Saturday 26 January 2019

எதிர்பார்த்தது தான்..!

கேமரன்மலையில் பாரிசானின் வெற்றி எதிர்பார்த்தது  தான். வெற்றி பெற்ற ரம்லிக்கு நமது வாழ்த்துகள்.

பகாங்  மாநிலம்  பாரிசானின் கோட்டை என்பது நாம்  அறிந்தது தான். நஜிப் என்ன தான் பெரிய கில்லாடியாக இருந்தாலும் அங்குள்ள மலாய்க்கரர்கள் அவர் மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது. காரணம் நஜிப்பின் தந்தை  மாநிலத்தின் மந்திரி பெசார் ஆகவும்  இரண்டாவது  பிரதமராகவும்  இருந்தவர். அது போல நஜிப் பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்து பின்னர் நாட்டின் ஆறாவது பிரதமராக வந்தவர். தந்தையும் மகனும் மாநிலத்தின் மந்திரி பெசார்களாகவும்   நாட்டின்  பிரதமர்களாகவும்  இருந்தவர்களில் வேறு யாரும் இல்லை!  அதனால்  பகாங் மாநில மக்களிடையே  தந்தையும் மகனும் மிகவும் ஆழமாக மனதிலே பதிந்துவிட்டவர்கள்.  அவர்கள் செய்கின்ற மெகா மகாத்  தவறுகளைக் கூட  மன்னிக்கின்ற மனப்பக்குவம் மக்களுக்கு  இருக்கின்றது!   இந்த வெற்றியை அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

வேறு ஒரு கோணத்திலும் நாம் இந்த வெற்றியைப் பார்க்க வேண்டும். பகாங் மாநிலம் பாரிசான் ஆட்சியில் இருக்கின்ற ஒரு மாநிலம்.  கேமரன்மலையும் விதி விலக்கல்ல.  மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் இங்கு நடைமுறைப் படுத்தப்படவில்லை. பூர்வீகக்குடியினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் முன்னேற எந்தவிதத் திட்டங்களும் இல்லை. ஆனாலும் எல்லாக் காலங்களிலும், குறிப்பாக தேர்தல் காலங்களில் பூர்விகக் குடியினருக்குக்  கையூட்டுகள் கொடுத்து இது நாள் வரை பாரிசான் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்திருக்கின்றனர்.  அது போல அம்னோவும் கையூட்டுகள்  இல்லாமல் எந்தத் தேர்தலையும் சந்தித்ததில்லை. பொதுவாக மாநில வெற்றி என்பதே அம்னோவின் 'தாராளமயக்' கொள்கை தான்! அப்படித்தான் அவர்கள் தேர்தலோ,  இல்லையோ  வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள்!

இப்போதும் கூட தேர்தலுக்குப் பின்னர் பணம் பட்டுவாடா - கையூட்டு - செய்யப்படலாம்.!  அதற்கான முன்னேற்பாடுகள் மாநில அரசாங்கம் செய்திருக்கும்! இதனையெல்லாம் அவர்கள் செய்யக் கூடியவர்கள் தானே! ஐயப்பட என்ன இருக்கிறது?

கையூட்டுகள் கொடுத்தே மக்களைக் கெடுத்த அரசியல் கட்சிகள் தாங்கள் எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதனையும் செய்வார்கள்! இப்போதும் அது தான் நடந்திருக்கிறது!

பாரிசானின் எதிர்பார்த்த வெற்றி தான்!~

No comments:

Post a Comment