அந்நிய நாட்டவரால் இன்று நாட்டில் பல பிரச்சனைகள் என்பது நமக்குப் புரிகிறது.
முந்தைய அரசாங்கம் அந்நிய நாட்டவரை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி நாட்டிற்குள் அனுமதித்தது சரியா, தவறா என்று பேசுவதில் புண்ணியமில்லை! இவர்களை அனுமதித்ததின் மூலம் மலேசியர் பலர் பலன் அடைந்திருக்கிறார்கள். அவர்களை எதற்கு வர வைக்கிறோம் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்களை வைத்து பல அரசாங்க ஊழியர்கள் பணம் சம்பாதித்தார்கள்!
இப்போது நாடு முழுவதும் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் ஓங்கி நிற்கிறது. எல்லாத் துறைகளிலும் அவர்கள் புகுந்து விட்டார்கள். ம்லேசியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். முதலாளிகள் அவர்கள் மூலம் ஒரு பக்கம் கொள்ளையடிக்கிறார்கள். குறைவான ஊதியம். அவ்வளவு தான். அது ஒன்றே போதும் முதலாளிகள் வளம் பெற! வேறு பிக்கல், பிடுங்களில்லை! சோக்சோ, சேமநிதி சமாச்சாரம் என்று எதுவும் இல்லை! மருத்துவச் செலவு இல்லை, கொடுக்கப்போவதும் இல்லை!
அதுவுமில்லாமல் எது எதுவோ கொண்டு வந்து விற்கிறார்கள். நாட்டிற்குள் தாராளமாக நடமாடுகிறார்கள்! அவர்களைப் பார்த்து நாம் தான் பயப்பட வேண்டியுள்ளது! ஏதோ ரவுடி கும்பல்களைப் போல ஊர்வலம் வருகிறார்கள்!
இந்த அந்நிய நாட்டவர்களால் அதிகம் பாதிப்பை அடைபவர்கள் நமது இந்திய சமூகம் தான். நாம் செய்கின்ற சிறு சிறு தொழில்களையெல்லாம் அவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வியாபாரம் செய்வதற்கான உரிமம் அவர்களுக்குத் தாராளாமாகக் கிடைக்கிறது. இலஞ்சம் கொடுத்தால் உரிமம் என்ன ஊரையே எழுதிக் கொடுத்து விடும் அரசாங்க ஊழியர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்!
அரசாங்கம் இதனை எல்லாம் கண்டு கொள்கிறதா, இல்லையா என்றும் நமக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை. எல்லா வேலைகளிலும் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா வியாபாரங்களிலும் அவர்கள் இருக்கிறார்கள். உள்ளூர் பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்டதும் அவர்களுக்கு அடித்தது ராஜ வாழ்க்கை! நேற்று வந்தவன் நீல அடையாளக்க் கார்டுடன் ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறான் உள்ளூரில் பிறந்தவனுக்காக "நீல அடையாளக் கார்டு" கொடுங்கள் என்று நாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்!
அந்நிய நாட்டவர்களால் நமக்கு என்ன பிரச்சனை? அவர்கள் யார்? அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? எந்தத் துறையில் அவர்கள் இருக்க வேண்டும் என்கிற வரையறை ஒன்றும் இல்லை!
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வே இல்லையா? ஏன் இல்லை. அந்நியர்கள் சம்பந்தப்படக் கூடாத துறைகளில் அவர்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்குத் அறிவிக்க வேண்டும். அவர்களைத் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பபட வேண்டும்.
அரசாங்கம் கெடுபிடியாக இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனை தீர வழியில்லை! சிங்கப்பூர் தான் நமக்கு சரியான எடுத்துக்காட்டு!
No comments:
Post a Comment