நமது அரசாங்கத்தைப் பாராட்டுவோம். உணவகங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்தது மிகவும் பாராட்டத் தக்க ஒரு விஷயம்.
எப்போதோ செய்திருக்க வேண்டிய ஒர் செயலை இப்போதாவது செய்திருக்கிறார்களே என மன நிறைவடைவோம். சில எதிர்ப்புக்கள் ], வெறுப்புக்கள் நமக்கு வெளிப்படையாகவே தெரிகின்றன! ஆரம்பம் அப்படித்தான் இருக்கும். போகப் போக சரியாகி விடும்.
ந்ல்ல காரியமோ கெட்ட காரியமோ அதுவும் நல்ல காரியமாக இருந்தாலும் அதனை எதிர்க்க நாலு பேர் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். சிலருக்கு எதிர்ப்பதே பொழுது போக்காக ஏற்படுத்திக் கொண்டார்கள்!
சிங்கப்பூரைப் பற்றி பெருமையாக ஏன் பேசுகிறார்கள்? அவர்கள் உருவாக்கிய சட்டங்கள் தானே! அதுவும் கடுமையான சட்டங்கள்! நமது நாட்டில் அந்த அளவுக்குக் கடுமையாக இல்லை என்பது தான் நமக்குள்ள பிரச்சனை! அப்போதே கடுமையான சட்டங்களை இயற்றி மக்களை மகிழ்ச்சி படுத்தியிருக்கலாம்.
நான் வழக்கமாக போகும் ஒரு 'மாமக்' உணவகத்திற்கு நேற்றுப் போயிருந்தேன். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த உணவகம் அமைதியாக இருந்தது. மாமா அமைதியாகச் சொன்னார்: புகைபிடிக்கக் கூடாதென்பதனால் கூட்டம் குறைந்து விட்டது! அதனாலென்ன கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருப்பார்கள், பிறகு வழக்கத்திற்குத் திரும்பிவிடும் என்றேன்.
ஒரு சில இடங்களில் கொஞ்சம் பிரச்சனை தான். தங்களது திமிரைக் காட்டிவிட்டுப் போவார்கள்!
பொது நன்மையைக் கருதி சில சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. உணவகங்களில் அது மிகத் தேவையான ஒன்று. படித்தவனோ, படிக்காதவனோ பொது நலம் என்றால் என்னவென்று கேட்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். யாரும் பொதுநலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. கொஞ்சமாவது மற்றவர்களின் நலனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
பொது இடங்களில் எச்சில் துப்புவது, சளி சிந்துவது, மற்றவர்களின் முன்னிலையில் மூக்கை நோண்டுவது சே! எல்லா அசிங்கங்களையும் நம் கண் முன்னே செய்யும் போது நமக்குப் பொறுமை இழந்து விடுகிறது! அதுவும் அவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும்'கூலாக' செய்துவிட்டுப் போகிறான்!
நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகிறேன் இன்னும் சட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த சுயநலவாதிகளுக்குச் சரியான தண்டனையைக் கொடுக்க வேண்டும்!
பொது நலம் என்பது அனைவருக்கும் தான்! அனைவரின் நலனுக்கும் தான்! அதனைக் கடைப்பிடிப்போம்!
No comments:
Post a Comment