Wednesday 9 January 2019

ஏன் இந்த கருத்துக் கணிப்புகள்..?

நம்மைச் சுற்றி  ஏதோ ஒரு சில கருத்துக் கணிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன; தொடர்ந்து கொண்டு தான் இருக்க்ன்றன.

கருத்துக் கணிப்புகள் நாட்டு நலனுக்காக, சமுதாய நலனுக்காக. மக்களின் நல்வாழ்வுக்காக, தங்களை மாற்றிக் கொள்ளுவதற்காக, இரூந்தால் அனைவருக்கும் நலம் பயக்கும். 

ஆனால் குறுகிய மனப்பான்மையோடு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை.  ஆனால் மக்களிடையே  பிளவை  ஏற்படுத்துவதும், பல சமயத்தினரிடையே சங்கடங்களை ஏற்படுத்துவதும் பொறுப்பற்ற தனம் என்று தான் சொல்ல வேண்டும். 

கருத்து கணிப்புகள் நல்லதை நோக்கியே செல்ல வேண்டும்.   சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன்.

 கருத்துக் கணிப்பு மையம் ஒன்று மலாய்க்காரர்களிடையே ஒரு  கணிப்பைச் செய்திருந்தது. அந்தக் கருத்துக் கணிப்பில் மூன்று ஆளுமைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். நிதியமைச்சர் லிம் குவான் எங்,  சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ்  கடைசியாக தலைமை நீதிபதி ரிச்ச்ர்ட் மலாஞ்சும்.

இந்த மூன்று ஆளுமைகளைப் பற்றி  மலாய்க்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் அந்தக் கருத்துக் கணிப்பு.  நிதியமைச்சரைப் பற்றியான கணிப்பு  "ஏதோ ஏற்றுக் கொள்ளுகிறோம் பரவாயில்லை!" என்பது தான் அது. "அவர் மலாய்க்காரர் இல்லை என்றாலும் ஏற்றுக் கொள்ளுகிறோம் அரை மனதோடு!" என்றார்கள்.

ஆனால் டோமி தோமஸ் , மலாஞ்சும் நிலைமை வேறு. அவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பிரச்சனை என்பது அவர்களின் சட்ட அறிவைப் பற்றியது அல்ல.  பிரச்சனையே அவர்களின் சமயம் பற்றியது. முதலில் அவர்கள் கிறிஸ்துவர்கள். அடுத்து அவர்கள் சட்ட நிபுணர்கள். இவர்கள் எப்படி  இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இயங்குவார்கள் என்கிற ஒரு சந்தேகம் அவர்களுக்கு! இவர்களோ சட்டம் என்ன சொல்லுகிறது என்று தான் பார்ப்பார்களே தவிர குறிப்பிட்ட சமயம் என்ன சொல்லுகிறது என்று பார்க்கமாட்டார்கள்! ஒரு தலை சார்பு என்ப்தெல்லாம் இவர்களிடம் இல்லை. முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் சமயத்தைச் சார்ந்தே தீர்ப்பளித்தார்கள். ஆனால் இவர்கள் சட்டத்தை அனுசரித்தே  தீர்ப்பளிப்பார்கள்.

இப்போது புரிந்திருக்கும் இந்த இரண்டு ஆளுமைகளும் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கான காரணம்.

எல்லா இனங்களிலும் நல்லவர்களை ஆதரிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இலஞ்சம், ஊழல் இல்லாதவர்கள் ஆதரிக்கத்தான் செய்வார்கள். மலாய்க்காரர்களிலும் ஆதரிப்பவர்கள் உண்டு.

நாம் சொல்ல வருவதெல்லாம் எது நல்லது எது கெட்டது என்று யோசியுங்கள். அது போதும்.  சமயத்தை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்பது தான்!

கருத்து கணிப்புகள் நன்மைக்கே!


 

No comments:

Post a Comment