடித்து நிற்கிறார்கள்! இவர்களையெல்லாம் நாம் வெறும் தெண்டச்சோறுகள் என்று நினைக்கிறோம்! உண்டு களிக்கத்தான் பதவியில் இருப்பதாக நாம் நினைக்கிறோம்! அந்த எண்ணங்கள் தவறானது. நமது பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் அவர்கள் பதவியில் இருக்கிறார்கள். மொழி புறக்கணிப்பும் நமது பிரச்சனையே!
முன்பு எல்லா மாநிலங்களிலும் இரண்டு மைல்களுக்கு ஒரு கிளை என்று கொண்டிருந்தது ம.இ.கா. என்ன புண்ணியம்? யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! நாம் சொல்லுவதோடு சரி. அதனை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்!
ஆனால் இப்போதும் அந்த நிலை நீடித்தால் நாம் கேனையன்கள் என்பதில் அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறுமில்லை! இப்போது பி.கே.ஆர்., ஜ.செ.க. - இப்படி எல்லாக் கட்சிகளின் கிளைகள் நாடெங்கிலும் இருக்கின்றன. இது போன்ற புறக்கணிப்பை விவாதிக்க வேண்டும். இனி வருங்காலங்கிலும் இந்த மொழி புறக்கணிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
மாநில ரீதியில் சுகாதார அமைச்சு யாருடைய கண்காணிப்பில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அங்கும் அந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்ல வேண்டும். ரெப்பா, ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர், எஸ்.வீரப்பன் தான் மாநில சுகாதார அமைச்சராக இருக்கிறார். அவரால் அந்தப் பிரச்சனையை எளிதாகத் தீர்த்து வைக்க முடியும். நமக்குள்ளே ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.
நாம் முயற்சி எடுக்காவிட்டால் அது நம்முடைய தவறு தான்!

ஏன் தமிழ்ப் பெற்றோர்கள் தயங்குகின்றனர்?
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைப் பற்றியான ஒரு கட்டுரையைத் தமிழ் மலரில் படிக்க நேர்ந்தது.
இவ்வளவு நாள் நான் தேடி வந்த ஒரு செய்தி இந்தக் கட்டுரையில் கிடைத்தது. சீனப் பள்ளிகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 14,000! பெரிய எண்ணிக்கை தான்.
ஏன் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்? கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அவர்களின் ஆரம்பத் தேர்வு தமிழ்ப்பள்ளிகள் தான். ஆனாலும் பின்னர் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுகின்றனர். ஏன்?
தமிழ்ப் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு பள்ளியைக் கட்ட அல்லது இணைக் கட்டடங்கள் கட்ட சுமார் இருபது ஆண்டுகள் கூடப் பிடிக்கின்றன! அப்படியே தப்பித் தவறி கட்டிவிட்டால் அதற்கு நகராண்மைக் கழக சான்றிதழ் கிடைக்காது! அதனால் அந்தக் கட்டடம் மாணவர்கள் கல்வி பயில இயலாத நிலை! அதன் பின்னர் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
சமீபத்திய ஒரு செய்தி. மாணவர்கள் கொள்கலனில் கல்வி பயிலுகிறார்களாம்! இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் ரயில் பெட்டிகளிலும் தமிழ் படிக்கலாம்!
இன்னும் ஒரு செய்தி. தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள். எது, எதற்கு என்பதெல்லாம் புரியாத புதிர். தலைமை ஆசிரியரை மாற்றம் செய்தால் "மாற்றக்கூடாது" என்பதாக ஓர் ஆர்ப்பாட்டம்! 'சொன்ன மாதிரி ஏன் கட்டடம் கட்டவில்லை" என்பதற்கு ஓர் ஆர்ப்பாட்டம்!
கட்டடங்கள் கட்டுவதாகச் சொல்லி பல இலட்சங்கள் செலவு செய்த பின்னர் கட்டடத்தையே காணோம் என்பதாக ஒரு செய்தி.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குவதற்கு இவைகளெல்லாம் காரணிகள் தான். பெற்றோர்கள் பள்ளிகளுக்குக் கல்வி பயில அனுப்புகிறார்களே தவிர ஆர்ப்பாட்டங்களை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதற்காக அல்ல!
