Wednesday 30 January 2019

கேமரன்மலையில் இலஞ்சமே வெற்றிபெற்றது..!

கேமரன்மலையில் இலஞ்சமே வெற்றி பெற்றது என்று நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்.

மலாய் வாக்காளர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு வகையில் இலஞ்சத்தைப் பெறுகின்றனர். மற்ற இடங்களில் என்ன நடந்ததோ அதையே தான் அங்கும் அம்னோ அரசியல்வாதிகள் தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். இலஞ்சம் கொடுப்பது அவர்களுக்குப் புதிதல்ல. இந்திய வாக்காளர்களுக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணைய் என்று தமிழ் நாட்டு பாணியில் கொடுத்தது பலருக்குத் தெரியும். ஆனால் மலாய் வாக்காளர்களுக்கு அது பணமாக கொடுப்பது வழக்கமான ஒன்று தான்.

இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம்.  தேர்தல்  ஆணையம் இப்போது புதிய பொலிவுடன், புதிய மாற்றத்துடன் அவர்களுக்குத் தேவையான அதிகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை தான். இதற்கு முன்னர் நடந்த  இடைத் தேர்தல்களில் அவர்களும் முடிந்தவரை ஊழற்ற தேர்தல்களாக நடத்தி முடித்திருக்கின்றனர். ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். தவறுகளை அவர்கள் நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றனர். போகப் போக அது சரியாக்கப்படும் என நம்பலாம்.

ஆனால் ஒன்றை நாம்  கவனிக்க வேண்டும். இதற்கு முன்னர் நடந்த தேர்தல்கள் அனைத்தும் ஆளும் அரசாங்கத்தின் இடைத் தேர்தல்கள்.  ஆளும் கட்சியான பக்காத்தான் இலஞ்சம் இல்லா தேர்தல்  என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறது. அதனால் அவர்கள் இலஞ்சம் என்று எதனையும் கொடுக்கப் போவதில்லை. ஆனால் பாரிசான் அரசியல்வாதிகள் அப்படி எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.

கேமரன்மலை தேர்தல் என்பது  எதிர்கட்சியான பாரிசான் அரசாங்கத்தின் - பகாங் மாநிலத்தில் -  நடைப்பெற்ற முதல் இடைத் தேர்தல். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் நடைப்பெற்ற ஒரு தேர்தல். அதில் எந்த வில்லங்கமுமில்லை. வெளிப்படையாக எந்த பண பரிவர்த்தனையும் நடைப்பெறும் சாத்தியமுமில்லை.

ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் ...?  ஆளுக்கு எவ்வளவு கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிக்க வாய்ப்புண்டு.  மாநிலம் அவர்கள் கையில். எதுவும் செய்யலாம். எதுவும் நடக்கலாம். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. மத்திய அரசாங்கத்திடம் ஏகப்பட்ட கடனை அவர்கள் வைத்திருக்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.  அவர்களின் குரு, நஜிப் எந்தக் கவலையுமின்றி நாட்டையே சீனாவுக்கு அடகு வைத்தவர்!  அதனால் எப்பாடு பட்டாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்! ஆக, அவர்கள் எதனையும் செய்ய வாய்ப்புண்டு. செய்தார்கள் என்பது எனது கணிப்பு!

மலையில் இலஞ்சமே மலையேறியது!

No comments:

Post a Comment