இனியும் மெட்ரிகுலஷன் கல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
அதில் நம் மாணவர்கள் பெரிய வெற்றியைப் பெற வில்லை என்றாலும் ஏற்கனவே உள்ளதைக் கொடுத்தார்களே என்பதோடு திருப்தி அடைய வேண்டியது தான். பக்காத்தான் அரசாங்கம் பெரிதாக எதனையும் தூக்கிக் கொடுத்து விடவில்லை! அதனையும் பல போராட்டங்களுக்குப் பிறகே முந்தைய அரசாங்கம் எத்தனை இடங்கள் கொடுத்ததோ அதையே இத்தனை பொராட்டங்களுக்குப் பிறகு கொடுத்திருக்கிறார்கள்! அவ்வளவு தான்! இதில் வெற்றி என்று சொல்லும் போது அது மலாய் மாணவர்களுக்குத் தான் போய் சேரும்! வாழ்த்துகள்!
அந்த மெட்ரிகுலேஷன் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் இனி அது பற்றி பேச வேண்டாம். அடுத்த ஆண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பது அடுத்த ஆண்டு தான் தெரியும். போராட்டமா அல்லது தேரோட்டமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டியது பல்கலைக்கழகத்தில் நமது மாணவர்களின் நிலை என்ன என்பது தான். இன்றைய நிலையில் நமது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக எந்த அளவுக்கு செலவுகள் செய்கிறார்கள் என்பதை நமது பக்காத்தான் தலைவர்களுக்குத் தெரியாமல் இல்லை. காரணம் அவர்களும் அதனைக் கடந்து வந்தவர்கள் தான்.
இங்கும் பிரச்சனைகள் வெடிக்கும் முன்னே பிரதமர் துறை துணை அமைச்சர், பொன் வேதமூர்த்தி, தனது பணிகளைச் சரியாக செய்ய வேண்டும் என்பது தான் நாம் இப்போது வைக்கும் கோரிக்கை. எல்லாம் முடிந்த பின்னர் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று சொல்லுவதெல்லாம் தேவையற்ற ஒன்று. அப்படியெல்லாம் ந்மது மாணவர்களுக்கு விசேட அழைப்புகள் எல்லாம் வேண்டாம்!
இன்றும் நமது பெற்றோர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளையும், தங்களது சொத்துப்பத்துக்களையும் விற்றும் தான் தனியார் பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். காரணம் தங்கள் பிள்ளைகளுக்குப் பட்டப்படிப்பு தேவை என்கிற ஒரே காரணம் தான். அதற்காக அவர்கள் படுகின்ற பாடு சொல்ல வார்த்தைகல் இல்லை.
தனியார் பல்கலைக்கழகங்கள் என்றாலே அவர்களின் இலக்கே சீன இனத்தவர்கள் தான். அவர்களின் பொருளாதார வளர்ச்சியோடு இந்தியர்களை ஒப்பிடுவது என்றென்றும் அது அரசியலே தவிர வேறு காரணங்கள் இல்லை!
நாம் கேட்டுக் கொள்ளுவது எல்லாம் நமது பக்காத்தான் இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்திய மாணவர்களுக்கான அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நமது ஒதுக்கிடுகள் என்ன, எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இனி மேலும் மெட்ரிகுலேஷன் போல கசமுச வேண்டாம்!
அடுத்தது என்ன> ஆமாம் பல்கலைக்கழகம் நோக்கி....! வேறு என்ன!
No comments:
Post a Comment