Wednesday 2 January 2019

சீனர்கள் மட்டுமே..!

பீனாங்கு  மாநிலம்  சீனர்கள்  மயமாகி விடுமா, வேறு இனத்தவர் அங்கு அனுமதிக்கப்படுவதில்லையா என்கிற ஒரு சந்தேகத்தை சமீபகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!

ஆமாம், சிங்கப்பூரைப் போன்று, ஹாங்காங்கைப் போன்று பினாங்கும் சீனர்கள் நகரம் என்கிற ஓர் அடையாளத்தை மிகவும் சாதுரியமாக நடைமுறைப் படுத்துகிறதோ என்கிற ஐயம் நமக்கு உண்டு. சீனர்கள் நினைத்தால் சத்தம் இல்லாமல் எதனையும் செய்வார்கள் என்பது நம்முடைய அனுபவம்.

இளைஞர் ஒருவருக்கு பினாங்கில் தங்கி வேலை செய்வதற்கு ஓர் வீடு - ஓர் அறை - தேவைப்படுகிறது. அறைகள் வாடகைக்கு விடுவதற்கு அறைகள் இருக்கின்றன.  வீட்டு உரிமையாளர்கள் தயார்.  ஆனால்  ஒரு நிபந்தனை.  வாடகை  எடுப்பவர்  சீனராக  இருக்க வேண்டும்.

இளைஞர் ஒருவர் வாடகைக்காக அறை உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறார். சுமார் பத்து பேரிடம் பேசியிருக்கிறார். முதலில் அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் வேண்டாம் எனத் தவிர்த்து விட்டார்கள்!  காரணம் தொடர்பு கொண்டவர் நன்கு சீன மொழி பேசுபவர். அவரது தந்தை சீன வம்சாவளி. அவரது தாயார் இந்தியர். அதாவது அவர்கள்  சிந்தியர்கள்!  ஆனால் அவர்கள் அனைவரும் அவரைச் சீனராக ஏற்றுக்கொள்ளவில்லை!  மலேசியர்களாகவும் ஏற்றுக் கொள்ளவில்லை! கலப்பு இனம் தேவை இல்லை. தேவை கலப்பற்ற சீன சமூகம்!

அந்த இளைஞரின் சீன மொழி ஆற்றலால் தான் அந்த முதலாளிகள் அனைவரும் அவரைச் சீனராக நினத்தனர். அனைத்தும்  தொலைப்பேசி உரையாடல்கள்.  கூடுதலாக ஒரு செய்தி. அந்த இளைஞர் தமிழிலும் பேசுவதில் ஆற்றல் உள்ளவர். அதே போல அவர் தந்தையும் தமிழில் பேசும் ஆற்றல் உள்ளவராம்! 

ஆக, பிரச்சனை என்பது சீனரோ, இந்தியரோ,  சிந்தியரோ அல்ல - நாம் மலேசியர் என்கிற உணர்வு நமக்குத் தேவை. அப்படியெல்லாம் நம்மை யாராலும் பிரித்து விட முடியாது! ஆனால் சீனர்களின் இந்த "சீனர் மட்டும்" என்பது கொஞ்சம்  யோசிக்க வேண்டியுள்ளது.  எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதனை அவர்கள் மீறுவார்கள்! அவர்கள் மீறுகிறார்கள் என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்பது தான் உண்மை!

எப்படியோ இப்போது அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனை வந்திருக்கிறது.  ஏதாவது நடக்கும் என எதிர்பார்க்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். அரசாங்கமே அவர்களுக்கு ஆதரவாக  நடந்து கொள்ளும் என நம்பலாம்! சீனர்கள் தானே அரசாங்கம்!

பொறுத்திருப்போம்! பொறுமை காப்போம்!

No comments:

Post a Comment