இது இளைஞர்களின் காலம்...!
நமது இனம் நிறைய தவறுகளைச் செய்திருக்கின்றது. அதனை நினைத்தால் வயிறு எரியும்.
இப்போது பல தவறுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். தவறுகள் எல்லாம் நமது முன்னோர்கள் அறியாமல் செய்தது.
இப்போது நிலைமாறிவிட்டது. இப்போது படித்த இளைஞர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர்,
இப்போது அனைத்தும் இளைஞர்களின் கையில். எப்போதோ படித்த ஒரு சம்பவம் ஞாபத்திற்கு வருகிறது. இன்றைய தொழில் சாம்ராஜ்யங்கள் என்று சொன்னால் உலகளவில் அது பெரும்பாலும் யூதர்களின் கையில். இந்த யூத இளைஞர்கள் கல்லூரிகளில் படிக்கின்ற காலத்திலேயே தங்களது கல்வி முடிந்ததும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்து விடுவார்களாம்.
நமது இளைஞர்களுக்கும் இது போன்ற மனமாற்றம் தேவை என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. வேலை செய்து கொண்டு பெரிய முன்னேற்றத்தைக் காண நினைப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏதோ வாழ்க்கையை ஓட்டலாம்! அதனால் தான் இன்று பெண்களும் வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். கார் வேண்டும், சொந்த வீடு வேண்டும் என்கிற ஆசை நம் அனைவருக்கும் உண்டு. பிள்ளைகள் மேற்கல்வி பயில வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெற்றோரிடமும் உண்டு, கடைசியில் வீட்டை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய சூழல். தரமான கல்வி என்றால் பணத்திற்கு வரைமுறை இல்லை!
அதனால் தான் நமது இளைஞர்கள் படிக்கின்ற காலத்திலேயே 'தொழில் செய்ய வேண்டும்' என்கிற எண்ணத்தை மனத்தில் விதைக்க வேண்டும். எந்த துறையை விரும்புகிறோமோ அந்த துறை சம்பந்தமாக நிறைய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். படிக்க வேண்டும். ஈடுபாடு காட்ட வேண்டும்.
இளைஞர்களே! நமது சமுதாயத்தின் வருங்காலம் என்பது உங்களது கையில். இழந்துபோன அனைத்தையும் மீட்டு எடுக்க வேண்டும்.
பொருளாதார பலம் நம்மிடம் இல்லை என்பதற்காக எவன் எவனோ கண்ட நாய்களெல்லாம் நமது சமுதாயத்தைப் பற்றி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா! நம்மால் என்ன செய்ய முடிகிறது? ஒன்றும் செய்ய முடியவில்லை! ஒண்ட வந்த பிடாரி கூட நம்மைப் பார்த்து நையாண்டி பண்ணுகிறது!
இந்த நையாண்டி, நக்கல், நரகாசுரன் வேலை எல்லாம் ஓரு வலிமையான சமூகத்திடம் செல்லுபடியாகுமா? பொருள் இருந்தால் ஒழிய அந்த வலிமை எப்போதுமே வராது! கேலிக்கைக்குரிய மனிதர்களாகவே நமது இனம் அடையாளப்படுத்தப்படும்!
அதனால் பொங்கி எழுங்கள் இளைஞர்களே! பொருளாதாரத்தை மீட்டு எடுக்க இன்றே முயற்சியில் இறங்குவோம்!
பெருகுக நமது பொருளாதாரம்!
No comments:
Post a Comment