சீனப்பள்ளிகளில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இல்லை என்பது ஒரு நல்ல செய்தி. அதனைப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
நான் மேற்குறிப்பிட்ட அனைத்தும் முந்தைய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிள்ளைகள் போகாமல் தடுப்பதற்குப் பல வழிகளில் சில! தரமற்ற கட்டடங்கள் என்றால் யார் பிள்ளைகளை அனுப்புவார்கள்? கல்வி யமைச்சும், ம.இ.கா,வும் சேர்ந்து தமிழர்களுக்குச் செய்த துரோகம் இது. அதுவும் ம.இ.கா.வில் தலைவர்களாக இருந்தவர்கள் தான்தோன்றித்தனமாக வளர்ந்தவர்கள். அவர்களின் பற்றும் பாசமும் எப்படி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
எப்படி இருப்பினும் தமிழ்ப்பள்ளிகளில் பல மாற்றங்கள், குறிப்பாக கட்டடங்கள் புதிய அரசாங்கத்தால் சீரமைக்கப்படும் என நம்பலாம். கட்டடத்த வைத்துத் தான் "தரமா, தரமில்லையா" என்பதை பெற்றோர்கள் தீர்மானித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? அது அவர்கள் உரிமை அல்லவா!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இவைகளும் காரணங்கள் தாம் என்பது தான்!

Saturday, 5 January 2019
உணவகங்களில் புகைப்பிடிப்பதை ..........!
நமது அரசாங்கத்தைப் பாராட்டுவோம். உணவகங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்தது மிகவும் பாராட்டத் தக்க ஒரு விஷயம்.
எப்போதோ செய்திருக்க வேண்டிய ஒர் செயலை இப்போதாவது செய்திருக்கிறார்களே என மன நிறைவடைவோம். சில எதிர்ப்புக்கள் ], வெறுப்புக்கள் நமக்கு வெளிப்படையாகவே தெரிகின்றன! ஆரம்பம் அப்படித்தான் இருக்கும். போகப் போக சரியாகி விடும்.
ந்ல்ல காரியமோ கெட்ட காரியமோ அதுவும் நல்ல காரியமாக இருந்தாலும் அதனை எதிர்க்க நாலு பேர் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். சிலருக்கு எதிர்ப்பதே பொழுது போக்காக ஏற்படுத்திக் கொண்டார்கள்!
சிங்கப்பூரைப் பற்றி பெருமையாக ஏன் பேசுகிறார்கள்? அவர்கள் உருவாக்கிய சட்டங்கள் தானே! அதுவும் கடுமையான சட்டங்கள்! நமது நாட்டில் அந்த அளவுக்குக் கடுமையாக இல்லை என்பது தான் நமக்குள்ள பிரச்சனை! அப்போதே கடுமையான சட்டங்களை இயற்றி மக்களை மகிழ்ச்சி படுத்தியிருக்கலாம்.
நான் வழக்கமாக போகும் ஒரு 'மாமக்' உணவகத்திற்கு நேற்றுப் போயிருந்தேன். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த உணவகம் அமைதியாக இருந்தது. மாமா அமைதியாகச் சொன்னார்: புகைபிடிக்கக் கூடாதென்பதனால் கூட்டம் குறைந்து விட்டது! அதனாலென்ன கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருப்பார்கள், பிறகு வழக்கத்திற்குத் திரும்பிவிடும் என்றேன்.
ஒரு சில இடங்களில் கொஞ்சம் பிரச்சனை தான். தங்களது திமிரைக் காட்டிவிட்டுப் போவார்கள்!
பொது நன்மையைக் கருதி சில சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. உணவகங்களில் அது மிகத் தேவையான ஒன்று. படித்தவனோ, படிக்காதவனோ பொது நலம் என்றால் என்னவென்று கேட்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். யாரும் பொதுநலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. கொஞ்சமாவது மற்றவர்களின் நலனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
பொது இடங்களில் எச்சில் துப்புவது, சளி சிந்துவது, மற்றவர்களின் முன்னிலையில் மூக்கை நோண்டுவது சே! எல்லா அசிங்கங்களையும் நம் கண் முன்னே செய்யும் போது நமக்குப் பொறுமை இழந்து விடுகிறது! அதுவும் அவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும்'கூலாக' செய்துவிட்டுப் போகிறான்!
நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகிறேன் இன்னும் சட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த சுயநலவாதிகளுக்குச் சரியான தண்டனையைக் கொடுக்க வேண்டும்!
பொது நலம் என்பது அனைவருக்கும் தான்! அனைவரின் நலனுக்கும் தான்! அதனைக் கடைப்பிடிப்போம்!

Thursday, 3 January 2019
கொள்கலனில் ஒரு வகுப்பறை..!
படிப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது; கேட்பதற்கும் கூச்சமாக இருக்கிறது!
