Saturday, 12 January 2019
வீழ்ந்தார் கேவீயஸ்....!
கேமரன்மலையில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் கேவியஸ்! ! காரணம் தான் தொடர்ந்து கடந்த நான்காண்டுகளாக அங்கு மக்களிடையே சேவையாற்றி நல்ல பெயரோடு இருக்கிறேன் என்கிறார்! என்னோடு சமாதானமாகப் போங்கள் நான் வெற்றிபெற்று காட்டுகிறேன் என்றார்.
அவர் பேச்சு எடுபடவில்லை. சென்ற பொதுத் தேர்தலிலும் அதேயே தான் சொன்னார். அப்போதும் எடுபடவில்லை. அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்? பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார்.!
நான் டாக்டர் மகாதிர், அன்வார் இப்ரகிம் அவர்களின் ஆதரவாளன் என்பதாக ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்! அதனாலென்ன? போடட்டும்! இவர் சொல்லுவதை யார் நம்புவார் என்பது தான் கேள்வி. இவர் பக்கத்தான் மேடைகளில் பேசுவதை மக்கள் விரும்பமாட்டார்கள் அதனால் பக்காத்தான் கூட்டணி இவரை மேடை ஏறாமல் பார்த்துக் கொண்டால் பக்கத்தானுக்கு நல்லது.
இனி இவரின் நிலை என்ன? பாரிசான் பக்கம் திரும்புவார் என நம்பிக்கை இல்லை! கட்சியை மற்றவர்களிடம் விட்டுச் செல்வாரா என்பதும் தெரியவில்லை. காரணம் அவருக்குக் கட்சி வேண்டும். தலைவர் பதவி வேண்டும். கட்சியை அப்படியே பக்கத்தான் பக்கம் திருப்பி விடுவாரா என்பதும் தெரியவில்லை!
இவரைப் போன்ற மனிதர்களைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்? இவர் என்ன இனப் பற்றாளரா? மொழிப் பற்றாளரா? இவரால் நமது தமிழினத்திற்கு என்ன இலாபம்? இந்தியர்களுக்கு என்ன இலாபம்? அல்லது மொத்த மலேசிய இனத்திற்கு என்ன இலாபம்? ஒன்றுமே இல்லை! சுயநலத்தின் மொத்த உருவம்!
இவர் தலைவராக இருக்க வேண்டுமென்றால் யார் இவரை ஆதரிப்பார், இந்தியர்களைத் தவிர! அல்லது பணத்தைக் கொடுத்து சிலரை வாங்கலாம். அப்படித்தான் வாங்கி வைத்திருந்தார்! அதுவும் இப்போது கைவிட்டுப் போய் விட்டது!
இப்போதே ஒன்றைக் கணிக்கலாம். இனி அரசியலில் இவருக்கு அந்திம காலம்! இவரை இந்திய சமூகம் எப்போதோ புறக்கணித்து விட்டது. சீனர்களோ, மலாய்க்காரர்களோ இவரை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டார்கள்! இந்தியர்களில் ஏதோ சில சில்லறைகள் இருக்கலாம்! மற்றபடி அரசியலில் இனி இவர் தலை தூக்க முடியாது.
"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது!" என்னும் கண்ணதாசனின் வரிகள் உண்மையிலும் உண்மை!
இனி எழ வழியுமில்லை! தேவையுமில்லை! வீழ்ந்தது வீழ்ந்தது தான்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment