சில நேரங்களில் நாம் செய்கின்ற தவறுகள் எப்படியெல்லாம் நம்மைப் பாதிக்கிறது என்பதை நாம் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதுவும் படித்தவன் செய்தால்? அதான் பாரதியார் சொல்லிவிட்டாரே: படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான் ஐயோ என்று போவான்! அது போதும்! பாரதியார சொன்னதே போதும்!
சமீபத்தில் அனைத்துலக இந்திய கடப்பிதழைப் புதிப்பிக்க வேண்டிய கட்டாயம். இந்திய தூதரகம் தேவை இல்லை. அவர்களின் முகவர் மட்டுமே.
பொதுவாக இவர்களிடமிருந்து எந்த விஷயத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிவதில்லை! தொலைப்பேசி இருக்கிறது! ஆனால் இல்லை! அவர்கள் அதனைப் பயன்படுத்துவதில்லை! அப்படியே தப்பித்தவறி கிடைத்தாலும் ஒரு முழுமையான எந்தத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற முடிவதில்லை! அது தான் உண்மை.
இணயத்தளத்தில் தேடி அந்த பாரங்களை எடுத்து எழுதலாம் என்றாலும் அங்கும் சரியானத் தகவல்கள் கிடைப்பதில்லை! ஒன்று கிடைக்கும், ஒன்று கிடைக்காது! எதிலும் முழுமையான தகவல்கள் இல்லை! சரி, இணயத்தில் அது இல்லை, இது இல்லை என்றால் அவர்களோ அது இருக்கும் என்பார்கள்!
கடைசியாக எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அங்கேயே போய் தெரிந்து கொள்ளலாம் என்று அங்கேயே விபரங்களைக் கேட்டோம். பிரச்சனை ஒன்றும் இல்லை. அனைத்துக்கும் பணம் தான் மூலம்! அவர்களே செய்து கொடுத்து பணம் வாங்குவது தான் அவர்களின் நோக்கம்!
கடப்பிதழின் புகைப்படம் எப்படி இருக்கும்? நாம் மற்றைய நாடுகளைப் போலத்தான் என்று நினைத்தால் அது தவறு. பாரத்தில் ஓர் அளவு கொடுத்திருப்பார்கள், நமக்கே விபரீதமாக இருக்கும்! அப்படி ஓர் அளவைக் கொடுத்தவர்கள் ஏன் புகைப்பட மாதிரி ஒன்றை அந்த பாரத்திலேயே கொடுக்கக் கூடாது? ஆக, நம் இங்கு எடுக்கும் புகைப்படம் அங்கே செல்லாது! அவர்கள் தான் எடுப்பார்களாம். அதற்கு நாம் ரி.ம. 25.00 வெள்ளிக்கொடுக்க வேண்டுமாம்!
எல்லாமே ஏமாற்று வேலை. விசா எடுப்பதற்கு ரி.ம. 350.00 என்கிறார்கள். அது கடைசியில் ரி.ம. 400.00 வெள்ளிக்கு மேல் போய் முடிகிறது.
நம்முடைய வருத்தம் எல்லாம் ஏன் இப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தான். இணையத்தளத்தில் சரியான தகவல்களைக் கொடுத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கு எதுவுமே முழுமையாக இல்லை. எல்லாம் அரைகுறை! மக்களிடமிருந்து பணம் பறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் அவர்கள் இயங்குகிறார்கள்.
ஒரு மாபெரும் நாட்டின் முகவராக இருக்கும் ஒர் அலுவலகம் இப்படி பித்தாலட்டத் தனமாக நடந்து கொள்ளுவது நமக்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது! அதுவும் படித்தவன் தான் நடத்துகிறான். பொருளாதார ரீதியில் எந்த நஷ்டமும் ஏற்பட வாய்ப்பில்லை. அவனுக்கு நல்ல இலாபம் இருந்தும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? புரியவில்லை!
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று சொன்னாரே பாரதி அதே குரலில் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்...என்று சொன்னதும் நம்மால் மறக்க முடியவில்லை!
போவான்! போவான்! போவான்! ஐயோ என்று போவான்!
No comments:
Post a Comment