ஆமாம், கொள்கலனில் ஒரு வகுப்பறை என்று படிக்கும் போது இப்படியும் மலேசியாவில் நடக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. குவந்தான், ஜெராம் தோட்டத் தமிழப்பள்ளியில் தான் இந்த நிலைமை! முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆறு பேர் இந்த ஆண்டில் சேர்ந்திருக்கின்றனர். கொள்கலனில் படிப்பதற்கு அவ்வளவு போதும் என்று பெற்றோர்கள் நினைத்திருக்கலாம். ஆமாம். அங்கு என்ன அமைச்சர் வீட்டுப் பிள்ளைகளா படிக்கப் போகிறார்கள் என்று கல்வி அமைச்சு அமைதியாக இருந்திருக்கலாம்!
ஆனால் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? கடந்த இருபது ஆண்டுகளாக இதே நிலை தான் என்கிறார் பள்ளியின் வாரியத் தலைவரான டத்தோ! கேட்பதற்கே சங்கடமாக இருக்கிறது! ஒரு டத்தோவுக்கே இவ்வளவு தான் மதிப்பு, மரியாதையா! அல்லது டத்தோவும் அரசியல் விளையாட்டு விளையாடுகிறாரா என்பதும் தெரியவில்லை!
புதிய அரசு அமைந்து இந்த ஏழு மாதத்தில் துணைக்கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கிறார். இன்னும் கல்வி அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதே சுறுசுறுப்பை முன்னாள் அரசாங்கத்தில் இருந்த 'நம்ம' துணைக்கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். இந்த இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு முறை என்றாலும் இருபது முறை சந்தித்திருக்கலாம். அடியாத மாடுகளைப் படிய வைக்க வேறு வழிகள் தான் என்ன?
எது எப்படி இருப்பினும் நாம் சொல்ல வருவது ஒன்று தான். பள்ளி நிர்வாகத்தினருக்குத் தாங்கள் பணிபுரியும் பள்ளியின் மீது எந்த வித அக்கறையும் இல்லை என்பது மட்டும் உண்மை! ஆமாம், டத்தோ, டத்தோஸ்ரீ வீட்டுப் பிள்ளைகளா படிக்கப் போகிறார்கள்! தோட்டப்புறத்தானுக்கு இதுவே போதும் என்று கல்வி அமைச்சு நினைக்கிறது!
என்னைக் கேட்டால் பல பிரச்சனைகள் பள்ளி நிர்வாகத் தரப்பினரிடமிருந்தே வருகிறது என்பேன். நான் பார்த்தவரை அப்படித்தான்.
வெறு வழியில்லை. இவர்களோடு தான் நாம் வாழ வேண்டும். கொள்கலனாக இருந்தால் என்ன, மாட்டுக் கொட்டையாக இருந்தால் என்ன அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்காத வரை எதுவாக இருந்தாலும் அவர்களுக்குச் சம்மதமே!
கொள்கலனுக்கு வெகு விரைவில் கொள்ளி வைக்கும் நாள் வரும் என நம்புவோம்!

Wednesday, 2 January 2019
சீனர்கள் மட்டுமே..!
பீனாங்கு மாநிலம் சீனர்கள் மயமாகி விடுமா, வேறு இனத்தவர் அங்கு அனுமதிக்கப்படுவதில்லையா என்கிற ஒரு சந்தேகத்தை சமீபகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!
ஆமாம், சிங்கப்பூரைப் போன்று, ஹாங்காங்கைப் போன்று பினாங்கும் சீனர்கள் நகரம் என்கிற ஓர் அடையாளத்தை மிகவும் சாதுரியமாக நடைமுறைப் படுத்துகிறதோ என்கிற ஐயம் நமக்கு உண்டு. சீனர்கள் நினைத்தால் சத்தம் இல்லாமல் எதனையும் செய்வார்கள் என்பது நம்முடைய அனுபவம்.
இளைஞர் ஒருவருக்கு பினாங்கில் தங்கி வேலை செய்வதற்கு ஓர் வீடு - ஓர் அறை - தேவைப்படுகிறது. அறைகள் வாடகைக்கு விடுவதற்கு அறைகள் இருக்கின்றன. வீட்டு உரிமையாளர்கள் தயார். ஆனால் ஒரு நிபந்தனை. வாடகை எடுப்பவர் சீனராக இருக்க வேண்டும்.
