ஏமாற்றுவது என்பது தான் தொழிலா?
தொழில் செய்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களா? உண்டு என்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம்.
ஏமாற்று வேலை என்பது இங்கும், அங்கும். எங்கும் வியாபித்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரத் துறையில் அது கொஞ்சம் அதிகம் என்பது உண்மை தான். ஆனால் எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரைக் குத்துவது சரியல்ல.
நம்முடைய அளவுகோள் என்பது சீனர்களை வைத்துத்தான். காரணம் ஏதோ ஒரு வகையில் அவர்கள் நம்மை அனுதினமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள!
இப்போது நமது வியாபாரிகளுக்குப் பல சிக்கல்கள் உண்டு. நாம் பொருள்களை வாங்குவது சீனர்களிடமிருந்து தான். சீனர்கள் தான் மொத்த வியாபாரிகளாக இருக்கின்றார்கள். பொதுவாக சீனர்கள், சீனர்களுக்கு மட்டும் தான் விலைகளைக் குறைத்துக் கொடுப்பார்கள். மற்ற இனத்தவருக்கு மிகவும் 'தாராளமாகப்' போட்டு அடிப்பார்கள்!
இதனால் தான் நமது கடைகளில் பொருள்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மக்களை ஏமாற்றுவது அல்ல. வேறு வழியில்லாததால் அவர்கள் விலையை ஏற்றி விடுகிறார்கள்!
ஆனாலும் இப்போது மாற்றங்கள் தெரிகின்றன. போட்டிகள், சாதாரண போட்டிகள் அல்ல, கடும் போட்டிகள், அதிகமாகி விட்டன. அதனால் யாரும் அவர்கள் விருப்பத்திற்கு விலைகளை ஏற்றிவிட முடியாது. ஏற்றினால் அவர்களின் தொழிலில் பாதிப்பு ஏற்படும். அதனால் நியாயமான விலையில் தான் மொத்த வியாபாரிகள் விற்கின்றனர். சில்லறை வியாபாரிகளும் நியாயமான விலையில் தான் தங்களது பொருள்களை விற்கின்றனர்.
அதனால் விலைகளில் ஏமாற்றுவது என்பது இப்போது குறைந்திருக்கின்றது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால் வேறு வகையான ஏமாற்று வேலைகள்? நாம் ஏமாளி என்றால் நம்மை ஏமாற்றுவது என்பது எப்போதும் நடக்கும் கதை தான்! அதுவும் இந்தியர் என்றால் ...சொல்லவே வேண்டாம்!
விலையில் ஏமாற்றுவது என்பதெல்லாம் இப்போது குறைந்து விட்டது. காரணம் நமக்குத் தெரியும். நம்மைச் சுற்றி ஏகப்பட்ட பெரும் பெரும் வியாபார நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவர்களோடு நாம் போட்டியிட வேண்டிய சூழல்.
அதனால் ஏமாற்று வேலை என்பதெல்லாம் இப்போது மிக மிகக் குறைவு. விரும்பினாலும் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது!
தொழிலில் ஏமாற்றுவது என்பது கட்டாயம் அல்ல!
No comments:
Post a Comment