Thursday 10 January 2019

கேமரன்மலை யாருக்கு...?

இன்னொரு இடைத் தேர்தல் வந்துவிட்டது.  இப்போது கேமரன்மலை. வெகு விரைவில் இன்னொரு சட்டமன்ற தேர்தல் வரும். ஆக இடைத் தேர்தல்களுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை என்றே தோன்றுகிறது!  

இடைத் தேர்தல்கள் பக்காத்தான் ஆட்சிக்கு தொடர் சோதனைகள்! சரி இப்போது நாம் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

ஆளுங்கட்சியான ஜ.செ.க. வின் சார்பில் நிற்கப் போகிறவர்  எம்.மனோகரன். சென்ற இரண்டு பொதுத் தேர்தலிலும் அதே கேமரன்மலை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப் போனவர்,  அன்றைய பரிசான் ஆட்சியில். இந்த முறை ஆளுங்கட்சியின் சார்பில் நிற்கிறார்  எதிர்க்கட்சியான பாரிசான் சார்பில் நிற்பவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியான ரம்லி முகமட் நூர்.  ரம்லி முகமட் நூர் பழங்குடி மக்களின் பெரும்பான்மையான செமாய் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்  ஓய்வு பெற்றவராக இருந்தாலும் அவருடைய மகனும் இப்போது காவல்துறையில் தனது பணியைத் தொடர்கிறார்.

வாக்களர்களை எடுத்துக் கொண்டால் சீனர்களும் இந்தியர்களும் 45 விழுக்காட்டினர். மலாய்க்காரர்களும் பழங்குடியினரும் 56 விழுக்காட்டினர்.  இதில் பழங்குடியினர் மட்டும் 22 விழுக்காட்டினர். இந்தத் தேர்தலில் பழங்குடியினர் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

பாஸ் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடாததால்  முஸ்லிம்களின் வாக்குகள் பாரிசானுக்கே என்று கணிக்கப்படுகிறது. அதாவது மலாய்க்காரர்களின் வாக்கும் பழங்குடியினரின் வாக்கும் பாரிசானுக்குத் தான் என்கிறார்கள்.

ஆனால் ஒன்று. திருடர்களுக்கு (பாரிசான்) வாக்களிப்பதை எல்லா முஸ்லிம்களும் விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.  நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அதே போல பழங்குடியினர் அனைவரும் முஸ்லிம்கள் என்று அடையாளமும் குத்த முடியாது.  அவர்களில் கிறிஸ்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இன்னொன்றையும் மறக்கலாகாது. பாரிசான் வேட்பாளர் பழங்குடியினர் என்பது உண்மை. தான்.ஆனால் இந்தப் பழங்குடியினர் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக  பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ரம்லி என்ன செய்திருக்கிறார்? அவர்களின் பிரச்சனையை அரசாங்கத்திடம் கொண்டு சென்றிருக்கிறாரா? அவர்களின் பல பிரச்சனைகள் தீரவில்லையே.

இன்றைய நிலை என்ன? கடந்த கால அரசாங்கம் அவர்களின் பிரச்சனைகள் எதனையும் தீர்க்கவில்லை. இன்றைய அரசாங்கத்திடம் அவர்கள் பகைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. பழங்குடியினரும் புதிய அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என நம்பலாம்.

அதனால் வெற்றி பக்கத்தானுக்கே!

No comments:

Post a Comment