இளைஞர் ஒருவர் வாடகைக்காக அறை உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறார். சுமார் பத்து பேரிடம் பேசியிருக்கிறார். முதலில் அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் வேண்டாம் எனத் தவிர்த்து விட்டார்கள்! காரணம் தொடர்பு கொண்டவர் நன்கு சீன மொழி பேசுபவர். அவரது தந்தை சீன வம்சாவளி. அவரது தாயார் இந்தியர். அதாவது அவர்கள் சிந்தியர்கள்! ஆனால் அவர்கள் அனைவரும் அவரைச் சீனராக ஏற்றுக்கொள்ளவில்லை! மலேசியர்களாகவும் ஏற்றுக் கொள்ளவில்லை! கலப்பு இனம் தேவை இல்லை. தேவை கலப்பற்ற சீன சமூகம்!
அந்த இளைஞரின் சீன மொழி ஆற்றலால் தான் அந்த முதலாளிகள் அனைவரும் அவரைச் சீனராக நினத்தனர். அனைத்தும் தொலைப்பேசி உரையாடல்கள். கூடுதலாக ஒரு செய்தி. அந்த இளைஞர் தமிழிலும் பேசுவதில் ஆற்றல் உள்ளவர். அதே போல அவர் தந்தையும் தமிழில் பேசும் ஆற்றல் உள்ளவராம்!
ஆக, பிரச்சனை என்பது சீனரோ, இந்தியரோ, சிந்தியரோ அல்ல - நாம் மலேசியர் என்கிற உணர்வு நமக்குத் தேவை. அப்படியெல்லாம் நம்மை யாராலும் பிரித்து விட முடியாது! ஆனால் சீனர்களின் இந்த "சீனர் மட்டும்" என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது. எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதனை அவர்கள் மீறுவார்கள்! அவர்கள் மீறுகிறார்கள் என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்பது தான் உண்மை!
எப்படியோ இப்போது அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனை வந்திருக்கிறது. ஏதாவது நடக்கும் என எதிர்பார்க்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். அரசாங்கமே அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் என நம்பலாம்! சீனர்கள் தானே அரசாங்கம்!
பொறுத்திருப்போம்! பொறுமை காப்போம்!

Tuesday, 1 January 2019
புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த வலைத்தளத்தை வலம் வரும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்!
புதிய ஆண்டு. இன்னும் ஒரு 365 நாள்கள். எல்லாம் புத்தம் புதிது. ஆமாம், நாம் எப்படி நம் கண் முன்னே உள்ள இந்தப் புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோம்? நேற்று நாம் வரவேற்றோம்! அதனால் பயனில்லை. அது ஒரு நாள் கூத்து! மீதமுள்ள நாள்களை எப்படி நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பது தான் கேள்வி. இந்த நாள்களையும் வெறும் கூத்தடித்து, கும்மாளமடித்து கொண்டாட வேண்டுமா?
எதைச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் அந்தப் கூத்தடிப்பு உங்களை முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்களது முன்னேற்றத்திற்குத் துணையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் உங்களது முன்னேற்றத்தை நோக்கி செலுத்த வேண்டும். இந்த ஆண்டு அதனை வலுவாகப்பிடித்துக் கொள்ளுங்கள்.
பிறருக்கு முடிந்தால் உதவி செய்யுங்கள். பணம் கொடுத்தால் தான் உதவி என்று நினைக்க வேண்டாம். பணம் இல்லாமலே பல உதவிகள் இந்தச் சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது. SPM படித்த மாணவர்களுக்கு நிறையவே வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. நல்ல புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றிருந்தால் கல்லூரிகளுக்குச் செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். தேர்ச்சி பெறாத மாணவர்களாக இருந்தால் தொழிற்கல்வி பயில வழிகாட்டுங்கள். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
நமது பெற்றோர்களுக்கு ஒரு பழக்கம். தோல்வி என்றால் "வேலைக்குப் போ!" என விரட்டுகின்றனர். அவர்களுக்கு ஏற்றாற் போல சில நிறுவனங்களின் ஏஜெண்டுகள் கொஞ்சம் சில்லறைகளுக்காக இந்த மாணவர்களைக் கொத்திச் செல்ல தயராக இருக்கின்றனர்! நம்மைக் கெடுக்க நம்மவனே போதும், வேறு யாரும் வேண்டாம்!
இந்த புத்தாண்டில் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு மாணவனுக்காகவாவது உதவ வேண்டும். ஒவ்வொரும் ஒரு மாணவன் என்றால் இந்த சமுதாயம் உயர்ந்து விடும்.
ஒன்று சேர்ந்து கைகோத்து இந்த சமுதாயத்தை உயர்த்துவோம்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Subscribe to:
Posts (Atom)